பொது செய்தி

தமிழ்நாடு

548வது நாளாக அள்ள அள்ள குறையாத 'அக் ஷய பாத்திரம்'

Added : ஏப் 26, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில் இயங்கி வரும், 'அக் ஷய பாத்திரம்' அறக்கட்டளை 2019ல் துவங்கி, ஏழைகளின் பசியை போக்கிவருகிறது.நகரை, 10 பகுதிகளாக பிரித்து, ஆதரவற்ற ஏழைகள், மனநலம் பாதிக்கப்பட்டவர், மாற்றுத்திறனாளிகளுக்கு, தினமும் காலை, மதியம் உணவு வழங்கப்படுகிறது.ஊரடங்கின் போது, மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன், 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஏழைகளுக்கு, மளிகை பொருட்கள்
548வது நாளாக அள்ள அள்ள குறையாத 'அக் ஷய பாத்திரம்'

திருப்பூர்:திருப்பூரில் இயங்கி வரும், 'அக் ஷய பாத்திரம்' அறக்கட்டளை 2019ல் துவங்கி, ஏழைகளின் பசியை போக்கிவருகிறது.

நகரை, 10 பகுதிகளாக பிரித்து, ஆதரவற்ற ஏழைகள், மனநலம் பாதிக்கப்பட்டவர், மாற்றுத்திறனாளிகளுக்கு, தினமும் காலை, மதியம் உணவு வழங்கப்படுகிறது.ஊரடங்கின் போது, மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன், 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஏழைகளுக்கு, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. வெளிமாநில தொழிலாளர் சொந்த ஊர் திரும்பிய போதும், உணவு பார்சல் வழங்கி சேவையாற்றியது.

முழு ஊரடங்கான நேற்றும், 'அக் ஷய பாத்திரம்' அறக்கட்டளையினர், பொதுமக்களுக்கும், ஆதரவற்றவருக்கும், இலவச உணவு பொட்டலம் வழங்கினர்.அறக்கட்டளை தலைவர் செந்தில்குமார் கூறு கையில், 'உணவு இல்லாமல் யாரும் கஷ்டப்படக்கூடாது என்ற நோக்கில், 70 தன்னார்வலர்கள் இணைந்து, பசி போக்கும் சேவையாற்றி வருகிறோம்.இன்றுடன் (25.04.2021) (நேற்று), 548வது நாளாக, தினமும், 350 முதல், 400 நபர்களுக்கு உணவு பொட்டலம் வழங்கிஉள்ளோம்.

போலீஸ், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தி மருந்து, மாத்திரை வழங்கியுள்ளோம். மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன், தினமும் உணவு வழங்கும் சேவையை செய்து கொண்டிருக்கிறோம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
28-ஏப்-202119:03:33 IST Report Abuse
M Selvaraaj Prabu இவர்களின் வங்கி கணக்கு விவரங்களை பகிரலாமே? நன்கொடை அளிக்க விரும்புகிறேன்.
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
27-ஏப்-202112:25:30 IST Report Abuse
ponssasi இது மாவட்டம் தோறும் பல்கி பெறுக வேண்டும். சுயநலமில்லா சேவை செய்பவன் இறைவன். அவனை போற்றினாலும், தூற்றினாலும் இன்முகத்துடன் சென்றுவிடுவான்.
Rate this:
Cancel
MURUGU - SATHYAMANGALAM,இந்தியா
26-ஏப்-202119:28:34 IST Report Abuse
MURUGU இன்றைய தேதி வரை ஐநூற்று ஐம்பத்து ஒன்பது நாட்கள் என்று அறக்கட்டளை உறுப்பினரின் WHATS-ஆப் மூலமாக தெரிவித்து உள்ளார்கள். எனவே நேற்றைய தேதி வரை ஐநூற்று ஐம்பத்து எட்டு நாட்கள் என்பது சரியாக இருக்கும் என தெரிகிறது. தங்களது செய்தியில் இன்றுடன் (25.04.2021) (நேற்று), 548வது நாளாக என்று உள்ளது. தவறு எங்கு நேர்ந்தது என தெரியவில்லை.. இருந்தாலும் , அக் ஷய பாத்திரம் அறக்கட்டளையினர் அன்னதானத்தை தொடர்ந்து வழங்கி வருவது பாராட்டுக்குரியது. வாழ்த்துகள். அவர்களின் பணி மேலும் சிறக்க நாமும் வாழ்த்துவோம் .
Rate this:
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
26-ஏப்-202123:21:56 IST Report Abuse
M Selvaraaj Prabuஉங்களுக்கு இப்ப என்ன பிரச்சினை? ரூம் போட்டு யோசித்தீர்களோ? அந்த ஒரு நாள் விடுபட்டதால் என்ன ஆச்சு?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X