திருப்பதி ஏழுமலையானுக்கு 'இன்னோவா' கார் நன்கொடை

Updated : ஏப் 26, 2021 | Added : ஏப் 26, 2021 | கருத்துகள் (31) | |
Advertisement
திருப்பதி:திருமலை ஏழுமலையானுக்கு, 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 'இன்னோவா' கார் நன்கொடையாக வழங்கப்பட்டது.திருமலை ஏழுமலையானுக்கு, திருப்பதியில் உள்ள ஹர்ஷா டயோட்டா நிறுவனத்தினர், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இன்னோவா காரை, நேற்று நன்கொடையாக வழங்கினர். காருக்கு மாவிலை, சந்தன குங்குமம் இட்டு, அலங்கரித்து பூஜை செய்து, பழங்கள் படைத்து வழிபட்டு, அதிகாரிகள் அதன் சாவியை

திருப்பதி:திருமலை ஏழுமலையானுக்கு, 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 'இன்னோவா' கார் நன்கொடையாக வழங்கப்பட்டது.latest tamil newsதிருமலை ஏழுமலையானுக்கு, திருப்பதியில் உள்ள ஹர்ஷா டயோட்டா நிறுவனத்தினர், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இன்னோவா காரை, நேற்று நன்கொடையாக வழங்கினர். காருக்கு மாவிலை, சந்தன குங்குமம் இட்டு, அலங்கரித்து பூஜை செய்து, பழங்கள் படைத்து வழிபட்டு, அதிகாரிகள் அதன் சாவியை பெற்றுக் கொண்டனர்.


latest tamil news

குறைந்தது வருமானம்கொரோனா பீதி மற்றும் கட்டுப்பாடு காரணமாக, திருமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில், 85 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலானது.கடந்த ஜூன் மாதம் ஊரடங்கிற்கு பின் துவங்கப்பட்ட ஏழுமலையான் தரிசனத்தின் போது, உண்டியல் வருவாய் லட்சங்களிலிருந்து, கோடியை தொட்டு சராசரியானது. தற்போது மீண்டும் சிறிது சிறிதாக குறைந்து, லட்சத்திற்கு சரிந்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
26-ஏப்-202115:22:21 IST Report Abuse
g.s,rajan ஆனா பெருமாளே உள்னால இந்தியாவுல டீசல் போட்டு ஓட்டமுடியாது ,உன்னோட வருமானத்துக்கும் உன்னோட உண்டியல் வசூலுக்குமே கட்டுப்படியாகாது .நாங்க வண்டியை வச்சுக்கிட்டு நாய் படாத பாடு படறோம் வாகனத்தை வாங்கி சும்மா நிறுத்தவும் முடியல விக்கிற விலைவாசியில் காசை செலவழிச்சு பெட்ரோல் மற்றும் டீசல் போட்டு நிரந்தரமா ஒட்டவும் முடியலஎன்ன செய்யறது ??,கிடந்து தவியாத தவிக்கிறோம் ஆனால் உனக்கு கட்டுப்படியாகும் பக்தர்கள் கிட்ட வட்டியும் முதலுமா கறந்துடுவ ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
26-ஏப்-202115:20:22 IST Report Abuse
vnatarajan இந்த காணிக்கையால் சாதாரண மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை . கோவில் அதிகாரிகள்தான் சொகுசாக சவாரி செய்யலாம்.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
26-ஏப்-202114:51:44 IST Report Abuse
Vijay D Ratnam திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் மக்களுக்கு எண்ணற்ற நலப்பணிகள் செய்யப்படுகிறது. திருப்பதி வெங்கடாஜலபதிக்கு கொடுக்கணும்னு ஆசைப்பட்டால் அதற்கு அந்த இருபது லட்ச ரூபாயை கோவில் நிதியில் சேர்க்கவேண்டியது தானே. அவர்கள் அதை கல்வி, சுகாதாரம், அன்னதானம் போன்றவற்றிற்கு சேவா அறக்கட்டளை மூலம் பயன்படுத்திகொள்வார்கள். டொயோட்டா காரை வெங்கடாஜலபதியா பயன்படுத்த போகிறார். கோவில் நிர்வாக அதிகாரிகளுக்கு நல்லா வக்கணையா சொகுசு கார். ஒரு மினி லாரி வாங்கி கொடுத்திருந்தாலாவது கோவிலுக்கு பயன்பட்டு இருக்கும். பணம் இருக்கும் மனிதனிடம் அறிவிருப்பதில்லை. அறிவிற்கும் மனிதனிடம் பணமிருப்பதில்லை.
Rate this:
S.Ganesan - Hosur,இந்தியா
27-ஏப்-202110:25:06 IST Report Abuse
S.Ganesanஉண்மை...
Rate this:
karutthu - nainital,இந்தியா
29-ஏப்-202108:34:31 IST Report Abuse
karutthuஇப்பவும் ஒன்னும் மோசம் போகவில்லை ...இந்த கார் ஐ ஏலம் விட்டால் இருவது லக்ஷத்திற்கு மேல போனால் அந்த பணத்தை கோவில் கணக்கில் சேர்த்துவிடலாம் பிறகு நல்ல காரியங்களுக்கு செலவிடலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X