இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ள 40 அமெரிக்க நிறுவன சிஇஓ.,க்கள்

Updated : ஏப் 27, 2021 | Added : ஏப் 27, 2021 | கருத்துகள் (42)
Share
Advertisement
வாஷிங்டன்: இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து 40 அமெரிக்க நிறுவனங்களின் சிஇஓ.,க்கள் இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளனர். அவர்கள் அடுத்த சில வாரங்களில் 20 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை அனுப்ப உள்ளனர்.இந்தியாவில் கொரோனா 2வது அலை காரணமாக ஒவ்வொரு நாளும் சராசரியாக 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பும்
CEOs, US_Companies, CreateGlobalTask, Help, India, Covid

வாஷிங்டன்: இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து 40 அமெரிக்க நிறுவனங்களின் சிஇஓ.,க்கள் இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளனர். அவர்கள் அடுத்த சில வாரங்களில் 20 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை அனுப்ப உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா 2வது அலை காரணமாக ஒவ்வொரு நாளும் சராசரியாக 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. இந்தியாவின் நிலை அறிந்து அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் ஆக்சிஜன் செறியூட்டிகள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட பல மருத்துவ உபகரணங்கள் அனுப்பப்பட்டு உதவி வருகின்றன. கூகுள் நிறுவனமும், அதன் ஊழியர்களும் ரூ.135 கோடி நிதி அளிப்பதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை நேற்று அறிவித்தார்.


latest tamil news



இந்நிலையில், கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவிற்கு உதவ 40க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்களின் சிஇஓ.,க்கள் முன்வந்துள்ளனர். அடுத்த சில வாரங்களில் 20 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகள் இந்தியாவிற்கு வழங்கவுள்ளதாக டெலாய்ட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) புனீத் ரென்ஜென் கூறியுள்ளார். மேலும், இந்தியாவுக்கு தேவையான மருத்துவ பொருட்கள், தடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் பிற உயிர் காக்கும் கருவிகளை வழங்குவதற்காக உலகளாவிய பணிக்குழுவும் துவங்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளும், மே 5ம் தேதிக்குள் மேலும் 11 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளும் வழங்கப்பட உள்ளன. ‛25 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை விட கூடுதலாக அனுப்புவதே எங்களின் குறிக்கோள்' என ரென்ஜென் கூறியுள்ளார்.
இது போல் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இந்தியாவுக்கு தேவையான பொருட்களை அனுப்பி வைக்க முடிவு செய்து அதற்கான பணியில் இறங்கி உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஏப்-202119:29:16 IST Report Abuse
ஆப்பு எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன்.... டயலாக் நல்லா பொருந்துது.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
27-ஏப்-202118:22:30 IST Report Abuse
RajanRajan How did Ajit Doval and Narra Modi compel the USA and Biden-Kamla administration to grant permission to export raw materials to India for the COVID-19 vaccine? Did they forget Modi isn't Trump? Why China, Pakistan, Russia & UAE want to help India? Mr. Ajit Doval Sir is a gem of India. We should start calling him Mr. Ajit Do-all. He deserves Bharat Ratna for his selfless service and unforget operations. The best blessing India got in recent years is the appointment of this man as the NSA. Till officers like him are there, Bharat Mata is safe. By playing the Iranian card, Mr. Ajit Doval might have conveyed If the USA doesn't care about Indian people then India also doesn't care about the safety of the American people. India would have continued buying the Iranian oil which would have ed up helping them in their nuclear program. Apart from him, it's not China, or it's Colony Pakistan. It's the power of 1.4 billion Indian & Millions of overseas Indians forced the USA to do so. Biden and Kamla are only helping because Indians put them on blast. Action speaks louder than words. The US is trying to take advantage of the current covid surge in India by trying to peddle its finished pharma products, push regime change in India, trying to remove Modi through arm twisting and "sub-national" diplomacy. One marvel at your capacity for malice. But, the Indians are done with the USA. Because of India's “Maitri Vaccine” diplomacy, from Russia to UAE, the entire world also came for our help. Earlier people were questioning Mr. Modiji's foreign trips. But now the international shaming on Twitter has brought Joe Biden and Kamala Harris to their senses. It is always 'better late than never, it's never 'best'. Finally, the opportunists realised the importance of India. Diplomacy is to do and say nastiest things most adequately." And Mr. Ajit Doval is the prime example of it. Hope India will teach its lessons for the future.
Rate this:
Ananthakrishnan - Thanjavur,இந்தியா
27-ஏப்-202121:21:55 IST Report Abuse
Ananthakrishnan Mr. Ajit Doval is National Security Advisor to PM of India. He served as the Director of the Intelligence Bureau and retired in 2005....
Rate this:
Ananthakrishnan - Thanjavur,இந்தியா
27-ஏப்-202121:38:24 IST Report Abuse
Ananthakrishnan எல்லா நாடுகளும் இந்தியாவுக்கு உதவ முன் வந்துள்ளது என்பது நமக்கு பெருமையா?...
Rate this:
Cancel
Rajasekaran - Chennai,இந்தியா
27-ஏப்-202116:41:11 IST Report Abuse
Rajasekaran திறமை , அர்ப்பணிப்புடன் உழைக்கும் மனப்பான்மை இருந்தும் , உள்நாட்டில் நிலவி வரும் சில சரித்திர காலம் சார்ந்த தொடர் குழப்பங்களால் புலம்பெயரும் நிலைக்கு ஆளாகி , அந்நிய நாடுகளில் உழைத்து அங்கு வாழ்ந்தாலும் , தாய் நாட்டிற்காக துடிக்கும் நல்லிதயங்கள் அத்தனைக்கும் நாம் என்றும் கடமைப்பட்டிருக்கிறோம். அத்துடன் , நிறம், மொழி, மதம், கலாச்சாரம் , நாடு என்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு , பெருந்தொற்றால் அல்லலுறும் இந்தியர்களுக்காக உதவிக்கரம் நீட்டும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். அதே நேரத்தில் , இத்தனை போராட்டங்களுக்கிடையிலும் எடுத்ததெற்கெல்லாம் குறை கூறி அரசியல் ஆதாயம் தேடும் சக்திகளைப் பார்க்கும் அயல் நாட்டினர் , நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று நினைக்கையில் , நாம் அனைவரும் வெட்கித் தலை குனிய வேண்டியுள்ளதே என்று மிகவும் அதிகமாகவே நம் மனம் வலிக்கிறது . தேசிய பேரிடர் காலத்தில் கூட நாம் வேறுபாடுகளைக் களைந்து ஒன்று கூடி இந்த மாபெரும் போராட்டத்தில் நுண்கிருமிகளை அழிக்க முனைப்பு காட்டாமல் இருப்பது மிகவும் வருந்தாது தக்கது . ஒன்று படுவோம். வெற்றி காண்போம்
Rate this:
Rajasekaran - Chennai,இந்தியா
27-ஏப்-202118:26:50 IST Report Abuse
Rajasekaranமுந்தைய பதிவில் ..” வருந்தத்தக்கது “ என்றிருக்க வேண்டும். தட்டச்சில் தவறு ஏற்பட்டு விட்டது ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X