கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணிக்கையை நிறுத்துவோம்: ஐகோர்ட் எச்சரிக்கை

Updated : ஏப் 28, 2021 | Added : ஏப் 26, 2021 | கருத்துகள் (19+ 53)
Share
Advertisement
சென்னை :'பொது மக்கள் பாதுகாப்பில், எந்தவித சமரசமும் செய்து கொள்ள முடியாது; கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்புடன் பின்பற்றாவிட்டால், ஓட்டு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க நேரிடும்' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.கரூர் சட்டசபை தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு:கரூர் தொகுதியில், 77 பேர்
ஓட்டு எண்ணிக்கை,நிறுத்து , ஐகோர்ட், எச்சரிக்கை

சென்னை :'பொது மக்கள் பாதுகாப்பில், எந்தவித சமரசமும் செய்து கொள்ள முடியாது; கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்புடன் பின்பற்றாவிட்டால், ஓட்டு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க நேரிடும்' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

கரூர் சட்டசபை தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு:கரூர் தொகுதியில், 77 பேர் போட்டியிட்டனர். ஓட்டு எண்ணிக்கை நடத்த, இரண்டு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்களின் முகவர்களை அனுமதிக்கும்போது, இடைவெளி இருக்காது. ஓட்டு எண்ணிக்கையை மூன்று அறைகளில் நடத்தவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்புடன் பின்பற்றவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.


ஓட்டுப் பதிவுதேர்தல் கமிஷன் சார்பில், வழக்கறிஞர் நிரஞ்சன் ஆஜராகி, ''ஓட்டு எண்ணிக்கைக்காக, 4,900 மற்றும் 3,400 சதுர அடிகளில், இரண்டு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சுயேச்சை வேட்பாளர்கள் இருவர் தவிர, மற்றவர்கள் முகவர்களை அனுப்பவில்லை. ''ஏழு அரசியல் கட்சிகள் சார்பில், ஏஜன்ட்டுகள் வருகின்றனர். ஓட்டு எண்ணிக்கைக்கு, கூடுதல் மேஜை வசதி செய்யப்பட்டுள்ளது. ஓட்டுப் பதிவு அன்று, கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்பட்டது,'' என்றார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி அமர்வு, 'தற்போதைய சூழ்நிலைக்கு, தேர்தல் கமிஷன் தான் பொறுப்பு; தேர்தல் பிரசாரத்தின் போது, ஊர்வலங்கள் நடத்திய போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, தேர்தல் கமிஷன் உறுதி செய்யவில்லை. நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், அரசியல் கட்சிகளிடமும் முறையான நடவடிக்கை இல்லை. 'உரிய நடவடிக்கை எடுக்காததற்காக, தேர்தல் கமிஷன் மீது, கொலை குற்றச்சாட்டு கூட சுமத்தலாம். தேர்தல் பிரசாரம், ஊர்வலங்கள், வேறு கிரகத்தில் நடத்தப்பட்டதா; கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றவில்லை என, நாங்கள் கருதினால், ஓட்டு எண்ணிக்கையை நிறுத்த நேரிடும்' என, எச்சரித்தது.


நடவடிக்கைதொடர்ந்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: ஓட்டு எண்ணிக்கையின் போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். ஓட்டுப்பதிவு பெரும்பாலும் அமைதியாக நடந்து முடிந்தாலும், தேர்தல் பிரசாரத்தின் போதும், ஊர்வலங்களின் போதும், கொரோனா தடுப்பு விதிகளை அரசியல் கட்சிகள் பின்பற்றவில்லை.

இதனால் தான், வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகம் அதிக அளவில் பாதிக்கப்படவில்லை என்றாலும், தற்போதைய நிலையை கருதி, ஓட்டு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளை திட்டமிட்டிருக்க வேண்டும். பொது மக்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது; மக்களின் வாழ்க்கை, பாதுகாப்புக்கு பின் தான், மற்றவை எல்லாம்.ஓட்டு எண்ணும் மையங்களில், சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும். கிருமி நாசினி தெளிக்க வேண்டும்; முக கவசம், சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். சுகாதாரத்துறை செயலர், பொது சுகாதாரத்துறை இயக்குனருடன், மாநில தேர்தல் அதிகாரி ஆலோசித்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதுகுறித்து, வரும், 30ம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.


அச்சுறுத்தல்ஆக்சிஜன், வென்டிலேட்டர் கையிருப்பு குறித்த வழக்கு விசாரணையின் போதும், 'பொது மக்களின் பாதுகாப்பில், எந்த விதசமரசமும் செய்து கொள்ள முடியாது. ஓட்டு எண்ணிக்கையை, ஊடகங்கள் வாயிலாக நாங்களும் கவனிப்போம். 'மக்கள் நலனுக்கு அச்சுறுத்தல் இருந்தால், ஓட்டு எண்ணிக்கைக்கு தடை விதித்து, ஜூலை, ஆகஸ்ட்க்கு தள்ளி வைக்க உத்தரவிடுவோம்' எனவும், முதல் பெஞ்ச் தெரிவித்தது.

Advertisement
வாசகர் கருத்து (19+ 53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,சவுதி அரேபியா
28-ஏப்-202113:00:43 IST Report Abuse
Hari நேற்று நாங்கள் கனி அக்கா களி சாப்பிடும்போது பார்த்தோம் .அது உண்மையாக இருக்குமா இல்லையா என் ஒரு விசாரணை கமிஷ்னபோடுங்க யுவர் ஆனர்
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
27-ஏப்-202114:23:48 IST Report Abuse
Sridhar வோட்டு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும்ங்கறதுதான் அடிப்படை நோக்கம் போல இருக்கே? வேறு எதோ மாநிலத்துக்கு சிக்னல் கொடுக்கற மாதிரி இருக்கோன்னு நினைச்சுட்டு இருக்கும்போதே அந்த பானர்ஜீ இந்த பானர்ஜீ சொன்னதை லபக்குன்னு பிடிச்சு பாராட்டு வேற தெரிவிச்சுருக்காங்க ஆக, தேர்தல் முடிவுகள் யாரோ ஒருவருக்கு சாதகமாக இல்லைங்கறது தெளிவா புரியுது. அந்த ஒரு மாநில முடிவுகளுக்கு உலகமே கொடுக்கும் முக்கியத்துவத்த பார்த்தா வியப்பா இருக்கு ஒ... சரி சரி ஆட்சி மாறினா, 200 MLA அதவச்சு 30 ராஜ்யசபா MP கள் இந்த வழியில் பாத்தா, சீக்கிரமே இரண்டில் மூன்று பங்கு மெஜாரிட்டி பார்லிமென்டில் அப்போ அரசியல் சாசன திருத்தங்கள் மிக சுலபம்... அப்படி ஓடுதா கதை அடி சக்கைன்னான
Rate this:
Cancel
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
27-ஏப்-202112:48:47 IST Report Abuse
Nellai tamilan ஆகஸ்ட் வரைக்கும் ஊர்ல இருக்கற எல்லா கண்டைனர் லாரி பின்னாடியும் உடன்பிறப்பு ஓட வேண்டியது தான். ஓடி வா உடன்பிறப்பே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X