ரம்ஜான் சிந்தனைகள் 13

Added : ஏப் 26, 2021
Advertisement
நிம்மதியாக வாழ்வோம் தர்மநெறி தவறாமல் நிம்மதியாக வாழும் மூவர் யார் என நபிகள் நாயகம் குறிப்பிடுகிறார். * தனக்கு மட்டுமின்றி பிறருக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திப்பவர் வாழ்வில் ஏமாற்றம் அடைய மாட்டார். ஆனால் சுயநலத்துடன் செயல்படுவோரை இறைவன் கைவிடுவான்.* பணியில் ஈடுபடும் முன்பு, ஒரு முறைக்கு நான்கு முறை யோசித்து செயல்படுபவர் துன்பத்தில் சிக்க
 ரம்ஜான் சிந்தனைகள் 13

நிம்மதியாக வாழ்வோம்

தர்மநெறி தவறாமல் நிம்மதியாக வாழும் மூவர் யார் என நபிகள் நாயகம் குறிப்பிடுகிறார்.

* தனக்கு மட்டுமின்றி பிறருக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திப்பவர் வாழ்வில் ஏமாற்றம் அடைய மாட்டார். ஆனால் சுயநலத்துடன் செயல்படுவோரை இறைவன் கைவிடுவான்.

* பணியில் ஈடுபடும் முன்பு, ஒரு முறைக்கு நான்கு முறை யோசித்து செயல்படுபவர் துன்பத்தில் சிக்க மாட்டார். ஆனால் உலகில் பலர் யோசிக்காமல் தேவையற்ற விஷயங்களில் ஈடுபட்டு துன்பத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக பணவிஷயத்தில் நெருக்கடி ஏற்படாமல் இருக்க வரவுக்கேற்ப செலவு இருக்க வேண்டும்.

* நடுநிலையுடன் இருப்பவர் வறுமையின் பிடியில் சிக்க மாட்டார். இரு குடும்பத்திற்கு இடையே அல்லது தம்பதிக்கு இடையே பிரச்னை என்றால், ஒரு சார்பாக பேசுபவர் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. ஏனெனில் அவர் எதிர்தரப்பினரின் சாபத்திற்கு ஆளாவார்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:29 மணி

நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:12 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X