கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை: தலைமை நீதிபதி காட்டம்

Updated : ஏப் 26, 2021 | Added : ஏப் 26, 2021 | கருத்துகள் (151)
Share
Advertisement
சென்னை: அரசியல் கட்சிகள் சமூக இடைவெளியின்றி இஷ்டம் போல் பிரசாரம் செய்ததை தடுக்காமல் விட்டு, கொரோனா 2வது அலை பரவலுக்கு காரணமான தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி கடுமையாக சாடினார்.கரூரில் ஓட்டு எண்ணிக்கையின்போது கொரோனா விதிகளை பின்பற்றும் வகையில் ஏற்பாடுகள் செய்யக் கோரி அமைச்சர்
ChennaiHC, ElectionCommission, CoronaSecondWave, Tamilnadu, தமிழகம், கொரோனா, இரண்டாவது அலை, தேர்தல் ஆணையம், சென்னை, உயர்நீதிமன்றம்

சென்னை: அரசியல் கட்சிகள் சமூக இடைவெளியின்றி இஷ்டம் போல் பிரசாரம் செய்ததை தடுக்காமல் விட்டு, கொரோனா 2வது அலை பரவலுக்கு காரணமான தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி கடுமையாக சாடினார்.

கரூரில் ஓட்டு எண்ணிக்கையின்போது கொரோனா விதிகளை பின்பற்றும் வகையில் ஏற்பாடுகள் செய்யக் கோரி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வில் இன்று (ஏப்.,26) விசாரணைக்கு வந்தது. அப்போது சஞ்சீப் பானர்ஜி தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடினார். அவர் கூறியதாவது:
கொரோனா 2ம் அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம். சமூக இடைவெளியின்றி அரசியல் கட்சிகள் இஷ்டம் போல் பிரசாரம் செய்ததை தடுக்காமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?


latest tamil news




ஓட்டு எண்ணிக்கைக்கு தடை எச்சரிக்கை


இன்றைக்கு உள்ள நிலைக்கு முழுமையாக தேர்தல் ஆணையமே காரணம். கொரோனா பரவலை கட்டுப்படுத்த நீதிமன்றம் எவ்வளவோ அறிவுறுத்தியும் நீங்கள் (தேர்தல் ஆணையம்) காதில் வாங்கவில்லை. உங்கள் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாவிட்டால் ஓட்டு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும்.


latest tamil news



ஓட்டு எண்ணிக்கை நாளன்று அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். சுகாதாரத்துறை செயலர் மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனரிடம் உரிய ஆலோசனை பெற்று முழுமையான அறிக்கையாக வரும் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் உத்தரவிட்டார். இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில், ‛தமிழகம் முழுவதும் ஓட்டு எண்ணிக்கையின் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்,' என பதிலளிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (151)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஏப்-202115:31:32 IST Report Abuse
கதைசொல்லி தேர்தல் நடத்தலாமா வேண்டாமா என ஆணையம் நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் தேர்தல் நடத்த வேண்டாம் என்று கூறிய கட்சி எது. தேர்தல் பரப்புரைக்கு தடை விதிக்க முடியாதென சென்ற மாதம் தீர்ப்பு வழங்கியது யார்.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
27-ஏப்-202108:21:03 IST Report Abuse
g.s,rajan நமது இந்திய நாட்டில்வெகுவாக ஜனத்தொகையைக் குறைத்த புண்ணியத்தை தேர்தல் ஆணையம் கட்டிக்கொள்ளட்டும் ஏதோ அவர்களால் முடிந்ததது நாட்டிற்கு ,செய்யட்டுமே .ஏற்கனவே மத்திய அரசு மக்கள் தொகை இந்தியாவுல ரொம்ப அதிகமா இருக்கிறதால ரொம்பத் திணறுது .எதுவுமே உருப்படியா செய்ய முடியலே ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Cancel
Sivaraman - chennai ,இந்தியா
27-ஏப்-202107:16:00 IST Report Abuse
Sivaraman டாஸ்மார்க் குறித்து அரசாங்கம் மீது இது போன்ற கருத்துக்கள் ஏன் இல்லை ? தேர்தல் கூட்டங்களைவிட அதிக நெரிசலுடன் கூட்டம் மோதியதைப் பார்த்தோமே ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X