பொது செய்தி

இந்தியா

இந்தியாவுக்கு தடுப்பூசி மூலப்பொருள்: அமெரிக்கா சம்மதம்

Updated : ஏப் 26, 2021 | Added : ஏப் 26, 2021 | கருத்துகள் (42)
Share
Advertisement
புதுடில்லி: தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள், உடனடியாக இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிக தீவிரமாக உள்ளது. தடுப்பூசி, மருந்து உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.
India, US, Corona Vaccine, raw material, Covid 19

புதுடில்லி: தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள், உடனடியாக இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிக தீவிரமாக உள்ளது. தடுப்பூசி, மருந்து உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. அந்தத் தடையை நீக்கி, மூலப்பொருட்களை அனுப்பி வைக்க, மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. முதலில் அதை, அமெரிக்கா ஏற்கவில்லை. இந்நிலையில், தடையை தளர்த்தி, இந்தியாவுக்கு மூலப் பொருட்களை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.


latest tamil newsஇந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை தொடர்புகொண்டு பேசிய, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் இதனை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை: கோவிஷீல்ட் தடுப்பூசியை இந்தியா உற்பத்தி செய்வதற்கு தேவையான மூலப்பொருட்களை அமெரிக்கா உடனடியாக இந்தியாவுக்கு அனுப்ப உள்ளது.

மேலும், கொரோனா சிகிச்சைகள், சோதனைகளுக்கு தேவையான உபகரணங்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை இந்தியாவுக்கு அமெரிக்கா உடனடியாக வழங்கும். மேலும், அவசரநிலை அடிப்படையில், இந்தியாவுக்கு தேவையான ஆக்சிஜன் உற்பத்தி கருவிகளை வழங்கவும் அமெரிக்கா முடிவு செய்திருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murthy - Bangalore,இந்தியா
26-ஏப்-202120:49:12 IST Report Abuse
Murthy அமெரிக்க தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளதால்......அவர்களும் அனுமதித்துள்ளார்கள்......
Rate this:
Cancel
Suman - Mayiladuthurai ,இந்தியா
26-ஏப்-202117:14:20 IST Report Abuse
Suman வெள்ளை மாளிகை முன்பு போராடியவர்கள் இப்பொழுது போராடலைவில்லையா....மாதம் ஒரு முறை திடீர் திடீர் போராளிகள்...
Rate this:
Cancel
anbu -  ( Posted via: Dinamalar Android App )
26-ஏப்-202115:54:11 IST Report Abuse
anbu Congress communists and other UPA parties are playing politics even during this tough time they are all not a human being definitely they will have to face the consequences
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X