தேவை தேசிய பொது முடக்கம்: கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே வழி!| Dinamalar

தேவை தேசிய பொது முடக்கம்: கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே வழி!

Updated : ஏப் 27, 2021 | Added : ஏப் 26, 2021 | கருத்துகள் (121) | |
புதுடில்லி: இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் என்று எகிறி வருகிறது. அரசும், பொதுமக்களும் எவ்வாறு தான் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும் நிலைமை கைமீறி போய்க்கொண்டு இருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தியாவில் 22 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. நேற்று (ஏப்.,25) ஞாயிறு மட்டும் 3.52 லட்சம் பேருக்கு கொரோனா
India Fights Corona, Lockdown, curfew, Covid, CoronaVirus, கொரோனா, இந்தியா, பொது முடக்கம், ஊரடங்கு, தேவை

புதுடில்லி: இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் என்று எகிறி வருகிறது. அரசும், பொதுமக்களும் எவ்வாறு தான் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும் நிலைமை கைமீறி போய்க்கொண்டு இருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தியாவில் 22 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. நேற்று (ஏப்.,25) ஞாயிறு மட்டும் 3.52 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

விஞ்ஞானிகள் அளித்துள்ள அடுத்த எச்சரிக்கை மேலும் அதிர்ச்சியை தருகிறது. அடுத்த மாதம் மத்தியில் நம் நாட்டில் 48 லட்சம் பேரை கொரோனா தாக்கும் என்று அபாய மணி ஒலித்துள்ளனர். அப்படி ஒரு நிலைமை வந்தால் எப்படி சமாளிப்பது? கொரோனா பரவலுக்கு இனிமேலும் யார் காரணம் என்று ஒருவரை ஒருவர் குறை சொல்லி பலன் இல்லை. பரவலுக்கு எந்த காரணம் இருந்தாலும் அதை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.latest tamil news


நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இப்போதே ஆக்சிஜன் தட்டுப்பாடு வந்துவிட்டது. சில வட மாநில மருத்துவமனைகளில் இடமில்லை. இப்படியே தொடர்ந்தால் நாடு முழுவதும் இந்த பரிதாப நிலை ஏற்படும். அதற்கு முன் நாம் விழித்துக்கொள்ள வேண்டும். இதற்கு ஒரே வழி தேசிய பொது முடக்கத்தை அறிவிப்பது தான். பொது முடக்கத்தை அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் யோசிப்பதற்கு காரணம், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது தான். இது உண்மையாக இருந்தாலும் கூட, மனித உயிர்களை விட பணம் பெரிதல்ல. இதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.latest tamil news


வரலாற்றில் இதுவரை சந்திக்காத ஒரு அபாயகரமான சூழ்நிலையை இந்தியா சந்தித்து வருகிறது. எனவே ஒரு மாதமாவது பொது முடக்கத்தை தேசிய அளவில் அறிவித்து கொரோனா பரவல் சங்கிலியை அறுக்க வேண்டும். முன்னதாகவே மக்களை எச்சரித்துவிட்டு பொது முடக்கத்தை அறிவிக்கலாம். அதற்கு முன் பொது முடக்கத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். இதில் யாரும் எந்த அரசியலும் செய்யக்கூடாது. நோயை கட்டுப்படுத்துவதில் அனைவருக்கும் பங்கு உண்டு என்று அனைத்து அரசியல் கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.பொது முடக்கத்திற்கு எதிராக கருத்து சொல்பவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது முடக்கம் என்பது முழுக்க முழுக்க மக்களின் நலனுக்கானது என்பதை அறிய வேண்டும். கொரோனா கட்சிகள் பார்த்து யாரையும் தாக்குவது இல்லை. வைரஸ் முன்பு ஆண்டி முதல் அரசன் வரை அனைவரும் சமம். யாரும் விதிவிலக்கு அல்ல. எனவே அனைத்து அரசியல் கட்சிகளும் பொது முடக்கத்தை ஆதரிக்க வேண்டும். அதை செய்தால் தான் இந்தியாவை காப்பாற்ற முடியும்.latest tamil news


இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், ‛‛மே, ஜூன் மாதங்களில் பொது முடக்கத்தை அறிவித்துவிட்டு ஒரு நாளைக்கு 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டாலும் 18 கோடி பேரை எளிதாக தொட்டுவிடலாம். பொது முடக்கத்தின் மூலம் வைரஸ் பரவல் செயினை அறுத்துவிட்டு 45 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டு விட்டால் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்திவிடலாம் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. அதுமட்டுமல்ல, மே ஜூனில் கடும் வெப்பம் இருக்கும். சுற்றுலா தவிர அப்போது மற்ற வியாபாரங்கள் மந்தமாகவே இருக்கும். பொது முடக்கத்தால் பள்ளி, கல்லூரிகளும் மூடியிருக்கும். எனவே மக்களுக்கு பெரிய அளவில் வாழ்வாதார பாதிப்பு இருக்காது. ஜூலைக்குப் பிறகு நிலைமை சீரடைய வாய்ப்பிருக்கிறது,'' என்றனர்.இவ்வளவு ஆண்டுகள் கட்டி காத்து வளர்த்த ஒரு மாபெரும் நாட்டை ஒரு அற்பமான வைரசுக்கு பலி கொடுக்கலாமா? பொது முடக்கத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்க வேண்டும் என்பதே இப்போதைய எதிர்பார்ப்பு.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X