உ.பி.,யில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை: யோகி ஆதித்யநாத்| Dinamalar

உ.பி.,யில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை: யோகி ஆதித்யநாத்

Updated : ஏப் 25, 2021 | Added : ஏப் 25, 2021 | கருத்துகள் (36)
Share
லக்னோ: உத்தர பிரதேசத்தில் எந்த கொரோனா மருத்துவமனையிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.கொரோனா 2வது அலை காரணமாக நாள்தோறும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல நோயாளிகள் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டது.
UP, OxygenShortage, Yogi, உத்தர பிரதேசம், யோகி ஆதித்யநாத், ஆக்சிஜன்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் எந்த கொரோனா மருத்துவமனையிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

கொரோனா 2வது அலை காரணமாக நாள்தோறும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல நோயாளிகள் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: மாநிலத்தின் எந்தவொரு கொரோனா மருத்துவமனையிலும் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை இல்லை.


latest tamil news


ஐ.ஐ.டி கான்பூர், ஐ.ஐ.எம் ஆக்ரா மற்றும் ஐஐடி பிஹெச்யு போன்ற நிறுவனங்களுடன் இணைந்து மாநிலத்தின் ஆக்சிஜன் தேவை, வழங்கல் மற்றும் விநியோகத்தை முறையாக கண்காணித்து வருகிறோம். அதனால் தற்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளிக்கும் ஆக்சிஜன் தேவையில்லை. தேவைப்படுபவர்கள் மட்டுமே அதைப் பயன்படுத்துகிறார்கள். இது குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதில் ஊடகங்களின் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தில் மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் சில ஆரம்பகட்ட சிக்கல்கள் இருந்தது. ஆனால் அவை விரைவாக சரிசெய்யப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X