தடுப்பூசி விலை உயர்வு ஏன்? 'சீரம் இந்தியா' விளக்கம்!

Updated : ஏப் 25, 2021 | Added : ஏப் 25, 2021 | கருத்துகள் (12) | |
Advertisement
புதுடில்லி: 'பல்வேறு நாடுகளும், முன்கூட்டியே அளித்த நிதியை வைத்து, குறைந்த விலைக்கு ஏற்கனவே தடுப்பூசி வழங்க முடிந்தது. தற்போது, தயாரிப்பை அதிகரிக்க, அதிக முதலீடு தேவைப்படுவதால், விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது' என, 'சீரம் இந்தியா' நிறுவனம் தெரிவித்துள்ளது.நேரடி கொள்முதல்ஐரோப்பிய நாடான, பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ராஜெனகா
CovidVaccine, PriceHike, Serum, SII, கொரோனா, தடுப்பூசி, சீரம், விலை உயர்வு

புதுடில்லி: 'பல்வேறு நாடுகளும், முன்கூட்டியே அளித்த நிதியை வைத்து, குறைந்த விலைக்கு ஏற்கனவே தடுப்பூசி வழங்க முடிந்தது. தற்போது, தயாரிப்பை அதிகரிக்க, அதிக முதலீடு தேவைப்படுவதால், விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது' என, 'சீரம் இந்தியா' நிறுவனம் தெரிவித்துள்ளது.நேரடி கொள்முதல்


ஐரோப்பிய நாடான, பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ராஜெனகா மருந்து தயாரிப்பு நிறுவனம் இணைந்து, 'கோவிஷீல்டு' தடுப்பூசியை தயாரித்தன. இதை, மஹாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த, 'சீரம் இந்தியா' நிறுவனம் தயாரித்து வினியோகித்து வருகிறது. இந்த தடுப்பூசியின், 'டோஸ்' ஒன்று, மத்திய அரசுக்கு, 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.வரும், 1ம் தேதி முதல், 50 சதவீத தடுப்பூசிகளை, மாநில அரசுகளும், தனியார் மருத்துவ மனை களும், 'சீரம் இந்தியா' நிறுவனத்திடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய, மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது.இதையடுத்து, மாநில அரசுகளுக்கான தடுப்பூசியின் விலையை, ஒரு டோஸ், 400 ரூபாயாகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு, 600 ரூபாயாகவும், 'சீரம் இந்தியா' நிறுவனம் உயர்த்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து உள்ளன.இது குறித்து, 'சீரம் இந்தியா' நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:சந்தையில், மிக குறைந்த விலையில் கிடைக்கும் தடுப்பூசியாக, கோவிஷீல்டு உள்ளது.latest tamil news
வினியோகம்


துவக்கத்தில், இந்தியா உட்பட, பல்வேறு நாடுகளும், தடுப்பூசி தயாரிப்புக்கு முன்கூட்டியே நிதி அளித்ததை அடுத்து, அனைவருக்கும் குறைந்த விலையில் வினியோகம் செய்ய முடிந்தது. தற்போது, நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. இதனால் மக்கள் கடும் ஆபத்தில் உள்ளனர். எனவே, தடுப்பூசி தயாரிப்பை தொய்வில்லாமல் செய்யவும், திறனை அதிகரிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு பெரும் முதலீடுகள் தேவைப்படுகின்றன.'சீரம் இந்தியா' தயாரிக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதி தடுப்பூசிகள் மட்டுமே, தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்படும். கொரோனா தொற்று உட்பட, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இதர மருத்துவ சிகிச்சைகளுக்கு ஆகும் செலவை விட, இந்த தடுப்பூசியின் விலை மிக குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
25-ஏப்-202116:31:09 IST Report Abuse
Mirthika Sathiamoorthi பங்கு சந்தையில் இதன் பங்கு எத்தனை சதம் உயர்ந்திருக்கு தெரியுமா? இதே ஆராய்ச்சி அரசின் பொதுத்துறை நிறுவனகளுடனும் வெளிநாட்டு ஆராய்ச்சி குழுவுடன் கைகோர்த்திருந்தால்...? இதன் சந்தை முழுதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில்..இப்போ? வெறும் GST மட்டும்...நம்ம கணக்கே GST வசூல் காட்டி GST வெற்றின்னு சொல்லுவதுமட்டுமே...
Rate this:
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
25-ஏப்-202123:05:45 IST Report Abuse
மதுரை விருமாண்டிமோடியின் நண்பர்கள் உலக பெரும்பணக்காரர்கள் ஆக வேண்டாமா ?? பிஎம் கேர்ஸ்சில கோடிகள் கொட்ட வேண்டாமா ??...
Rate this:
Cancel
25-ஏப்-202116:07:49 IST Report Abuse
ஆப்பு தனியாருக்கு தாரை வார்த்தால் விலைவாசி உயரும் என்று பொருள் காண்க. நிர்மலா ஜீ இதைப் படிக்கலாம்.
Rate this:
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
25-ஏப்-202123:02:34 IST Report Abuse
மதுரை விருமாண்டிகுழப்பமான விஷயம்ன்னு சொல்லிடுவாரு.....
Rate this:
Cancel
கண்மணி கன்னியாகுமரி - தமிழ்நாடு,இந்தியா
25-ஏப்-202115:23:56 IST Report Abuse
கண்மணி கன்னியாகுமரி ஜெய் சீரம்...😷
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X