பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி விலையை குறைக்க உத்தரவு

Updated : ஏப் 28, 2021 | Added : ஏப் 27, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : கொரோனா தடுப்பூசி மருந்து விலையை குறைக்கும்படி, தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம், 'கோவிஷீல்டு' என்ற கொரோனா தடுப்பூசி மருந்தையும், பாரத் பயோடெக் நிறுவனம், 'கோவாக்சின்' என்ற தடுப்பூசி மருந்தையும் தயாரிக்கின்றன.இந்நிறுவனங்கள், மத்திய அரசுக்கு, ஒரு,'டோஸ்' தடுப்பூசி மருந்தை, 150 ரூபாய்க்கு
 தடுப்பூசி,விலை, குறைவு, உத்தரவு

புதுடில்லி : கொரோனா தடுப்பூசி மருந்து விலையை குறைக்கும்படி, தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம், 'கோவிஷீல்டு' என்ற கொரோனா தடுப்பூசி மருந்தையும், பாரத் பயோடெக் நிறுவனம், 'கோவாக்சின்' என்ற தடுப்பூசி மருந்தையும் தயாரிக்கின்றன.

இந்நிறுவனங்கள், மத்திய அரசுக்கு, ஒரு,'டோஸ்' தடுப்பூசி மருந்தை, 150 ரூபாய்க்கு வழங்குகின்றன. இந்நிலையில், வரும் மே, 1 முதல், 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது.

இதையடுத்து, சீரம் நிறுவனம், மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு, ஒரு, 'டோஸ்' கோவிஷீல்டு தடுப்பூசி மருந்திற்கு, 600 ரூபாய்; பாரத் பயோடெக், ஒரு, 'டோஸ்' கோவாக்சின் தடுப்பூசி மருந்திற்கு, 1,200 ரூபாய் என விலை நிர்ணயம் செய்துள்ளன. இந்த மாறுபட்ட விலைக்கு, பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், நேற்று மத்திய அமைச்சரவைச் செயலர் ராஜிவ் கவுபா தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், தடுப்பூசி மருந்து விலையை குறைக்கும்படி, இரு நிறுவனங்களையும் கேட்டுக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இரு நிறுவனங்களும் விலை குறைப்பு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா
27-ஏப்-202116:48:18 IST Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ வெலய குறைக்கிணும்னதும் பால்ல தண்ணி கலந்து அடிச்சு உடுறாப்போல தடுப்பூசியில தண்ணிய கலந்து அடிச்சு உட்றாதீங்க சாமியோவ்,,,,
Rate this:
Cancel
Radj, Delhi - New Delhi,இந்தியா
27-ஏப்-202114:27:19 IST Report Abuse
Radj, Delhi ஒரு பொருள் ஒரே விலை ஒரே வரி அப்படியிருக்க ஒரு பொருள் பல விலை பல வரி என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. விலையே கட்டுப்படுத்த தான் மத்திய அரசு உள்ளது. மத்திய அரசு நல்லது செய்யும் ...
Rate this:
Cancel
kosu moolai - nadunilaiyoor,இந்தியா
27-ஏப்-202107:55:04 IST Report Abuse
kosu moolai இலவச தமிழனுக்கு விலை என்ற வார்த்தை ஒவ்வாமையை ஏற்படுத்துமென்பது சர்வாதிகாரி தமிழின எதிரி மோடிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இருட்டுக்கடை அல்வாவயே சேம்பிள் வாங்கி சாப்பிட்டு போறவங்க நாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X