பொது செய்தி

தமிழ்நாடு

'ஓட்டு எண்ணும் பணியாளர், முகவர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்'

Updated : ஏப் 28, 2021 | Added : ஏப் 26, 2021 | கருத்துகள் (5+ 13)
Share
Advertisement
சென்னை :''ஓட்டு எண்ணும் மையத்திற்குள் செல்லும் பணியாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள், 72 மணி நேரத்திற்குள்ளாக, கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் அல்லது கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி:ஓட்டு எண்ணிக்கை, மே, 2ம் தேதி காலை, 8:00 மணிக்கு துவங்கும். ஓட்டு எண்ணும்
ஓட்டு ,பணியாளர், முகவர்கள், தடுப்பூசி , வேண்டும்'

சென்னை :''ஓட்டு எண்ணும் மையத்திற்குள் செல்லும் பணியாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள், 72 மணி நேரத்திற்குள்ளாக, கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் அல்லது கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:ஓட்டு எண்ணிக்கை, மே, 2ம் தேதி காலை, 8:00 மணிக்கு துவங்கும். ஓட்டு எண்ணும் மையத்திற்குள் செல்லும் பணியாளர்கள், வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள், ஓட்டு எண்ணிக்கை துவங்கும், 72 மணி நேரத்திற்குள், கொரோனா பரிசோதனை செய்து, 'நெகட்டிவ்' சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.பரிசோதனை செய்ய, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யும். அனுமதி அளிக்கப்பட்ட, தனியார் பரிசோதனை கூடங்களிலும், பரிசோதனை செய்து கொள்ளலாம்.கொரோனா பரிசோதனை செய்யாதவர்கள், குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.


பரிசோதனை



இது தவிர, ஓட்டு எண்ணும் மையத்திற்குள் வரும் அனைவரும், முக கவசம், பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்ட முகத்தடுப்பு அணிய வேண்டும். உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும். கிருமி நாசினியால் கைகளை, அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். ஓட்டு எண்ணும் மையம் முழுதும், கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்படும். தேர்தல் நடத்தும் அலுவலரின் உடல் நலம் பாதிக்கப்பட்டால், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில், ஓட்டு எண்ணிக்கை நடக்கும்.

ஓட்டுச்சாவடி முகவர்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டால், வேறு நபரை தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி பெற்று, அழைத்து வரலாம். அவரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.ஓட்டு எண்ணிக்கை குறைந்தது, 14 மேஜைகளில் நடக்கும். ஒவ்வொரு மேஜையிலும், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்கும். ஓட்டு எண்ணும் அறை முழுதும், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்கும். ஓட்டு எண்ணிக்கை முழுமையாக, கேமராவில் பதிவு செய்யப்படும்.


அனுமதி



தபால் ஓட்டுகளை பொறுத்தவரை, ஒரு மேஜையில், 500 ஓட்டுகள் எண்ணப்படும். தபால் ஓட்டுகளின் எண்ணிக்கைக்கேற்ப, மேஜைகள் ஒதுக்கப்படும். தபால் ஓட்டுகளை எண்ணி முடிக்காவிட்டாலும், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளை எண்ணி முடிக்க, அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது.கடந்த, 23ம் தேதி வரை, நான்கு லட்சத்து, 99 ஆயிரத்து, 964 தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.இவ்வாறு, சத்யபிரதா சாஹு கூறினார்.


தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் செயலர் உமேஷ் சின்ஹா ஆலோசனை



ஓட்டு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய, கொரோனா நோய் தடுப்பு வழிமுறைகள் குறித்து, தேர்தல் அதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை நடந்தது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்க மாநிலங்களில், சட்டசபை பொதுத்தேர்தல் நடந்துள்ளது. நான்கு மாநிலங்களில், தேர்தல் முடிந்துள்ள நிலையில், மேற்கு வங்கத்தில், வரும், 29ம் தேதியுடன் தேர்தல் முடிகிறது.

ஐந்து மாநிலங்களிலும், மே 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. ஓட்டு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, இந்திய தேர்தல் கமிஷன் பொது செயலர் உமேஷ் சின்ஹா, நேற்று ஆலோசனை நடத்தினார்.'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, தேர்தல் நடந்த மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுடன், ஆலோசனை நடந்தது.கூட்டத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன், இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆனந்த், அஜய்யாதவ், மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (5+ 13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
27-ஏப்-202113:52:21 IST Report Abuse
Rafi திரு ஸ்டாலின் அவர்கள் கடைசி நிமிடம் வரை முகவர்களை ரகசியம்மாகவே வைத்திருங்கள், எதற்கும் விலை என்ற நிலையில் நாம் இந்த தேர்தலை எதிர் கொண்டிருக்கின்றோம். தமிழகத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் நடை பெற, வங்கத்தில் எட்டு முறை அதையே காரணமாக்கி, தேர்தல் முடிவிற்கு மாத கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையாக்கி, அதிலும் பல தில்லு முல்லுகளுக்கு உரம் ஏற்படுவது போல் நடை பெட்ரா செய்திகள் சேகரித்து தேர்தல் கமிஷனுக்கு அனுப்பிய நிகழ்வுகளையும் நாடு சந்தித்தது, கவனம், மக்கள் உங்கள் பக்கம் இருந்தாலும், சிஸ்டத்தில் வேலை செய்பவர்கள் நாடு விட்டு, வேறு நாடுகளில் இருந்தே வேலை செய்ய முடியும் காலத்தில் இருக்கின்றோம், எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்க முடியும் என்ற நிலையில் தேர்தல் கமிஷன் விடாப்பிடியாக இயந்திரம் மூலம்மாக தான் தேர்தலை நடத்துவேன் என்று அடம் பிடித்து அதில் உருத்தியாக இருந்து தேர்தலை நடத்தி விட்டது. எச்சரிக்கை...
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
27-ஏப்-202112:53:52 IST Report Abuse
Rengaraj கொரோனா நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கட்சிகளின் முகவர்கள் அனுமதிக்கப்படவேண்டும். கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு டோஸ் போடப்பட்டிருக்க வேண்டும். அந்த சான்றிதழும் தரவேண்டும். விதி முறைகளை மீறியதற்காக வோட்டு எண்ணிக்கை நிறுத்தப்பட்டால் அதில் எந்த அரசியல் தலையீடும், குறுக்கீடும் இருக்காது என்று வேட்பாளரிடம் உறுதிமொழி வாங்க வேண்டும். நீதிமன்றம் செல்ல மாட்டோம் என்றும் உறுதிமொழி தரவேண்டும். அப்போதுதான் அரசியல் கட்சிகளிடம் ஒரு கட்டுப்பாடு இருக்கும்.
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
27-ஏப்-202110:44:02 IST Report Abuse
R. Vidya Sagar தும்பை விட்டுட்டு . . . எல்லாம் கோர்ட் கொடுத்த சவுக்கடிதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X