சென்னையில் ஊரடங்கிய வேளையில்..

Updated : ஏப் 25, 2021 | Added : ஏப் 25, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னையில் இன்று முழு ஊரடங்கு வெற்றிகரமாக கடைப்பிடிக்கப்பட்டது என்றால் அதற்கான முழு பாராட்டும் பொதுமக்களைத்தான் சாரும்.கிட்டத்தட்ட சென்னை முழுவதும் சுற்றி வந்தபோதும் எந்த இடத்திலும் தேவையில்லாமல் யாருமே வெளிவரவில்லை,அதிலும் குறிப்பாக, என்ன நடந்தாலும் வேடிக்கை பார்க்க இரு சக்கர வாகனத்தில் வலம் வரும் இளைஞர்களை பார்க்கவே



latest tamil news



சென்னையில் இன்று முழு ஊரடங்கு வெற்றிகரமாக கடைப்பிடிக்கப்பட்டது என்றால் அதற்கான முழு பாராட்டும் பொதுமக்களைத்தான் சாரும்.


latest tamil news


கிட்டத்தட்ட சென்னை முழுவதும் சுற்றி வந்தபோதும் எந்த இடத்திலும் தேவையில்லாமல் யாருமே வெளிவரவில்லை,அதிலும் குறிப்பாக, என்ன நடந்தாலும் வேடிக்கை பார்க்க இரு சக்கர வாகனத்தில் வலம் வரும் இளைஞர்களை பார்க்கவே முடியவில்லை.


latest tamil news


Advertisement

இத்தனைக்கும் இன்று நல்ல முகூர்த்த நாள், வழக்கமாக வடபழநியாண்டவர் கோவிலைச் சுற்றிலும் உள்ள திருமண மண்டபங்கள் நிரம்பிவழியும்,எங்கு பார்த்தாலும் மாலையும் கழுத்துமாக மணமக்கள் காணப்படுவர் ஆனால் இன்று முப்பது திருமண மண்டபங்களில் மூன்று மண்டபத்தில் மட்டுமே திருமணம் நடைபெற்றது திருமணத்திலும் மிகவும் சொற்பமான உறவினர்களே கலந்து கொண்டனர்.


latest tamil news


மணமக்களுடன் சேர்த்து மொத்தமே ஆறு பேராக வந்து கோவில் வாசலில் திருமணம் செய்து கொண்டு சென்றவர்களும் உண்டு.


latest tamil news


போலீசாருக்கு கடுமையான வேலை இரவு நேர ஊரடங்கை முடித்துவிட்டு அப்படியே பலருக்கு பகல் நேர ட்யூட்டியை பார்க்க வேண்டிய கட்டாயம் ஆனாலும் அவர்களும் எரிச்சல் காட்டவில்லை ரோட்டில் வந்தவர்களும் எரிச்சல் ஏற்படுத்தவில்லை விமான டிக்கெட் ரயில் டிக்கெட் திருமண பத்திரிகை போன்ற ஆவணங்களை காண்பித்துவிட்டு பயணத்தை தொடர்ந்தனர்.


latest tamil news


எந்த இடத்திலும் ஒரு டீ கடை கூட திறக்கப்படவில்லை இதனால் பலர் சாப்பாட்டிற்கு சிரமப்படுவார்களே என்று பார்த்தால் பல இடங்களில் சாப்பாடு செய்து இலவசமாக பரிமாறினர்.
என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்பது பற்றி எவ்வித கவலையும் இல்லாமல் பாலத்தின் கீழ் படுத்திருந்த உடல் நலிவுற்ற ஒரு பெண்ணுக்கு தேடிப்போய் உணவு கொடுத்தனர்.
பயணிகள் இருக்கிறார்களா இல்லையா என்பது பற்றிய கவலையில்லாமல் மெட்ரோ,மின்சார ரயில்களும் விமானங்களும் தத்தம் பணிகளை செய்து கொண்டிருந்தது.
வடபழநியில் ஆரம்பித்து எண்ணுார் வரை எங்கு பார்த்தாலும் வெறிச்சோடிய காட்சிதான்.மக்களின் இந்த ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை பார்த்தாவது கொரோனா ஊரைவிட்டு உலகை விட்டு நீங்க வேண்டும் நிரந்தரமாக..
-எல்.முருகராஜ்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathish - Coimbatore ,இந்தியா
03-மே-202104:54:41 IST Report Abuse
Sathish நல்ல கட்டுரை தினமலர். மனதுக்கு ஆறுதலாக இருந்தது.
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
28-ஏப்-202120:11:00 IST Report Abuse
Ram yenna korana kodutha shock appadi, ithai makkal thanaga kadaipidithirunthal eppovo koronavilirunthu veliye vanthirukalam
Rate this:
Cancel
kumar - Erode,இந்தியா
28-ஏப்-202100:08:51 IST Report Abuse
kumar இலவச உணவு வழங்குவது சிறந்த தொண்டு தான் . ஆனால் வழங்குவோரும் , வாங்குவோரும் ஒருவரும் முக கவசம் அணியாமல் இருப்பது தான் கொடுமை இவர்களில் எத்தனை பேர் கொரோன வை பரப்புபவர் என்று சொல்வதற்கு இல்லை ஆனால் அரசாங்கம் அதிலும் மோடியினால் தான் பரவுகிறது என்று இவர்களே சொல்லுவார்கள் அதை நமது "நடு நிலை" ஊடகங்களும் தம்பட்டம் அடிக்கும் . தினமலரிலும் இதற்காகவே காத்திருக்கும் 'உண்மை விளம்பிகள் " அதை பரப்பு வார்கள் தனி மனித ஒழுக்கமும் கட்டுப்பாடும் தான் இந்த நோய் பரவலில் இருந்து நம்மை காக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X