சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மறைமலை நகரில் தொழிலதிபர் குண்டு வீசி கொலை: போலீஸ் சுட்டதில் மர்ம கும்பலை சேர்ந்த வாலிபர் பலி

Added : ஏப் 25, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அருகே மறைமலைநகரில் தொழில் அதிபரை, மர்ம நபர்கள் குண்டு வீசி கொலை செய்தனர். தொழில் அதிபரின் பாதுகாப்புக்கு சென்ற போலீசார் சுட்டதில், மர்ம கும்பலை சேர்ந்த வாலிபர் ஒருவர் இறந்தார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரை சேர்ந்தவர் திருமாறன், 50; அ.தி.மு.க., பிரமுகர்; தொழில் அதிபர். இவருக்கு, மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். ரவுடிகளின் அச்சுறுத்தல் இவருக்கு
 மறைமலை நகரில் தொழிலதிபர் குண்டு வீசி கொலை: போலீஸ் சுட்டதில் மர்ம கும்பலை சேர்ந்த வாலிபர் பலி

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அருகே மறைமலைநகரில் தொழில் அதிபரை, மர்ம நபர்கள் குண்டு வீசி கொலை செய்தனர்.

தொழில் அதிபரின் பாதுகாப்புக்கு சென்ற போலீசார் சுட்டதில், மர்ம கும்பலை சேர்ந்த வாலிபர் ஒருவர் இறந்தார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரை சேர்ந்தவர் திருமாறன், 50; அ.தி.மு.க., பிரமுகர்; தொழில் அதிபர். இவருக்கு, மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். ரவுடிகளின் அச்சுறுத்தல் இவருக்கு இருந்ததால், அரசு அனுமதி பெற்று, துப்பாக்கி வைத்திருந்தார். தவிர, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் என்பதால், திருமாறன் தன் குடும்பத்தினருடன், அதே பகுதியில் உள்ள முத்துகுமாரசுவாமி கோவிலுக்கு, நேற்று மாலை சென்றார்; சாமி தரிசனம் முடித்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி கொண்டிருந்தார். அப்போது, கோவிலுக்கு வெளியே இருந்த மர்ம கும்பல், திருமாறன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, வெடி குண்டு வீசியது. குண்டு வெடித்ததில், பீதியடைந்த பொதுமக்கள், ஆங்காங்கே சிதறி ஓடினர்.

இந்த சம்பவத்தில், திருமாறன், அவரது மனைவி, இரு பிள்ளைகள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பலத்த காயம் அடைந்தனர். மேலும், பாதுகாப்புக்கு வந்த போலீசார் சுட்டதில், மர்ம கும்பலை சேர்ந்த, 25 வயது வாலிபர் இறந்தார்.மறைமலை நகர் போலீசார், அதே இடத்தில் இறந்து கிடந்த திருமாறன் சடலத்தை கைப்பற்றினர்; காயமடைந்த மற்றவர்களை, செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

தொடர்ந்து, செங்கல்பட்டு போலீஸ் எஸ்.பி., சுந்தரவதனம் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், சம்பவ இடத்திற்கு சென்று, தடயங்களை சேகரித்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தனியார் தொழிற்சாலைகளுக்கு, ஆட்களை அனுப்பி வைக்கும் தொழிலில், திருமாறன் ஈடுபட்டிருந்ததும், தொழில் போட்டி காரணமாக, ரவுடிகள் உட்பட பலரிடம் முன்விரோதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், சிங்கப்பெருமாள்கோவில் ரயில்வே கடவுபாதை அருகில், திருமாறன் சென்ற கார் மீது, குண்டு வீசி, அவரை கொலை செய்ய முயன்றனர். அப்போது அவர், மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.அந்த சம்பவத்தில் தொடர்பு உடையவர்கள் தான், தற்போது கொலை செய்தனரா அல்லது தொழில் போட்டி காரணமாக கொலை நடந்ததா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
26-ஏப்-202116:01:43 IST Report Abuse
INDIAN Kumar கடுமையான சட்டங்கள் மூலம் தான் குற்றம் குறையும்.
Rate this:
Cancel
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
25-ஏப்-202116:43:10 IST Report Abuse
பெரிய ராசு போலீசை சுத்தி புழு கலரு லைட் எரியுது
Rate this:
Cancel
Thomas - Al Khor,கத்தார்
25-ஏப்-202112:39:07 IST Report Abuse
Thomas இது கோவில் மற்றும் பிள்ளைகள் அருகே உள்ளனர் என்பது கூடவா தெரியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X