பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கை கண்காணிக்க 80 ஆயிரம் போலீசார் இன்று வெளியே சுற்றினால் வாகனம் பறிமுதல்

Added : ஏப் 25, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை: கொரோனா பரவலை தடுக்க, இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளதால், மாநிலம் முழுதும், 80 ஆயிரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். 'முழு ஊரடங்கை மீறி, வெளியே சுற்றினால், வழக்கு பதிவு செய்வதுடன், வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்' என, போலீசார் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில், கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து
 ஊரடங்கு,80 ஆயிரம், போலீசார் ,வாகனம் பறிமுதல்

சென்னை: கொரோனா பரவலை தடுக்க, இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளதால், மாநிலம் முழுதும், 80 ஆயிரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். 'முழு ஊரடங்கை மீறி, வெளியே சுற்றினால், வழக்கு பதிவு செய்வதுடன், வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில், கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, தொற்று பரவலை தடுக்க, இரவு, 10:00 முதல் அதிகாலை, 4:00 மணி வரை, இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.latest tamil news


மேலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, நேற்று இரவு, 10:00 முதல் நாளை அதிகாலை, 4:00 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

ஊரடங்கு அமலில் இருக்கும் போது, அத்தியாவசியமில்லாத பணிகளுக்கு வெளியே சுற்றினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.

மாநிலம் முழுதும், 80 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட உள்ளனர். சென்னையில் மட்டும், 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி மற்றும் 200 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட உள்ளனர். இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில், வீட்டை விட்டு, அத்தியாவசியமின்றி வெளியே வர வேண்டாம். அவ்வாறு வருவோரை கண்காணித்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதுடன், வாகனம் பறிமுதல் செய்யப்படும்; அபராதமும் விதிக்கப்படும்.

மளிகை கடைகள், பால் வினியோகம் தவிர, மற்ற சேவைகளுக்கான கடைகள் திறந்திருந்தால், உள்ளாட்சி அமைப்புகளின் உதவியோடு, 'சீல்' வைக்கப்படும்.

நகர்ப்புறம் மட்டுமின்றி, கிராமப் புறங்களிலும், 24 மணி நேரமும், போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவர். அப்போது, ஒரே இடத்தில் மக்கள் கூடியிருந்தால், 500 ரூபாய் அபராதம் விதிப்பதுடன், அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்படும். எனவே, அரசின் முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
25-ஏப்-202113:29:25 IST Report Abuse
Mohan இவங்களை கண்காணிக்க கேமரா வைங்க. கூடி நின்று இவர்களுக்கும் பரவபோகுது .பரப்பிய பரப்புரைக்கு பாதுகாப்பு வேற கொடுத்தாங்க.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
25-ஏப்-202109:10:52 IST Report Abuse
g.s,rajan What about the people working in private sectors and in factories. What is the remedy for them ,how will they go to their office duty ???. g.s.rajan, Chennai.
Rate this:
Cancel
Indian - kailasapuram,இந்தியா
25-ஏப்-202109:02:12 IST Report Abuse
Indian சீனர்கள் பாம்பு கறி தின்று கொரானா நோயினை உலகம் முழுவதும் பரப்பி வீட்டதின் பலன் அப்பாவீ மனித சமுதாயம் அனுபவீத்த வருகீறோம். மக்களே யாரையும் நம்பாதீர்கள். அரசாங்கமும் அரசியல்வாதிகளும் தேர்தல் நடக்கும் வரை அமைதீயாக இருப்பார்கள் பின்னர் முழு அடைப்பு அருவித்து மக்களை வதைப்பார்கள். பொருளாதாரம் மந்த நிலை யில் இருந்து அதழ பாதாழம் சென்று விட்டது. 35சதவீத நடுத்தர மக்கள் வருமை நிலைக்கு சென்று விட்டனர். பலதுறை களில் வேலை இழப்பு சாதாரணமாகி விடடது. மக்கள் கிடைக்கும் வருமானத்தில் சிக்கனமாக இருக்க வேண்டீய நேரம் இது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X