ஐகோர்ட் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் பதில்

Updated : ஏப் 27, 2021 | Added : ஏப் 27, 2021 | கருத்துகள் (54)
Share
Advertisement
புதுடில்லி : 'கொரோனா வைரஸ் வேகமெடுத்துள்ளதற்கு தேர்தல் ஆணையம் தான் காரணம்' என சென்னை உயர் நீதிமன்றம் கூறியதற்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.தமிழகம் கேரளா புதுச்சேரி மேற்கு வங்கம் மற்றும் அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்து வருகின்றன. இந்த ஐந்து மாநிலங்களில் பதிவான ஓட்டுகள் மே 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட
 ஐகோர்ட், குற்றச்சாட்டு, தேர்தல் ஆணையம்

புதுடில்லி : 'கொரோனா வைரஸ் வேகமெடுத்துள்ளதற்கு தேர்தல் ஆணையம் தான் காரணம்' என சென்னை உயர் நீதிமன்றம் கூறியதற்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

தமிழகம் கேரளா புதுச்சேரி மேற்கு வங்கம் மற்றும் அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்து வருகின்றன. இந்த ஐந்து மாநிலங்களில் பதிவான ஓட்டுகள் மே 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதற்கிடையே கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. இது தொடர்பான மனு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது 'கொரோனா வைரசின் இரண்டாம் அலை வேகமெடுத்துள்ளதற்கு தேர்தல் ஆணையம் தான் காரணம்' என கூறி உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.


latest tamil news


இந்நிலையில் இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:கொரோனா வழிமுறைகளை முறையாக பின்பற்றி தேர்தல்களை நடத்தி வருகிறோம். ஒரு ஓட்டுச்சாவடியில் 1000 வாக்காளர்கள் ஓட்டளிக்கும் வகையில் கூடுதல் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.இந்த ஓட்டுச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்கள் முறையான வழிமுறைகளைப் பின்பற்றி ஓட்டு போட அனுமதிக்கப்படுகின்றனர்.

கொரோனா வைரசின் இரண்டாம் அலை வேகமெடுப்பதற்கு முன்னதாகவே கடந்த 6ம் தேதி தமிழகம் அசாம் கேரளா மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டன.மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் வரும். எனவே அதுகுறித்து முடிவு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை.

ஏப்ரல் 17ம் தேதி வரை எந்தவிதமான ஊரடங்கும் அமல்படுத்தப் படவில்லை. எனினும் தேர்தல் ஆணையம் தன் அதிகாரங்களைப் பயன்படுத்தி பிரசார நேரத்தை குறைத்தது. மேலும் பேரணிகள் ஊர்வலங்கள் போன்றவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டது. பொதுக்கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
28-ஏப்-202120:05:02 IST Report Abuse
M.COM.N.K.K. கண் கெட்ட பின் சூரிய நமழ்காரம்
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
28-ஏப்-202114:21:22 IST Report Abuse
 Muruga Vel நீதிமான்கள் வேற்று கிரகங்களிலிருந்து நேரா கோர்ட்டுக்கு வந்துட்டு திரும்பி வேற்று கிரகங்களுக்கு சென்று விடுவார்கள் போல இருக்கே ..கோரோனோ வேற பரவி கோடைகால விடுமுறையை நீர்த்து போக வைத்து விட்டது
Rate this:
Cancel
28-ஏப்-202104:18:12 IST Report Abuse
Ganesan Madurai நீதிபதிக்கு நல்லாவே நிறைய திமிர்வாத வாய்க் கொழுப்புதான் காரணம்.. பானர்ஜின்னு பேர்வச்சாலே இப்படி ஏறுக்குமாறா அரசு அதிகாரிகளை தனது அதிகார மமதையில் பேசத் தோன்றும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X