பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா சான்றிதழில் 'கியூ.ஆர்.கோடு' இல்லை; வெளிநாடு செல்வோர் திண்டாட்டம்

Updated : ஏப் 27, 2021 | Added : ஏப் 27, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
திண்டுக்கல்: 'அரசு வழங்கும் கொரோனா சான்றிதழில் 'கியூ.ஆர்.கோடு' இல்லாததால் வெளிநாடு செல்லும் விமானங்களில் அனுமதிப்பதில்லை' என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நாடு முழுதும் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது. வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு கொரோனா 'நெகட்டிவ்' சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பயணிகளின் கொரானா சான்றிதழை ஸ்கேன் செய்து
CoronaTest, Negative, Certificate, QR_Code, Passengers, கொரோனா, பரிசோதனை, நெகட்டிவ், சான்றிதழ்

திண்டுக்கல்: 'அரசு வழங்கும் கொரோனா சான்றிதழில் 'கியூ.ஆர்.கோடு' இல்லாததால் வெளிநாடு செல்லும் விமானங்களில் அனுமதிப்பதில்லை' என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாடு முழுதும் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது. வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு கொரோனா 'நெகட்டிவ்' சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பயணிகளின் கொரானா சான்றிதழை ஸ்கேன் செய்து பரிசோதித்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அரசு மருத்துவமனையில் வழங்கும் கொரோனா சான்றிதழில் 'கியூ.ஆர்.கோடு' இடம் பெறுவதில்லை. ஆனால் தனியார் மருத்துவமனையில் 'கியூ.ஆர்.கோடு' உடன் சான்றிதழ் வழங்குகின்றனர். 'கியூ.ஆர்.கோடு' இல்லாத சான்றிதழுடன் வந்தால் பயணிகளை விமான நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை.


latest tamil news



நடவடிக்கை தேவை

திண்டுக்கல்லை சேர்ந்த பிரசாந்த் கூறியது: கடந்த ஏப்.23 ம் தேதி மதுரையில் இருந்து துபாய் செல்ல இருந்தேன். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு 'நெகட்டிவ்' சான்றிதழுடன் விமான நிலையம் சென்றேன். அங்கு சான்றிதழில் 'கியூ.ஆர்.கோடு' இல்லை எனக் கூறி விமான ஊழியர்கள் டிக்கெட் வழங்க மறுத்தனர். ஆர்.டி.பி.சி.ஆர்., சான்றிதழ் வைத்திருந்தும் அனுமதிக்கவில்லை. டிக்கெட் கட்டணமும் திரும்ப கிடைப்பதில்லை. 'கியூ.ஆர்.கோடு' இடம் பெறும் சான்றிதழுக்காக ரூ.3500 கொடுத்து தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்தேன். அரசு வழங்கும் சான்றிதழிலும் 'கியூ.ஆர்.கோடு' இடம் பெற சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivak - Chennai,இந்தியா
27-ஏப்-202119:50:55 IST Report Abuse
Sivak தடுப்பூசி போட்டு கொண்டால் அரசு/தனியார் மருத்துவ மனைகளில் beneficiary ID கொடுப்பதில்லை (கூட்டம் காரணமாக).. பிறகு எப்படி தடுப்பூசி போட்டு கொண்ட சான்றிதழ் பெறுவது? யாருக்காவது தெரியுமா
Rate this:
Cancel
27-ஏப்-202119:33:54 IST Report Abuse
ஆப்பு வெளிநாட்டுக்கு தப்பிச்சு போயிரலாம்னு பாக்கிறீங்களா? சொகுசு விமானமே ஓட மாட்டேங்குது. ஏழைப்பங்காளர்கள் போயிட்டு வந்தப்புறம்தான் போப்போம்.
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
27-ஏப்-202117:06:36 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\அரசு வழங்கும் சான்றிதழிலும் 'கியூ.ஆர்.கோடு' இடம் பெற சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்..\\ .... மிகவும் நியாயமான கோரிக்கை ......... சான்றிதழில் QR code சேர்ப்பதற்கு கணினியின் செயலியில் சிறிது மாற்றம் செய்தால் போதும் .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X