பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி கட்டண சலுகைகள்; தனியார் பள்ளிகள் தாராளம்!

Added : ஏப் 26, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை : கொரோனா தொற்றால் பள்ளிகளில், 'ஆன்லைன்' வகுப்புகள் மட்டும் நடத்தப்படும் நிலையில், மாணவர் சேர்க்கைக்காக, பல தனியார் பள்ளிகள் சலுகைகளை அறிவித்துள்ளன.கொரோனா தொற்றின் காரணமாக, உலகின் பெரும்பாலான நாடுகளில், பள்ளி, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் நடக்கவில்லை. சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகளில் மட்டும், வழக்கம் போல, கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன. நம் நாட்டிலும்,
school, Private Schools, education fee, education

சென்னை : கொரோனா தொற்றால் பள்ளிகளில், 'ஆன்லைன்' வகுப்புகள் மட்டும் நடத்தப்படும் நிலையில், மாணவர் சேர்க்கைக்காக, பல தனியார் பள்ளிகள் சலுகைகளை அறிவித்துள்ளன.

கொரோனா தொற்றின் காரணமாக, உலகின் பெரும்பாலான நாடுகளில், பள்ளி, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் நடக்கவில்லை. சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகளில் மட்டும், வழக்கம் போல, கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன. நம் நாட்டிலும், தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில், ஓர் ஆண்டாக நேரடி வகுப்புகள் நடக்கவில்லை. அதனால், பள்ளிகளில் மாணவர்கள் படிப்பை பாதியில் விடுவதும், பள்ளி விட்டு பள்ளி மாறுவதும் அதிகரித்துள்ளது.

பெற்றோர் பலர் வாழ்வாதாரம் இழந்ததாலும், பொருளாதார பிரச்னையாலும், தனியார் பள்ளிகளில் இருந்து, அரசு பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை மாற்றியுள்ளனர். நடப்பு கல்வி ஆண்டு முடியும் நிலையில், தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை பணிகள் தீவிரமாகி உள்ளன. ஏற்கனவே, மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், புதிய சேர்க்கைக்கு, பள்ளிகள் தரப்பில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


latest tamil newsவழக்கமாக தனியார் பள்ளிகளில், புதிய மாணவர்களை சேர்க்க நன்கொடை வசூலிக்கப்படும். மாணவர் சேர்க்கைக்கு தனி கட்டணம், கல்வி கட்டணம், சீருடை கட்டணம், கல்வி சார் இணை பயிற்சிகளுக்கு தனி கட்டணம் என, விதவிதமாக கட்டணம் வசூலிக்கப்படும். தற்போதைய நிலையில், கல்வி கட்டணத்தை செலுத்தவே, பெற்றோர் சிரமப்படுவதால், நன்கொடை இன்றி மாணவர்கள் சேர்க்கையை நடத்த, பல பள்ளிகள் முன்வந்துள்ளன. அத்துடன், சேர்க்கை கட்டணமும் வேண்டாம் என, சில பள்ளிகள் அறிவித்துள்ளன.

இன்னும் சில பள்ளிகள், 'கட்டணத்தை பின்னர் செலுத்தலாம்; முதலில் பிள்ளைகளை சேர்த்து கொள்ளுங்கள்' என்றும், அதிரடி சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்த அறிவிப்புகள் பெற்றோரை மகிழ்வித்தாலும், புதிய கல்வி ஆண்டிலாவது பள்ளிகள் இயங்குமா; நேரடி வகுப்புகள் நடக்குமா என, பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PALANISWAMY - COIMBATORE ,இந்தியா
26-ஏப்-202112:50:40 IST Report Abuse
PALANISWAMY கல்வியையும் மருத்துவத்தையும் மட்டும் அரசு இலவசமாக கொடுத்தாலே இன்றைக்கு மக்கள் சந்தோஷப்படுவார்கள். இதைவிடுத்து மிக்ஸி, கிரைண்டர், சமையல் எரிவாயு, மாதம் 1000, 2000 ரூபாய் என்பதெல்லாம் தேவையே இல்லை. Education Cess, Higher Education Cess என்று வசூலிக்கும் அரசின் வருவாய் எங்கே செல்கிறது. எந்த ஊரில் அல்லது கிராமத்தில் மத்திய அரசு கல்வி நிலையங்கள் அமைத்துள்ளன? இந்த வருவாயிலிருந்து grant in aid என்ற பெயரில் தனியார் கல்வி நிறுவனங்களுக்குத்தான் செல்கிறது. மக்களுக்கு தேவையானவற்றை செய்யும் அரசு நம்மிடம் இல்லை. பணத்தை பெற்றுக்கொண்டு வோட்டை செலுத்தும் வரை நமக்கு எதுவும் கிடைக்காது.
Rate this:
Gandhi - Chennai,இந்தியா
26-ஏப்-202116:08:30 IST Report Abuse
Gandhiசாராய வியாபாரிகளிடம் நாட்டை கொடுத்துட்டு குடிக்க சுத்தமான தண்ணீர் எதிர்பார்ப்பதே தவறு. இதில் இலவச கல்வியையும், மருத்துவத்தையும் எதிர்பார்க்கும் ஏமாளிகள் தமிழர்கள்....
Rate this:
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
26-ஏப்-202118:21:39 IST Report Abuse
Loganathan Kuttuvaநவோதய பள்ளிகள் வேண்டாம் என்று தமிழக அரசு சொல்லியதால் கிராமங்களில் மத்திய அரசு பள்ளிகள் இல்லை ....
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
26-ஏப்-202110:07:09 IST Report Abuse
ponssasi அணைத்து அரசு துறை உயர் அதிகாரிகளின் பிள்ளைகளும் தனியார் பள்ளியில் தான் படிக்கின்றனர், அதனால் இவர்கள் வரம்பு மீறும்போதும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
26-ஏப்-202109:33:44 IST Report Abuse
elakkumanan தமிழ் வாச்மன் சொல்லிக்கொடுத்த காரியம் ஆகும் வரை காலை பிடித்து , காரியம் முடிந்ததும் கழுத்தை பிடிக்கும் தத்துவமே இன்றைய டாஸ்மாக் மாநில வாழ்வியலாக இருக்கிறது...............திருடனை மொழி காவலன் , இன மற்றும் பிண காவலன் ன்னு சொல்வதெல்லாம் திராவிட தத்துவங்களின் பரிணாம வளர்ச்சி..................தன்னலமின்றி உழைத்தவர்களை புறம்தள்ளி, திருடனை அல்லது திருடர்களை சபையில் வைத்து , தாமும் இணைந்து , சொத்து சேர்த்து திருட்டு காசில் ரேஷனில் பங்கு வாங்கி, ஒட்டு விற்பனை செய்து , சொரணையற்று வயிறு முட்ட தின்னு வாழ்வதுதான் நமது டாஸ்மாக்கினன் கண்ட பரிணாம உச்சம்..............குடும்பத்தை , குழந்தைகளின் எதிர்காலத்தை விட, தன வயிறு பெரிதாக ஐந்தறிவு விலங்குகள் நினைப்பதில்லை.................ஆனால், அதுதான் ஆறாவது அறிவோ...............சொந்த நாட்டை இளித்து பேசி, காட்டி கொடுத்து , இதெல்லாம் .......ஏழாவது மற்றும் எட்டாவது அறிவு................ வேற்று கிரக மொழி படிப்பது பதினைந்தாவது அறிவு..............ரெண்டு கல்லில் ஒன்றில் ஈரோட்டையும் மற்றொன்றில் கல்லையும் காணும் அறிவு இருபதாவது அறிவு..............நீட் தேர்வு எழுத மறுப்பது அறிவின் உச்சம்...........திராவிட ஆட்சியில் அறிவின் வளர்ச்சியின் பரிணாமம் ................டாஸ்மாக் என்பது தொழில் வளர்ச்சி................ தாமிரம், உயிரை கொல்லும்...புகையிலையும் சாராயமும் அறிவை ஆன்மாவை வளர்க்கும்.............திராவிட அறிவு ன்னா சும்மா அதிருத்துள்ள ..................
Rate this:
Naresh Giridhar - Chennai,இந்தியா
26-ஏப்-202115:18:29 IST Report Abuse
Naresh Giridharவெயிலில் ரொம்ப சுத்தாதீங்க ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X