ஈராக் கொரோனா மருத்துவமனையில் தீ: 82 பேர் பலி| Dinamalar

ஈராக் கொரோனா மருத்துவமனையில் தீ: 82 பேர் பலி

Updated : ஏப் 25, 2021 | Added : ஏப் 25, 2021 | கருத்துகள் (6)
Share
பாக்தாத் : ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 82 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயம் அடைந்து உள்ளனர்.தியாலா பிரிட்ஜ் பகுதியில் இருக்கும், இப்னு அல் கதீப் என்ற அந்த மருத்துவமனையில், ஆக்சிஜன் சிலிண்டர் வைக்கப்பட்ட அறையில் நிகழ்ந்த கோளாறு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள்
iraq, hospital, Fire, dead, ஈராக், மருத்துவமனை, தீ, பலி, உயிரிழப்பு

பாக்தாத் : ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 82 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

தியாலா பிரிட்ஜ் பகுதியில் இருக்கும், இப்னு அல் கதீப் என்ற அந்த மருத்துவமனையில், ஆக்சிஜன் சிலிண்டர் வைக்கப்பட்ட அறையில் நிகழ்ந்த கோளாறு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த மருத்துவமனையில் தீத்தடுப்பு சாதனங்கள் இல்லாததால், தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது.


latest tamil newsமருத்துவமனை உள்ள வார்டு ஒன்றில் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களும் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கொரோனா பாதித்தவர்கள். நள்ளிரவு நேரத்தில் தீவிபத்து ஏற்பட்டதால், பலர் தப்பிக்க முடியவில்லை. வென்டிலேட்டரை அகற்றியதாலும், சிலர் புகை காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டதாலும் உயிரிழந்தனர். இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவ துவங்கியதை தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஈராக் பிரதமர் உத்தரவிட்டு உள்ளார்.


latest tamil news


இந்த சம்பவத்தில், 82 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்து உள்ளதாக, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது.


latest tamil newsAdvertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X