பொது செய்தி

இந்தியா

திமுக ஆட்சி அமைந்ததும் ஸ்டெர்லைட் ஆலை எந்த சூழலிலும் திறக்கப்படாது: ஸ்டாலின் உறுதி

Updated : ஏப் 26, 2021 | Added : ஏப் 26, 2021 | கருத்துகள் (122)
Share
Advertisement
சென்னை: ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தற்காலிகமாக 4 மாதங்களுக்கு திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், திமுக ஆட்சி அமைந்ததும் ஸ்டெர்லைட் ஆலை எந்த சூழலிலும் திறக்கப்படாது என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், ஆக்சிஜன் தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தூத்துக்குடி
DMK, Stalin, Sterlite, திமுக, ஸ்டாலின், ஸ்டெர்லைட் ஆலை, தூத்துக்குடி

சென்னை: ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தற்காலிகமாக 4 மாதங்களுக்கு திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், திமுக ஆட்சி அமைந்ததும் ஸ்டெர்லைட் ஆலை எந்த சூழலிலும் திறக்கப்படாது என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், ஆக்சிஜன் தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது, திமுக தரப்பில், ‛ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதி அளிக்க வலியுறுத்தப்பட்டது.


latest tamil news


தொடர்ந்து, 4 மாதங்களுக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளிப்பதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதாவது: ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்குவது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தி.மு.க சார்பில் அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி, மகளிரணிச் செயலாளரும், எம்.பி.,யுமான கனிமொழி ஆகியோர் பங்கேற்று, திமுக.,வின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர்.

மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும் தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம், அதற்கான மின்சாரத்தை வழங்கலாம் என்று தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இம்முடிவு தற்காலிகமானதுதான். தி.மு.க ஆட்சி அமைந்த பிறகும் நச்சு ஆலையான ஸ்டெர்லைட் எப்போதும் எந்தச் சூழலிலும் திறக்கப்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (122)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஏப்-202112:34:43 IST Report Abuse
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு கீதா ஜீவன் மாறும் குடும்பத்தினர் ஸ்டெரிலிட்டுக்கும் கருணாநிதிக்கும் பாலமாக இருந்து பல நூறு கோடிகள் சம்பாதித்தை தூத்துகுடி பெர்னாண்டஸுக்கள் நன்கு அறிவார்கள்
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
27-ஏப்-202112:04:36 IST Report Abuse
dina ஸ்டெர்லைட் ஆலையில் சாராயம் (டிஸ்டிள்ளேரிஸ்) தயாரிக்க முடியும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் நினைத்து விட்டாரேயென்று எண்ணவேண்டியிருக்கின்றது. பதினைந்து வருடமாய் இலவு காக்கிறான். பதினைந்து நாளேனும் சிற்றின்பம் இருக்கட்டுமே. ஸ்டாலினின் நிலைமை மிக பரிதாபமாக உளள்து. ஏகத்துக்கு ஆசைப்பட்டு விட்டார். நிச்சயம் அவர் தோல்வியைத் தான் அடைவார். அப்போது அவரது நிலைமை மிக மோசமாக இருக்கும். தயவு செய்து அவரை அணுக்கமாக இப்போதிருந்தே கண்காணியுங்கள். பாவமே..என்னென்னமோ கனவில் மிதக்கின்றார். அதில் முதல்வர் கனவு முதன்மையில்
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
27-ஏப்-202106:20:15 IST Report Abuse
RajanRajan தமிழக அரசிடம் "ஸ்டெர்லைட்" பற்றி கனிமொழி MP கேட்ட கேள்விக்கு பதில் கனிமொழி அவர்களே, ஸ்டெர்லைட் விரிவாக்கத்துக்கு இன்று தமிழக அரசிடம் கேள்வி கேட்கும் நீங்கள் உங்கள் ஆட்சியில் நீங்கள் மக்களிடம் கருத்து கேட்டீர்களா? இன்று தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி "மக்களின் கருத்தைக் கேட்ட அரசு அதனை நீதிமன்றத்தில் அழுத்தமாக எடுத்து வைக்க வேண்டும்" என்கிறார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் விரிவாக்கத்துக்கு நீங்கள் உறுப்பு வகிக்கும் திமுக அரசு அன்று கருத்துக் கேட்பு கூட்டம் ஏதும் நடத்தியதா? திமுக தூத்துக்குடி மக்களவை உறுப்பினரான இருந்த எஸ். ஆர். ஜெயதுரை 2010 ஆகத்து 11ஆம் தேதி மக்களவையில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சரான ஜெய்ராம் ரமேஷிடம் ஒரு வினா (எண்-2868) தொடுக்கிறார்: "அ. ஸ்டெர்லைட் ஆலையை இருமடங்காக விரிவாக்கிக் கொள்ள மக்கள் கருத்துக் கேட்பு இல்லாமலே மத்திய அரசு அனுமதி அளித்ததா? ஆ. ஆம் என்றால், அதற்கான விவரம் என்ன? காரணம் என்ன?" இதற்கு ஜெய்ராம் ரமேஷ் அளித்த பதில் (சுருக்கமாக) - "ஸ்டெர்லைட் விரிவாக்கத்துக்கு 2009 சனவரி 01ஆம் நாள் அனுமதி தரப்பட்டது. இந்த அனுமதி 2006 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டது. இந்த அறிக்கையின்படி மக்களிடம் கருத்துக் கேட்பு ஏதும் நடத்தத் தேவையில்லை." திமுக மக்களவை உறுப்பினர் எவ்வளவு அப்பாவியாக இருந்திருக்கிறார் பாருங்கள் ஆனால் ஜெய்ராம் ரமேஷ் கெட்டிக்காரத்தனமாக தனக்கும் ஸ்டெர்லைட் விரிவாக்க அனுமதிக்கும் தொடர்பு ஏதும் இல்லை எனப் போட்டு உடைக்கிறார் சரி, 2006 சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை உருவாக்கியவர் யார்? அதாவது 2006இல் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தவர் யார்? ஆ. ராசாதான். ஆக, திமுக மத்திய அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி "எந்த ஆலை விரிவாக்கத்துக்கும் மக்கள் கேருத்துக் கூட்டம் தேவையில்லை" எனச் சட்டம் இயற்றிக் கொண்டது. அன்றைய கலைஞரும் இந்த விதியைப் பயன்படுத்தி வேதாந்தாவுக்கு ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு மக்களின் கருத்தைக் கேட்காமலே அனுமதி அளித்தார். ஏன் இப்படி அனுமதியளித்தீர்கள்? என்று மறைந்த உங்களின் தந்தையிடம் கேட்க முடியாது . ஆனால் இன்றைய மக்களவை உறுப்பினர் ஆ. ராசாவைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்கலாம் அல்லவா? முதலில் ஆ. ராசா அவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டு விட்டு தமிழ்நாடு அரசைப் பார்த்து நீங்கள் வினா தொடுக்கலாமே? பகிர்வுக்கு நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X