கட்சியில் நல்ல தலைவரை தேடுகிறேன் ; கமல்

Updated : ஏப் 25, 2021 | Added : ஏப் 25, 2021 | கருத்துகள் (98) | |
Advertisement
சென்னை : ''தகுதியுள்ள குடிமகன் இருந்தால், தன்னாலேயே நல்லாட்சி அமையும். கோட்டையில் இருந்து செய்வது மட்டும் ஆட்சி அல்ல. கிராமம், வார்டுகளில் இருந்தும் செய்ய வேண்டும்,'' என, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் கூறினார். ம.நீ.ம., சார்பில், நேற்று நடந்த, 'உள்ளாட்சியில் தன்னாட்சி' என்ற இணையவழி கருத்தரங்கில், அவர் பேசியதாவது:சாதனை என்பது சொல் அல்ல; செயல். கிராம சபை கூட்டத்தை

சென்னை : ''தகுதியுள்ள குடிமகன் இருந்தால், தன்னாலேயே நல்லாட்சி அமையும். கோட்டையில் இருந்து செய்வது மட்டும் ஆட்சி அல்ல. கிராமம், வார்டுகளில் இருந்தும் செய்ய வேண்டும்,'' என, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் கூறினார்.latest tamil newsம.நீ.ம., சார்பில், நேற்று நடந்த, 'உள்ளாட்சியில் தன்னாட்சி' என்ற இணையவழி கருத்தரங்கில், அவர் பேசியதாவது:சாதனை என்பது சொல் அல்ல; செயல். கிராம சபை கூட்டத்தை நாம் கண்டுபிடிக்கவில்லை; இருப்பதை சுட்டிக் காட்டினோம். ராஜராஜசோழன் காலத்திலேயே, இது மாதிரி பல சபைகள் இருந்தன. நாம் அதை செயல்படுத்தாமல், வரலாறாகவே பார்த்து வருகிறோம்.கொஞ்சம் நேர்மையாக இருந்தால், இரண்டுதமிழகத்தை, நாம் வழிநடத்த முடியும். நேர்மை இருந்தாலே தன்னாலே வீரம் வரும். ஜனநாயகத்தில் மக்களின் பங்களிப்பு இல்லாமையை, நாம் தீர்க்க வேண்டும்.


latest tamil newsகட்சியில் சேராவிட்டாலும், வெளியே இருப்பவர்கள் சுட்டிக்காட்டினால் தான் அதிகம் புரியும்; வலிக்கும். விமர்சனங்களுக்கு மக்கள் நீதி மய்யம்தயாராக இருக்கிறது. எங்கள் கட்சி அப்பழுக்கற்ற கட்சி என, எப்போதும் நான் சொல்ல மாட்டேன். நம்மில் அழுக்கு இருக்கிறதா என்பதை, துருவி தேடும் ஆளாக நான் இருக்கிறேன்.கட்சியில் தலைவர்களை தேடிக் கொண்டிருக்கிறேன். அவ்வாறு இல்லாதவர்களை நீக்க வேண்டியது, என் தலையாய பணி. கிராம பஞ்சாயத்தை போல, நகர மற்றும் வார்டு சபைகளையும், விளம்பரப்படுத்த வேண்டும்.

இதற்கும் மற்ற கட்சிகள் போட்டி போட்டு முன்னாடி வந்தால் கூட தவறில்லை. இதை வழக்கமான கடமையாக, மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.'டாஸ்மாக்' மற்றும் 100 நாள் வேலை திட்டம் எல்லாம் கண்துடைப்பு தான். மக்களை இன்னும் சோம்பேறி ஆக்குபவை. 100 நாள் வேலை திட்டத்தில் காசு; அதை செலவு பண்ண டாஸ்மாக்.இளைய சமுதாயத்தை ஊக்குவிக்க வேண்டும். அவர்களை வார்டு சபை தலைவர்களாக்க வேண்டும். செயல்பட்டால் தான் தீர்வு வரும். அதற்கான அட்டவணைகளை உடனே, நாம் வடிவமைக்க வேண்டும்.தேர்தல் முடிவு எப்படி வேண்டுமானாலும் வரட்டும்.

ஆனால், நம் பணிகளை செய்து கொண்டே இருக்க வேண்டும்.தகுதியுள்ள குடிமகன் இருந்தால், தன்னாலேயே நல்லாட்சி அமையும். கோட்டையில் இருந்து செய்வது மட்டும் ஆட்சி அல்ல. கிராமம், வார்டுகளில் இருந்தும் செய்ய வேண்டும். இது, கட்சியை மட்டும் அல்ல; மக்களையும் பலப்படுத்தும்.இவ்வாறு கமல் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (98)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MURUGESAN - namakkal,இந்தியா
26-ஏப்-202114:51:17 IST Report Abuse
MURUGESAN "சாதனை என்பது சொல் அல்ல செயல்." - அதனை முன்னெடுத்திருக்கும் கமல் அவர்களின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள். அடுத்தவரை குறைகூறி பேசும் கூட்டம் பேசிக்கொண்டே இருக்கும். அவர்கள் பேச்சுக்கு பதில் கூறி நேரத்தை வீணடிப்பதை விடுத்து செயலில் வேகத்தை கூட்டி வெற்றிபெறுங்கள். அந்த வெற்றி ஏசுவோரை வாயடைக்க செய்யும்.
Rate this:
Cancel
Masiraki - coimbatore,இந்தியா
26-ஏப்-202111:07:45 IST Report Abuse
Masiraki யாருக்கும் அஞ்சாமல், தன்னை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற பயம் இன்றி உண்மையை உரக்க சொல்லும் நபர்....... வாழ்த்துக்கள்.....
Rate this:
Cancel
Seitheee - San Jose,யூ.எஸ்.ஏ
25-ஏப்-202120:35:07 IST Report Abuse
Seitheee கமல் எப்பொழுதும் இந்த மாதிரி பேசிக்கொண்டிருந்தால், அவர் கட்சி உறுப்பினர்கள் வேறு நல்ல தலைவரை தேடி பொய் விடுவார்கள். இவர் ஒரு சந்தர்ப்பவாதி. போலி முகத்துடன் உலா வரும் ஒருவர. இவர் இந்த நாட்டிற்கு எந்த விதத்திலும் நன்மை செய்ததில்லை. இனி செய்யபோவதும் இல்லை. தனி மனித ஒழுக்கம் இல்லாத ஒருவர் என்னதான் பேசினாலும் அவரை மக்கள் வைக்கும் இடத்திலேதான் வைப்பார்கள். வியாபார நோக்கோடு இவர் கட்சி நடத்துபவர். இவருக்கு இந்துக்களை எதிர்ப்பது, நாத்திகம் பேசுவது, அடிக்கடி திராவிடம் என்று உளறுவது, பெரும்பான்மையான இந்துக்களை அவமதிப்பது என்பது திராவிட கட்சி செய்யும் பித்தலாட்டங்களை காப்பி அடிப்பவர். இந்துக்களின் வோட்டு சத்தியமாக இவருக்கு இல்லை. அரசியலில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X