புதுடில்லி : காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மாநிலங்கள், 'தடுப்பூசிகளை மத்திய அரசே எடுத்துக் கொண்டுள்ளதால், 18 - 45 வயதுக்குட்பட்டோருக்கு, எங்களால் தடுப்பூசி போட முடியாத சூழல் நிலவுகிறது' என, அதிருப்தி தெரிவித்துள்ளன.
சத்தீஸ்கர், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், காங்., ஆட்சியும், ஜார்க்கண்டில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியும் நடக்கின்றன. இந்த நான்கு மாநிலங்களின் சுகாதாரத் துறை அமைச்சர்கள், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

மத்திய அரசு, வரும் 1ம் தேதி முதல், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போட அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், எங்களிடம் போதிய தடுப்பூசி இல்லை. தடுப்பூசிகள் அனைத்தையும், மத்திய அரசு எடுத்துக் கொண்டுள்ளது. மாநிலங்களின் தேவைக்கேற்ப, பாரபட்சமின்றி, தடுப்பூசிகளை இலவசமாக, மத்திய அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE