ஈராக் கொரோனா மருத்துவமனையில் தீ: 82 பேர் பலி

Updated : ஏப் 25, 2021 | Added : ஏப் 25, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
பாக்தாத் : ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 82 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயம் அடைந்து உள்ளனர்.தியாலா பிரிட்ஜ் பகுதியில் இருக்கும், இப்னு அல் கதீப் என்ற அந்த மருத்துவமனையில், ஆக்சிஜன் சிலிண்டர் வைக்கப்பட்ட அறையில் நிகழ்ந்த கோளாறு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள்
iraq, hospital, Fire, dead, ஈராக், மருத்துவமனை, தீ, பலி, உயிரிழப்பு

பாக்தாத் : ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 82 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

தியாலா பிரிட்ஜ் பகுதியில் இருக்கும், இப்னு அல் கதீப் என்ற அந்த மருத்துவமனையில், ஆக்சிஜன் சிலிண்டர் வைக்கப்பட்ட அறையில் நிகழ்ந்த கோளாறு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த மருத்துவமனையில் தீத்தடுப்பு சாதனங்கள் இல்லாததால், தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது.


latest tamil newsமருத்துவமனை உள்ள வார்டு ஒன்றில் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களும் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கொரோனா பாதித்தவர்கள். நள்ளிரவு நேரத்தில் தீவிபத்து ஏற்பட்டதால், பலர் தப்பிக்க முடியவில்லை. வென்டிலேட்டரை அகற்றியதாலும், சிலர் புகை காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டதாலும் உயிரிழந்தனர். இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவ துவங்கியதை தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஈராக் பிரதமர் உத்தரவிட்டு உள்ளார்.


latest tamil news


இந்த சம்பவத்தில், 82 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்து உள்ளதாக, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது.


latest tamil newsAdvertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
25-ஏப்-202119:54:31 IST Report Abuse
Ramesh Sargam நேற்று இந்தியாவில் ஒரு கொரானா மருத்துவமனையில் தீ விபத்து ஏட்பட்டு இருபதுக்கு மேட்பட்டோர் பலியாகினர். இன்று ஈராக் -இல். இது மருத்துவமனைசரியாக பராமரிக்கப்படவில்லை என்பதை நமக்கு காட்டுகிறது. சரியாக மருத்துவமனை பராமரிக்காதவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். அல்லது அவர்கள் மருத்துவமனை நடத்த அனுமதி மறுக்கப்படவேண்டும்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
25-ஏப்-202116:33:01 IST Report Abuse
sankaseshan இந்திய அரசை குறைசொல்லும் தகுறிகளை ஈராக்குக்கும் ஈரானுக்கும் அனுப்பிவிடலாம் Appathhaaan
Rate this:
234 லட்சியம் 200 தோல்வி நிச்சயம், DMK தோல்விக்கு பாடுபடுவோம், சென்னை.அங்கெல்லாம் ஐந்து லட்சம் அரசு வேலை இதெல்லாம் கிடையாதா? குடும்பத்துக்கு ஒரு கோடி அரசு வேலை கேட்க கட்சிகள் இல்லையோ?...
Rate this:
Cancel
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
25-ஏப்-202116:30:01 IST Report Abuse
JAYACHANDRAN RAMAKRISHNAN பாரப்பா அங்கேயும் ஆக்சிஜன் தான் பிரச்சினை செய்துள்ளது. ஆக்சிஜனால் எல்லா பக்கமும் பிரச்சினையாக உள்ளது. எங்கே நமது கட்சிகள் இன்னும் மோடியை திட்டவில்லை. செய்தி அனைவருக்கும் இன்னுமா எட்டவில்லை.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
25-ஏப்-202117:51:31 IST Report Abuse
Visu Iyerஅவர் சொல்லி கொடுத்து தான் என்று சொல்ல போறாங்க.....
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
25-ஏப்-202117:53:19 IST Report Abuse
Visu Iyerஎதற்கெடுத்தாலும் வெளி நாட்டை பாரு ... என்று சொல்லும் சில குறை மதியாளர்களுக்கு இப்போ ஒரு அவல் கிடைத்து விட்டது.. இனி இங்கே எது நடந்தாலும் அதை காரணம் காட்டுவார்கள் கையால் ஆகாதவர்கள்..இந்த குறை மதியாளர்களினால் ஆவது ஒன்றும் இல்லை.. ஆக போவதும் ஒன்றும் இல்லை என்பது சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்... அவர்களை அப்படியே விட்டு விடுவோம்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X