தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றுள்ள சுஷில் சந்திரா, 'இந்தியன் ரெவின்யூ சர்வீஸ்' அதிகாரியாக, வருமான வரித்துறையில் தலைவராக பணியாற்றியவர். தற்போது அவர், தமிழக தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பட்டியலிலிருந்து, யார் யார் கோடீஸ்வரர்கள் என தகவல் திரட்டியுள்ளார்.
தேர்தல் சமயத்தில், தமிழகத்தில் எங்கு சோதனை நடந்ததோ, அந்த விபரங்களையும் ஆய்வு செய்து வருகிறார். முக்கிய அரசியல் கட்சிகளின் குறிப்பிட்ட சில வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்துள்ள அவர், இதை சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் தாக்கல் செய்த வருமான வரி விபரங்களோடு ஒப்பிட்டு ஆராய்ந்து வருகிறார்; இது, தி.மு.க.,வினரை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

சபரீசன் வீட்டில் சோதனை நடத்திய விபரங்களையும், தலைமை தேர்தல் ஆணையர் ஆராய்ந்து வருவது தான், இதற்கு காரணம். தமிழக அரசியல்வாதிகளின் தில்லு முல்லு, இவருக்கு நன்றாக தெரியும் என்கின்றனர், தேர்தல் ஆணைய அதிகாரிகள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE