புதுடில்லி: இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. இதனை அடுத்து டில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறும் வைரஸ் தாக்கிய நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவை அதிகமாக உள்ளது. இதனை அடுத்து மத்திய அரசு போர் விமானங்கள் மூலமாக அதிவேகமாக ஆக்சிஜன் சிலிண்டர்களை பல்வேறு நகரங்கள் இடையே கொண்டு சேர்த்தது.

அதிகம் பேர் பயன்
இது முன்னதாக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது மத்திய அரசு இதற்காக இந்திய ரயில்வே துறையின் உதவியை நாடியுள்ளது. ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் அதிவேக ரயில்களில் திரவ நிலைக்கு கொண்டு வரப்பட்ட ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் டில்லியை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றன.
சட்டீஸ்கரில் உள்ள ஆக்ஸிஜன் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் இந்த ஆக்சிஜன் தற்போது ரயில்களில் டில்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதால் அதிகம் பேர் பயனடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து முன்னதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், தங்களுக்கு 700 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் ஒரு நாளைக்கு தேவைப்படும் நிலையில் மத்திய அரசு 480 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அளித்து வருவதாக கூறினார். கடந்த ஒரு வார காலத்தில் 25 ஆயிரம்பேர் டில்லியில் தினசரி கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி மும்பையில் இருந்து வைசாக் நோக்கி முதல் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் அதிவேக ரயில் சென்றது. இதனையடுத்து தற்போது லக்னோ உள்ளிட்ட பல முக்கிய நகரங்களுக்கு ரயில்கள் மூலம் திரவ ஆக்சிஜன் கொண்டு சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE