ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மறுத்தது தவறான முடிவு!

Updated : ஏப் 25, 2021 | Added : ஏப் 25, 2021 | கருத்துகள் (168) | |
Advertisement
நாடு முழுதும், ஆக்சிஜன் பற்றாக்குறையால், கொரோனா நோயாளிகள் இறப்பு அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்கு வாய்ப்பிருந்தும், துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மறுத்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு வாதம் செய்து பெரும் தவறிழைத்திருக்கிறது. அத்தியாவசிய தேவை கருதி, ஆக்சிஜன் உற்பத்திக்கு கோர்ட் அனுமதி தர முன் வந்தும், தமிழக அரசு ஏற்காதது தவறான முடிவு;
ஸ்டெர்லைட் ஆலை, திறப்பு மறுப்பு, தவறான முடிவு

நாடு முழுதும், ஆக்சிஜன் பற்றாக்குறையால், கொரோனா நோயாளிகள் இறப்பு அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்கு வாய்ப்பிருந்தும், துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மறுத்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு வாதம் செய்து பெரும் தவறிழைத்திருக்கிறது.

அத்தியாவசிய தேவை கருதி, ஆக்சிஜன் உற்பத்திக்கு கோர்ட் அனுமதி தர முன் வந்தும், தமிழக அரசு ஏற்காதது தவறான முடிவு; மனித உயிர்களோடு விளையாடக்கூடாது; தொற்று பரவல் மோசமானால், உயிர்பலி அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், தமிழக அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்.திசை திருப்பும் வேலைஸ்டெர்லைட் ஆலையை திரும்ப திறப்பது அல்ல; இப்போதுள்ள பிரச்னை. அப்படி சொல்வதே திசை திருப்பும் வேலை.மூடிக்கிடக்கும் ஒரு ஆலையை திறந்து, நாட்டு மக்களின் உயிரை காப்பாற்ற ஆக்சிஜன் தயாரிக்க, அரசு முன்வர போகிறதா, இல்லையா என்பது தான் கேள்வி.துாத்துக்குடியில், 13 உயிர்களை குடித்த விஷவாயு தொழிற்சாலை என, பட்டப்படிப்பு முடித்த, அரசியல் தலைவர்களே கேட்பது அப்பட்டமான அரசியல்; மலிவானதும் கூட. உயிர்களை குடித்தது விஷவாயு அல்ல. அந்த ஆலையில், வேலை செய்த ஒருவர் கூட அகாலமாக மரணம் அடையவில்லை என்பது தான் உண்மை.ஆலையை மூடவைக்க நடந்த போராட்டத்தில், வன்முறை வெடித்த போது,போலீஸ் சுட்டதில் உயிர் இழப்புகள் நேர்ந்தன. அது குறித்த விசாரணை நடப்பதால், உள்ளே செல்ல தேவையில்லை.


நெருக்கடிஇன்றைய அவசியத்துக்கு வருவோம். கொரோனா தொற்று பரவலால், கொத்து கொத்தாக மனிதர்கள் செத்துக் கொண்டு இருக்கின்றனர். உயிர் காக்க அவசியமான, ஆக்சிஜன் போதுமான அளவு உற்பத்தி இல்லை. உருக்காலை போன்ற, ஏனைய தொழில்களுக்கு தேவையான ஆக்சிஜனை தயாரித்து கொடுத்த நிறுவனங்கள், அதை நிறுத்தி விட்டு, மருத்துவத்திற்கான ஆக்சிஜன் தயாரிப்பில் முழுமையாக இறங்கி விட்டன.பெரிய தொழில் நிறுவனங்கள் எல்லாம், இந்த தேசிய நெருக்கடியில் தங்கள் பங்களிப்பை வழங்க முன்வரும் சூழலில், ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழுமமும், தன் முனைப்பை வெளிப்படுத்தி இருக்கிறது.அனைத்து வசதிகளும் உடைய தூத்துக்குடி ஆலையில், தினமும் ஆயிரம் டன் ஆக்சிஜன் தயார் செய்து, இலவசமாக அரசுக்கு தருகிறோம்; ஆலையை திறக்க அனுமதி தாருங்கள் என, அரசிடம் கேட்டுள்ளது. கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்தது. ஆலையை திறக்க அனுமதி வழங்க முடியாது என, தமிழக அரசு கூறுகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்; பொது அமைதி கெடும் என, காரணங்கள் சொல்கிறது. தமிழக மருத்துவமனைகளுக்கு தேவையான அளவு, ஆக்சிஜன் இருப்பு உள்ளது; ஸ்டெர்லைட் வாயிலாக உற்பத்தி செய்து கொடுக்க அவசியம் இல்லை என்கிறது.

இதைவிட அபத்தமான அணுகுமுறையை, எந்த அரசும் எடுக்க முடியாது.ஸ்டெர்லைட் ஆலை என்ன காரணம் சொல்லி மூடப்பட்டதோ, அதில், எந்த மாற்றமும் இப்போது செய்யப்படவில்லை. அங்கே, காப்பர் உற்பத்தி செய்ய போவதாகவும், வேதாந்தா குழுமம் சொல்லவில்லை. அவசரமாக மக்களுக்கு தேவைப்படும், ஆக்சிஜனை உற்பத்தி செய்து தர மட்டுமே அனுமதி கேட்கிறது.இன்று கூடுதல் ஆக்சிஜன் தேவைப்படவில்லை என, தமிழக அரசு சொல்வது உண்மையாக இருக்கலாம். நாளையோ, அடுத்த வாரமோ அல்லது மாதமோ தேவை அதிகரிக்காது என, அரசால் உத்தரவாதம் தர முடியுமா? அப்படி அதிகரித்தால், யாரிடமும் நாங்கள் கையேந்த மாட்டோம் என, வாக்குறுதி வழங்க முடியுமா?தமிழகத்திற்கு அப்படி ஒரு தேவை வராது என்றே வைத்துக் கொள்வோம்.

மற்ற மாநிலங்களின் தேவைக்கு கொடுக்க வேண்டிய பொறுப்பு எதுவும், நம் மாநிலத்துக்கு கிடையாதா? இந்தியாவில் உள்ள, ஒரு மாநிலம் தானே தமிழகம்.ஒருவருக்கு ஒருவர் நெருக்கடி நேரத்தில் உதவி செய்வதும், அத்தியாவசிய தேவைகளை செய்வதும் தானே, மாநிலங்களின் கூட்டமைப்பான ஒரு நாட்டுக்கு அழகு; அரிசி, பருப்பு, தண்ணீரில் தொடங்கி, மின்சாரம், கம்ப்யூட்டர், கார்கள் வரை அடுத்த மாநிலங்களின் பங்களிப்பு தானே, தமிழகத்தை இன்று வரை முன்னணி மாநிலங்கள் வரிசையில் நிற்க வைத்துக் கொண்டிருக்கிறது.


காற்று மாசுக்கு காரணமாக இருப்பதாக சொல்லியே, ஸ்டெர்லைட் ஆலைமூடப்பட்டது. அந்த ஆலையால், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பிழைப்பு நடத்தின. ஆலை மூடப்பட்டதால், அந்த குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. மாசுபடுத்துகிறது ஆலை என்றால், மாற்று ஏற்பாடு என்ன என்பதே, அடுத்த நகர்வாக இருக்க வேண்டும்.மாசு ஏற்படுத்தாத அல்லது ஏற்படுத்தாமல் ஒருபொருளை உற்பத்தி செய்ய நிறுவனம் முன்வந்தால், அதற்கு போதுமான கண்காணிப்பு ஏற்பாடுகளுடன் அனுமதி வழங்க வேண்டியது தான், மக்கள் நலனில்அக்கறை உடைய ஒரு நல்லரசின் நடவடிக்கையாக இருக்கும்.ஆலை நிர்வாகம் மீது நம்பிக்கை இல்லை என்றால், நிபுணர்கள், மக்கள் பிரதிநிதிகள் இடம் பெற்ற குழுவை உருவாக்கி மேற்பார்வை செய்யலாமே.

உச்ச நீதிமன்றம் கேட்டது போல, மாநில அரசே, அந்த ஆலையின் நிர்வாகத்தை ஏற்று, ஆக்சிஜன் உற்பத்திக்கு வழி வகுக்கலாமே. அவ்வளவு எதற்கு? சுற்றுச்சூழல் பாதுகாப்பு விஷயங்களில், நாங்கள் தான் நிபுணர்கள்; நாங்கள் சொல்வது மட்டுமே உண்மை என்று அடித்துப் பேசுவோர், சமூக போராளிகள் கையிலேயே, ஆலையின் நிர்வாகத்தை ஒப்படைத்து நடத்தச் சொல்லுங்களேன், ஆக்சிஜன் தயாரிப்பை.


நாட்டு மக்களின் உயிரை காப்பாற்ற, அத்தியாவசியமான தேவை ஆக்சிஜன் வாயு. அதன் உற்பத்தியை, அதிகரிக்க விடாமல் தடுப்பது நாட்டின் மீது பற்று கொண்டவர்களோ, மனித உயிர்களை மதிப்பவர்களோ செய்யக்கூடிய காரியம் அல்ல. தவறான தகவல்களாலும், பிரசாரத்தாலும் வழிநடத்தப்படும் அப்பாவி மக்களுக்கு, உண்மையை விளக்கிச் சொல்லி ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டிய அரசாங்கமே, அதற்கு நேர் மாறான நிலைப்பாடு எடுப்பது, மிகப்பெரிய தலைகுனிவு என, நாளைய வரலாறு நிச்சயமாக பதிவு செய்யும்.ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழக்கும், ஒவ்வொரு இந்தியனின் குடும்பமும், அந்தப் பதிவில் கண்ணீருடன் கையெழுத்திடும்.'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என, உலகத்துக்கு சொன்ன தமிழ் மண்ணுக்கு, அந்த அவமானம் தேவை தானா என, ஒரு நிமிடம் யோசியுங்கள். - நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (168)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ
26-ஏப்-202118:19:30 IST Report Abuse
Lawrence Ron \\யாதும் ஊரே யாவரும் கேளிர்' என, உலகத்துக்கு சொன்ன தமிழ் மண்ணுக்கு, அந்த அவமானம் தேவை தானா என, ஒரு நிமிடம் யோசியுங்கள். - நமது நிருபர் -\\ எந்த மாநிலத்திற்கு என்ன தேவையோ அதை அவர்கள் மண்ணில் உற்பத்தி செத்துக்கொள்ளட்டும் எந்த தமிழன் அதை தடுத்தான்,,,
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
26-ஏப்-202106:43:18 IST Report Abuse
Kumar தூத்துக்குடில இருக்கிறவுங்களுக்கு எல்லாருக்கும் தேசப்பற்று கிடையாது.
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
25-ஏப்-202123:33:03 IST Report Abuse
மதுரை விருமாண்டி விஷ ஆலையிடம் ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரங்களின் தற்போதைய நிலைமை என்ன? அதை நடைமுறைக்கு கொண்டுவர எத்தனை நாட்கள் ஆகும், தமிழ்நாட்டில் அதற்கு தேவை இருக்கா, தமிழ்நாட்டில் பற்றாக்குறை என்ன என்று ஒருத்தனாவது கேட்டானா, இல்லை கேட்டானா ?? கேக்க மாட்டானுங்க.. தொற, தொற, தொறன்னு பறக்கும் இவர்கள் தொறக்குறது ஆக்சிஜனுக்கு இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X