பெண்கள் சைக்கிள் ஓட்டுவதையே அதிசயமாக பார்த்த காலம் இருந்தது. அதே பெண்கள் ஆக்ஸிலேட்டரை முறுக்கி, பைக்கை சீறிப்பாய விட்டு மிரள வைக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா. ஆம்... ஆண்களுக்கு இணையாக பைக் ரேஸிலும் மிரட்டி வருகிறார்
சென்னை ரெஹானா ரியா 24.வீட்டில் பைக் ஓட்டுவதற்கு தடை விதித்தாலும், அதையும் மீறி 2016 ல் முதல் முறையாக தோழியிடம் பைக்கை வாங்கி ஓட்டியிருக்கிறார். ஆசை யாரைத்தான் விட்டது. சென்னையில் பெண்கள் டிராக்கில் (பந்தய மைதானத்தில்) எப்படி பைக் ஓட்டுவது என்பது குறித்த ஒரு நாள் பயிற்சியிலும் பங்கேற்றார். அந்த வருடமே ரெஹானா களம் இறங்கிய ரேஸில் புயல் வேகத்தில் பைக் ஓட்டியதால் முதல் வெற்றி கிடைத்தது.அந்த வெற்றி அவரை அடுத்தடுத்த கட்டத்திற்கு இழுத்துச் சென்றது. இதனால் 2017, 18, 19களில் ஆல் இந்தியா ரேஸ், சர்வேதேச, நேஷனல் சாம்பியன் ஷிப், ஆசியா கப் ஆப் ரோடு ரேஸிங் சாம்பியன்ஷிப் என எல்லா இடங்களிலும் வெற்றிக் கோப்பையை குவித்துள்ளார். தாய்லாந்து, சீனாவில் நடந்த ஆண்களுடனான ரேஸிலும் சீறிப் பாய்ந்திருக்கிறார். தற்போது மணல் டிராக் ரேஸிங்கிற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். வெற்றிகளை குவிக்க குவிக்க எதிர்ப்பு குறைந்து, வீட்டில் உள்ளவர்களே ரெஹானாவின் ரசிகர்களாகிவிட்டனர்.

அவருடன் பேசிய போது: மற்ற நாடுகளில் இது அனைவரும் விரும்பும் விளையாட்டாக இருக்கிறது. இந்தியாவில் ஏனோ இதை யாரும் கண்டு கொள்வதில்லை. இந்திய பெண்களும் ரேஸில் ஆர்வமாக உள்ளனர். ரேஸ் என்றாலே மக்கள் மத்தியில் தவறான கண்ணோட்டம் உள்ளது. அதற்கு காரணம் மக்களுக்கு இடையூறாக ரோடுகளில் ரேஸிங் செய்பவர்கள் தான். ரேஸ் செல்ல நினைப்பவர்கள் பயிற்சி பெற்றால் டிராக்கில் பறக்கலாம். அது நமக்கு ஒரு லட்சியத்தை அடைய வழி காட்டும். பெண்கள் கனவை அடையை எதிர்ப்புகளை தாண்டி வர வேண்டும். வெற்றி கிடைத்து விட்டால் எதிர்ப்புகள் காணாமல் போகும், என்றார்.
-சிவன்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE