அரசியல் செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி கொள்முதல்: பிரதமருக்கு பழனிசாமி கடிதம்

Updated : ஏப் 28, 2021 | Added : ஏப் 26, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை :'மத்திய அரசே கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:மத்திய சுகாதாரத்துறை, நாடு முழுதும் கொரோனா தடுப்பூசி போடுவதில், புதிய கொள்கையை அறிவித்துள்ளது. அதன்படி, 18 வயது முதல், 45 வயதிற்கு உட்பட்டோருக்கு, தடுப்பூசி கொள்முதல் செய்து
தடுப்பூசி கொள்முதல், பிரதமர், பழனிசாமி

சென்னை :'மத்திய அரசே கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:மத்திய சுகாதாரத்துறை, நாடு முழுதும் கொரோனா தடுப்பூசி போடுவதில், புதிய கொள்கையை அறிவித்துள்ளது.

அதன்படி, 18 வயது முதல், 45 வயதிற்கு உட்பட்டோருக்கு, தடுப்பூசி கொள்முதல் செய்து போடுவது, மாநில அரசுகளின் பொறுப்பு என, தெரிவித்து உள்ளது.ஆனால், மாநில அரசுக்கான கொள்முதல் விலையை, தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. மத்திய அரசு கொள்முதல் விலையில் இருந்து, முற்றிலும் மாறுபட்ட விலையை தெரிவித்துள்ளன. தடுப்பூசி கட்டண உயர்வு, மாநில அரசுகளுக்கு நிதிச்சுமையை ஏற்படுத்தும். மத்திய அரசு ஏற்கனவே, 2021 - 22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், கொரோனா தடுப்பூசிக்கு, 35 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது.எனவே, மத்திய அரசே கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு தேவையான அளவு தடுப்பூசிகளை வழங்க வேண்டும். தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான மாற்று வழிகளையும் ஆராய வேண்டும். வரும் வாரங்களில், நாடு முழுதும், தடையின்றி தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
28-ஏப்-202100:03:41 IST Report Abuse
Pugazh V படுக்கைகள் இருக்கின்றன., மருந்து மாத்திரைகள் இருக்கின்றன.என்றெல்லாம் அதிமுக.சொல்வது பொய்தானே?
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
28-ஏப்-202100:02:03 IST Report Abuse
Pugazh V கடந்த மாதமே பிரதமருக்கு நம்ம சுடலை கடிதம் எழுதி அனுப்பி விட்டார். அதற்கு அதிமுக பாஜக வாசகர்கள் இங்கே வந்து கும்மி அடித்தார் கள். இப்போது???
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
27-ஏப்-202114:48:20 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\மத்திய அரசே கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க வேண்டும்'...\\ ...என்னமோ போன மாசத்துக்கு முந்தின வரை, மாநில அரசுகளே நேரடியாக, வெளிச்சந்தையிலிருந்து, தடுப்பூசியை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றுதானே எல்லோரும் (சுடலை, தீதி, தமிழக நலம் விரும்பும் கட்சிகள், போராளிகள் உட்பட) கூவினார்கள்?? இப்போ என்னாச்சு?? மத்திய அரசு இதை செய்யலாம், ஆனால், கடனாக மட்டுமே .... ஓசியாக கொடுப்பதாக சொல்லப்பட்ட அனைத்தையும் (வாஷிங் மெஷின், இல்லத்தலைவிக்கு பணம்...) ரத்து செய்து இதற்காக செலவு செய்யவேண்டும் ........ அதற்கு ஒத்துக்கொண்டால், மத்திய அரசு செய்யலாம் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X