அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆக்சிஜனை வெளி மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டாம்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமிகடிதம்

Updated : ஏப் 27, 2021 | Added : ஏப் 25, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
சென்னை:'தமிழகத்தில் தேவை அதிகம் இருப்பதால், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து பிற மாநிலங்களுக்கு, ஆக்சிஜன் அனுப்ப பிறப்பித்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, முதல்வர் பழனிசாமி., கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை குறைக்க, தமிழக அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
ஆக்சிஜனை வெளி மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டாம்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமிகடிதம்

சென்னை:'தமிழகத்தில் தேவை அதிகம் இருப்பதால், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து பிற மாநிலங்களுக்கு, ஆக்சிஜன் அனுப்ப பிறப்பித்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, முதல்வர் பழனிசாமி., கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை குறைக்க, தமிழக அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. எனினும், தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை, 450 டன்னை எட்டும் என, தெரிகிறது. இது, தமிழகத்தின் உற்பத்தி திறனான, 400 டன்னை விட அதிகம். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த போது, 58 ஆயிரம் பேர் மட்டுமே, ஒரே நேரத்தில், கொரோனா வால் பாதிக்கப் பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர்.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை கடந்துள்ளதால், ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.

தமிழக ஆலைகளில் இருந்து ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடுவதை எதிர்த்து, பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டி விட்டது. இதனால் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 400 மெட்ரிக் டன் மட்டுமே ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன் இருக்கிறது. ஆனால் தமிழகத்தின் ஆக்சிஜன் தேவை 450 மெட்ரிக் டன்னாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் தமிழகத்திற்கு 220 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் போதுமானது என மத்திய அரசால் தவறாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் தேவையை தவறாக கணித்துவிட்டு, ஸ்ரீபெரும்புதூர் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு திருப்பி விட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தைவிட குறைவாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு தமிழகத்திலிருந்து ஆக்ஸிஜனை திருப்பி விட்டால், சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து பிற மாநிலங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ள ஆக்ஸிஜனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என கடிதத்தில் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்


நடவடிக்கை

ஆக்சிஜனை தடையின்றி கொடுக்க, தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.தமிழகத்தின் தற்போதைய ஆக்சிஜன் தேவை, 310 டன்னாக உள்ள நிலையில், தேசிய மருத்துவ ஆக்சிஜன் பங்கீட்டில், தமிழகத்திற்கு, 220 டன் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. தவறான கணக்கீட்டின் அடிப்படையில், குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதுாரிலிருந்து, 80 டன் திரவ ஆக்சிஜன், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதுாரில் உற்பத்தியாகும் ஆக்சிஜன், சென்னை மக்களின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இதை வேறு மாநிலங்களுக்கு திருப்பி விடுவது நியாயமாகாது. எனவே, இந்த தவறு திருத்தப்பட வேண்டும். மற்ற மாநிலங்களுக்கு ஆதரவளிக்க, தமிழகம் எப்போதும் தயாராகவே உள்ளது.

ஆனால், தமிழகத்தின் தேவை அதிகமாக உள்ளதால், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, 80 டன் ஆக்சிஜனை, பிற மாநிலங்களுக்கு அனுப்பும் உத்தரவை, உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, பழனிசாமி., கூறியுள்ளார்.


வேதாந்தா நிறுவனத்திற்குஅனுமதி வழங்கப்படுமா?துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில், தினசரி, 1,050 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். அங்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கும்படி, வேதாந்தா நிறுவனம் அரசுக்கு கோரிக்கை விடுத்தது.ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கோரி, உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தற்போது, தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உள்ளதாக, பிரதமருக்கு, முதல்வர் கடிதம் எழுதி உள்ளார்.எனவே, தமிழக அரசு வறட்டு கவுரவம் பார்க்காமல், அவசர நிலை கருதி, ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில், ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளிக்க வேண்டும். இதை, உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு தெரிவிக்குமா என்பதே, மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
26-ஏப்-202123:47:33 IST Report Abuse
Mani . V "ஆக்சிஜனை வெளி மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டாம் என்று நாங்கள் தமிழக மக்கள் மீது அக்கறை இருப்பது மாதிரி காட்டிக் கொள்வோம். நீங்கள் கடிதத்தை குப்பை கூடையில் தூக்கிப் போட்டு விட்டு உங்கள் இஷ்டம்போல் எது வேண்டுமானாலும் செய்யலாம் எசமான்"
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
26-ஏப்-202120:48:50 IST Report Abuse
vbs manian ஆ ந்தரவும் கர்நாடகாவும் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்று சொன்னால் என்னாவது .
Rate this:
Cancel
c.k.sundar rao - MYSORE,இந்தியா
26-ஏப்-202110:45:05 IST Report Abuse
c.k.sundar rao No states or centre will come forward to help T.N. in case any crisis in oxygen is it short supply because each and state have there own problems and T.N. oxygen producing plant will be advised to operate it rather than begoing the states and centre.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X