சென்னையில் ஊரடங்கிய வேளையில்..| Dinamalar

சென்னையில் ஊரடங்கிய வேளையில்..

Updated : ஏப் 25, 2021 | Added : ஏப் 25, 2021 | கருத்துகள் (3)
Share
சென்னையில் இன்று முழு ஊரடங்கு வெற்றிகரமாக கடைப்பிடிக்கப்பட்டது என்றால் அதற்கான முழு பாராட்டும் பொதுமக்களைத்தான் சாரும்.கிட்டத்தட்ட சென்னை முழுவதும் சுற்றி வந்தபோதும் எந்த இடத்திலும் தேவையில்லாமல் யாருமே வெளிவரவில்லை,அதிலும் குறிப்பாக, என்ன நடந்தாலும் வேடிக்கை பார்க்க இரு சக்கர வாகனத்தில் வலம் வரும் இளைஞர்களை பார்க்கவேlatest tamil newsசென்னையில் இன்று முழு ஊரடங்கு வெற்றிகரமாக கடைப்பிடிக்கப்பட்டது என்றால் அதற்கான முழு பாராட்டும் பொதுமக்களைத்தான் சாரும்.


latest tamil news


கிட்டத்தட்ட சென்னை முழுவதும் சுற்றி வந்தபோதும் எந்த இடத்திலும் தேவையில்லாமல் யாருமே வெளிவரவில்லை,அதிலும் குறிப்பாக, என்ன நடந்தாலும் வேடிக்கை பார்க்க இரு சக்கர வாகனத்தில் வலம் வரும் இளைஞர்களை பார்க்கவே முடியவில்லை.


latest tamil news


Advertisement

இத்தனைக்கும் இன்று நல்ல முகூர்த்த நாள், வழக்கமாக வடபழநியாண்டவர் கோவிலைச் சுற்றிலும் உள்ள திருமண மண்டபங்கள் நிரம்பிவழியும்,எங்கு பார்த்தாலும் மாலையும் கழுத்துமாக மணமக்கள் காணப்படுவர் ஆனால் இன்று முப்பது திருமண மண்டபங்களில் மூன்று மண்டபத்தில் மட்டுமே திருமணம் நடைபெற்றது திருமணத்திலும் மிகவும் சொற்பமான உறவினர்களே கலந்து கொண்டனர்.


latest tamil news


மணமக்களுடன் சேர்த்து மொத்தமே ஆறு பேராக வந்து கோவில் வாசலில் திருமணம் செய்து கொண்டு சென்றவர்களும் உண்டு.


latest tamil news


போலீசாருக்கு கடுமையான வேலை இரவு நேர ஊரடங்கை முடித்துவிட்டு அப்படியே பலருக்கு பகல் நேர ட்யூட்டியை பார்க்க வேண்டிய கட்டாயம் ஆனாலும் அவர்களும் எரிச்சல் காட்டவில்லை ரோட்டில் வந்தவர்களும் எரிச்சல் ஏற்படுத்தவில்லை விமான டிக்கெட் ரயில் டிக்கெட் திருமண பத்திரிகை போன்ற ஆவணங்களை காண்பித்துவிட்டு பயணத்தை தொடர்ந்தனர்.


latest tamil news


எந்த இடத்திலும் ஒரு டீ கடை கூட திறக்கப்படவில்லை இதனால் பலர் சாப்பாட்டிற்கு சிரமப்படுவார்களே என்று பார்த்தால் பல இடங்களில் சாப்பாடு செய்து இலவசமாக பரிமாறினர்.
என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்பது பற்றி எவ்வித கவலையும் இல்லாமல் பாலத்தின் கீழ் படுத்திருந்த உடல் நலிவுற்ற ஒரு பெண்ணுக்கு தேடிப்போய் உணவு கொடுத்தனர்.
பயணிகள் இருக்கிறார்களா இல்லையா என்பது பற்றிய கவலையில்லாமல் மெட்ரோ,மின்சார ரயில்களும் விமானங்களும் தத்தம் பணிகளை செய்து கொண்டிருந்தது.
வடபழநியில் ஆரம்பித்து எண்ணுார் வரை எங்கு பார்த்தாலும் வெறிச்சோடிய காட்சிதான்.மக்களின் இந்த ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை பார்த்தாவது கொரோனா ஊரைவிட்டு உலகை விட்டு நீங்க வேண்டும் நிரந்தரமாக..
-எல்.முருகராஜ்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X