மே 1, 2-ம் தேதிகளில் முழு ஊரடங்கு: சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை

Added : ஏப் 26, 2021 | கருத்துகள் (33) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் மே 2-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அதற்கு முந்தைய தினத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.தமிழகத்தில் கடந்த 6-ம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை வரும் மே 2ம் தேதி நடைபெறுகிறது. இதற்கிடையே தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருவதால், அதனை
ChennaiHC, Tamilnadu, FullCurfew, Lockdown, PollingDate, May1, May2, Recommendation, சென்னை, உயர்நீதிமன்றம், தமிழகம், ஓட்டு எண்ணிக்கை, பரிந்துரை, முழு ஊரடங்கு

சென்னை: தமிழகத்தில் மே 2-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அதற்கு முந்தைய தினத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 6-ம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை வரும் மே 2ம் தேதி நடைபெறுகிறது. இதற்கிடையே தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருவதால், அதனை கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், மே 2-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறவுள்ளதால், அதற்கு முந்தைய நாளில் மக்கள், அரசியல் கட்சியினர் கூடுவதற்கு வாய்ப்புள்ளது.



latest tamil news


இதனையடுத்து, அரசு விடுமுறை நாளான மே 1 மற்றும் ஓட்டு எண்ணிக்கை நாளான மே 2 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. மே 2ல் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு வருவோருக்கு மட்டும் விலக்கு அளிக்கவும் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. மேலும், மக்கள் அதிகளவில் கூடினால் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, அதனைத் தடுக்கும் நோக்கில் மட்டுமே அன்றைய நாட்களில் ஊரடங்கை பிறப்பிக்க நீதிமன்றம் பரிந்துரைப்பதாகவும், இதில் எந்தவித அரசியல் பின்புலமும் இல்லை என்றும் நீதிபதிகள் விளக்கமளித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sangu - coimbatore,இந்தியா
27-ஏப்-202106:40:05 IST Report Abuse
sangu மே 1,2அல்ல மே 3ம விடுமுறை விடவேண்டும்.
Rate this:
Cancel
Marcopolo - Chennai,இந்தியா
27-ஏப்-202106:28:44 IST Report Abuse
Marcopolo நோய் பரவுகின்ற இந்நாட்களில் இந்த மாதிரி முடிவு எடுத்தால் நல்லது,
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
26-ஏப்-202122:28:07 IST Report Abuse
அசோக்ராஜ் அது போதாது யுவர் ஆனர். இன்னிலேர்ந்து பெரியார் மண்ணில் துளி விஷம், முழம் கயிறு, பேனாக்கத்தி, க்ரிஸ்னாயில் இன்ன பிற தற்கொலைக் கருவிகள் விற்கக்கூடாதுன்னு ஃபத்வா போடுங்க. அந்தக் கட்சித்தலைமை அனுதாபத்துக்காக சில பல தொண்டர்களை ரத்த சாட்சி ஆக்குவாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X