'மாமூல்' மழையால் பாயுது 'சரக்கு' ஆறு! மக்கள் சீரழிவதை தடுப்பது யாரு?

Updated : ஏப் 27, 2021 | Added : ஏப் 27, 2021
Advertisement
கோடை மழை பெய்ய காத்திருக்கும் ஒரு மாலை வேளை. சித்ராவின் வீட்டுக்கு வந்த மித்ரா, ''சித்துக்கா, எப்படி இருக்கீங்க? தடுப்பூசி போட்டீங்களே. எதுவும் பிரச்னை இருந்ததா?'' என விசாரித்தாள்.''ஒரு நாள் கொஞ்சம் 'டயர்டா' இருந்துச்ச. அப்புறம் சரியாயிடுச்சு. நாலுவாரம் கழிச்சு, ரெண்டாவது டோஸ் போடணும்,''''அக்கா, பல இடங்கள்ல, முதல் டோஸ் தடுப்பூசி மருந்தே இல்லை. ரெண்டாவது டோஸ்
 'மாமூல்' மழையால் பாயுது 'சரக்கு' ஆறு!  மக்கள் சீரழிவதை தடுப்பது யாரு?

கோடை மழை பெய்ய காத்திருக்கும் ஒரு மாலை வேளை. சித்ராவின் வீட்டுக்கு வந்த மித்ரா, ''சித்துக்கா, எப்படி இருக்கீங்க? தடுப்பூசி போட்டீங்களே. எதுவும் பிரச்னை இருந்ததா?'' என விசாரித்தாள்.

''ஒரு நாள் கொஞ்சம் 'டயர்டா' இருந்துச்ச. அப்புறம் சரியாயிடுச்சு. நாலுவாரம் கழிச்சு, ரெண்டாவது டோஸ் போடணும்,''

''அக்கா, பல இடங்கள்ல, முதல் டோஸ் தடுப்பூசி மருந்தே இல்லை. ரெண்டாவது டோஸ் தடுப்பூசிக்கு மருந்து 'ஸ்டாக்' இல்லையாம். இதனால, முதல் டோஸ் போட்டவங்க குழப்பத்துல இருக்காங்க. கலெக்டர் தான் இந்த விஷயத்துல கவனம் செலுத்தி, கூடுதலா மருந்து வாங்கித்தரோணும்...''

''சரியா சொன்ன. ஏன்னா, நிலைமை அப்படியிருக்கு. மித்து, 'பாஸ்போர்ட்' வெரிபிகேஷனுக்கு, 'வாங்கிட்டு'தான் ஓ.கே., சொல்றாங்களாம், தெரியுமா?''

''ம்ஹூம்...''

''மித்து, லிங்கேஸ்வரர் ஊர் ஸ்டேஷன்ல, 'பாஸ்போர்ட்' கொடுக்க, சம்பந்தப்பட்டவரோட, கேஸ் ஹிஸ்டரி வெரிபை பண்ணி, சர்டிபிகேட் கொடுக்க போலீஸ்காரர், ரொம்பவே அலைகழிக்கிறாராம். விஷயம் என்னன்னு கேட்டா, 'சம்திங்' கொடுத்தாதான், ஓ.கே., பண்றாராம்,

''கதவு தட்டும் சத்தம் கேட்கவே, வெளியே போன சித்ராவிடம், 'இங்க மாரிமுத்துன்னு யாராச்சும் இருக்காங்களா?' என முதியவர் ஒருவர் கேட்கவே, ''அடுத்த தெருவில போய் கேட்டுப்பாருங்க...'' என கூறி உள்ளே வந்தாள்.

அப்போது, 'டிவி'யில், கொரோனா தொடர்பான விளம்பரம் ஒளிபரப்பானது. அதைப்பார்த்த மித்ரா, ''எல்லா 'டிபார்ட்மென்ட்' காரங்களுக்கும் 'அலர்ட்டா' இருக்காங்க. ஆனா,நெறைய மக்கள் வந்து போற ரேஷன் கடைல, பயோ மெட்ரிக் மிஷின்ல, 'கை ரேகை' வைச்சு தான், பொருள் வாங்கிட்டு போறாங்க,''

''அப்படியிருந்தும், 'சானிடைசர்' கூட கொடுக்கலையாம். இதனால, ரேஷன் கடைக்காரங்க பயத்தோட தான் வேல பாக்கிறாங்க,'' என்ற சித்ரா, ''வாடி, மொட்டை மாடிக்கு போலாம்,'' என்றதும் மித்ரா 'படபட'வென படியேறினாள்.

''இன்னும், அஞ்சு நாள் தான் இருக்கு. எலக்ஷன் ரிசல்ட் வந்துடும். கட்சிக்காரங்க எல்லாம் ஏக குஷியில இருக்காங்க,'' என்றாள் சித்ரா.

''எலக் ஷன்னு சொன்னதும், ஒரு மேட்டர் நினைவுக்கு வந்துடுச்சுங்க்கா. கவுன்ட்டிங் சென்டர்' கண்காணிப்பு 'டியூட்டி'க்கு, பொதுவா துணை தாசில்தார் அந்தஸ்தில் தான் அப்பாயின்ட் பண்ணுவாங்க. இந்த தடவ பி.டி.ஓ.,க்களை நியமிச்சிருக்காங்க. இதனால, ஒன்றிய நிர்வாகம் ஸ்தம்பிடுச்சாம்...''

''வழக்கமா, மதிய நேரத்துல, ஓரளவு 'ரிசல்ட்' தெரிஞ்சுடும்ங்கறதால, ரெண்டு வேளை தான் சாப்பாடு கொடுப்பாங்க. ஆனா, இந்த தடவை, கூடுதலா ஓட்டுச்சாவடி இருக்கறதால, 'ரிசல்ட்' தெரிய, இரவு, பத்து மணி கூட ஆகிடுமாம்,''

''அதனால, ஏஜன்ட்களுக்கான சாப்பாடு செலவை, வேட்பாளர்கள் தான் கொடுக்கணும்னு சொல்லிட்டாங்களாம். இதனால, 'ஷாக்'கான சுயேட்சை ஆட்கள், நாங்க மத்தியானமே கிளம்பிடுவோம். கட்சிக்காரங்க தான் 'கவுன்டிங்' முடியற வரைக்கும் இருப்பாங்கன்னு சொல்லி, எஸ்கேப் ஆக பாக்கிறாங்களாம்,'' என்றாள் சித்ரா.

''எப்டியோ எலக் ஷனில் போட்டியிட்டாச்சு. ரிசல்ட் தெரிஞ்சது தானே. அப்புறம் எதுக்கு அவங்க செலவு பண்றாங்க,'' என்ற மித்ரா, ''சண்டே லாக்டவுனில், சரக்கு விற்பனை அமோகமாம். சிட்டியில, காந்தி நகர்ல இருக்க 'டாஸ்மாக் 'பார்' படுபிசியாம்,''

''மண் லோடுடன் நின்னுக்கிட்டிருந்த லாரியில், சரக்கு பாட்டில்களை பதுக்கி, ஜோரா வித்தாங்களாம். பல 'பார்'களிலிருந்து போலீசுக்கு மாமூல் வசூல் பண்ணி தர்ற பொறுப்பை, இந்த 'பார்'காரர் தான் பண்றதால, போலீஸ் கண்டுக்கலையாம்,

''சித்ராவின் மொபைல் போன் சிணுங்கியதும், 'உங்க வீதியில, 'மகாலிங்கம்'ன்னு யாராச்சும் இருக்காங்களா,' என எதிர்முனையில், ஒருவர் கேட்க, ''நீதி அங்கிள், ஆமா இருக்காரு. எங்க வீட்டிலிருந்து, அஞ்சாவது வீடு,'' என்று சொல்லி போனை அணைத்தாள்.

''பனை மரம் வெட்டிய விவகாரத்துல, கட்சிக்காரங்க, நல்லா 'பணம்' பாத்துட்டாங்களாம்,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.

''மித்து, அது என்ன விஷயம்?''

''சிட்டியில் மூனு நாளைக்கு முன்னாடி, வேனில் சென்ற ஒரு கும்பல், அனுப்பர்பாளையத்துக்கு கிட்ட ஆறு பனை மரத்தை வெட்டிட்டாங்க. தகவல் தெரிஞ்சு அந்த இடத்துக்கு போன, இடத்தோட ஓனர், வண்டியை பிடிச்சு, போலீஸ்லயும் 'கம்ப்ளைன்ட்' பண்ணிட்டாங்க,''

''இத மோப்பம் புடிச்ச, சூரியக்கட்சி, தாமரை கட்சியை சேர்ந்த சில பேரு கூட்டணி போட்டு, பிரச்னையை பேசி முடிச்சு தர்றோம்ன்னு சொல்லி, மரம் வெட்டின கும்பல்கிட்ட இருந்து, ஒரு தொகையை வசூல் பண்ணிட்டாங்களாம்,''

''இருந்தாலும், இந்த விஷயத்தில, பசுமை ஆர்வலர்களின் பிரஸ்ஸர் காரணமாக, எப்.ஐ.ஆர்., போட வேண்டியதாகிடுச்சாம்,'' என்றாள் மித்ரா.

''எலக் ஷன் நேரத்தில், ஒருத்தரை ஒருத்தர் கண்டபடி பேச வேண்டியது. பணம் வருதுன்னு தெரிஞ்சதும், கொள்கையா முக்கியம், கொள்ளையே முக்கியம்னு ஒண்ணா சேர்ந்துட்டு காசு பாக்கறாங்க...''

''அதெல்லாம் வெளி வேஷங்க்கா...'' சொன்ன மித்ரா,

''அக்கா, இந்த மாதிரி தான், குண்டடம் ஸ்டேஷன்ல, நகை திருட்டு, வழிப்பறியால பாதிக்கப்பட்டவங்க கம்ப்ளைன்ட் கொடுக்க போனா, எப்.ஐ.ஆர்., போடாம அலைகழிக்கறாங்களாம். திருடனை கண்டுபிடிச்சுட்டு, அப்புறமா எப்.ஐ.ஆர்., போடலாம்னு சொல்றாங்களாம்,'' என்றாள்.

''இதென்ன கொடுமையா இருக்கே...'' ஆதங்கப்பட்ட சித்ரா, ''சூரிய கட்சிக்காரங்களோட நாட்டாமை தாங்க முடியலையாம்...'' என்றாள்.

''என்ன விஷயங்க்கா...'' என்றாள் மித்ரா.

''போன வாரம், வெங்கடேஸ்வரா நகரில், மக்கள் பயன்பாட்டுக்காக, ஆர்.ஓ., வாட்டர் பிளான்ட் வச்சிருக்காங்க. இது அந்த ஏரியா மக்களுக்கு ரொம்ப யூஸா இருந்து வந்தது. இத பாத்துட்டு, சூரிய கட்சிக்காரங்க, தண்ணி பிடிக்க விடாம பிரச்னை பண்ணியிருக்காங்க,''

''பொறுத்துப்பார்த்த மக்கள், தெற்கு போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்திட்டாங்க. போலீசும் என்கொயரி பண்ணப்ப, ஆஜரான 'சீறும்'ராஜனும், அவரோட கட்சி நிர்வாகியும், 'எங்க ஏரியா பிரச்னை. நாங்க பேசித்தீர்த்துக்கறோம்...'னு சொல்லி, போலீஸ் நடவடிக்கையை ஆப் செஞ்சிட்டாராம்...''

''இத கேள்விப்பட்ட மக்கள், 'என்ன இப்படி பண்றாங்க. நல்லது செஞ்சாலும் வரிஞ்சு கட்டிட்டு தடுக்கறது இவங்களுக்கு ஒரு பொழப்பாவே போச்சு,' என நொந்து கொண்டனராம்...'' என விளக்கினாள் சித்ரா.

''அக்கா... சொல்ல மறந்துட்டேன். தாராபுரம் மதுவிலக்கு போலீசுன்னு ஒன்னு இருக்குதான்னு மக்கள் கேக்குறாங்க்கா...''

''ஏன்... அந்தளவுக்கு சின்சியரா, வேல பாக்குறாங்களா?'' சிரித்தாள் சித்ரா.

''அட... நீங்க வேற. எந்த ரெய்டுக்கும் போறதில்லையாமா? ஆனா, ஒவ்வொரு இடமா போய், 'மாமூல்' வாங்கிட்டு, ஜாலியா மரத்தடியில குளுகுளுன்னு ரெஸ்ட் எடுத்துட்டு, 'ஓ.பி.,' அடிக்கறாங்களாம். இதனால, அங்கு 24 மணி நேரமும், அமராவதி ஆற்றை போல, 'சரக்கு' ஆறு, சும்மா ஜம்முன்னு ஓடுதாம்,''

''அங்க மட்டுமல்ல. கிட்டத்தட்ட எல்லா இடத்திலும் அப்படித்தான். அவிநாசி சப்-டிவிஷனில் வாரம் ஒரு தாபா முளைக்குதாம். இதப்பத்தி நாம் ஏற்கனவே விரிவா பேசியிருக்கோம். இப்ப பிரச்னை என்னன்னா, 'தாபா' கடைகளுக்கு ரெய்டு போறதா, வேண்டாமான்னு, அதிகாரிகள் மட்டத்தில் பட்டிமன்றமே நடக்குதாம்,''

''அதனால, சும்மா கண் துடைப்புக்கு ரெய்டு போய், கேஸ் போடற மாதிரி போடறாங்களாம். இதில இன்னொரு விஷயம் என்னன்னா... வர்ற மாமூலில், 'டாஸ்மாக்' அதிகாரிக்கும் பங்கு போகுதாம். அதனால, எவ்ளோ சரக்கு வேணும்னாலும், வாங்கி ஸ்டாக் வச்சுக்கிறாங்களாம்...''

''இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதுன்னு தெரியலே...'' சொன்ன மித்ரா, ''அக்கா... டைம் ஆயிடுச்சு கெளம்பறேன்,'' என்றதும், ''பாத்து போடி,'' என வாசல் வரை சென்று வழியனுப்பினாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X