பொது செய்தி

இந்தியா

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன்; சுப்ரீம் கோர்ட்டில் வாதம்

Updated : ஏப் 27, 2021 | Added : ஏப் 27, 2021 | கருத்துகள் (57)
Share
Advertisement
புதுடில்லி: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. பல்வேறு நிபந்தனைகளுடன் வரும் ஜூலை மாத இறுதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.கொரோனா பரவல் காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தியை துவக்க அனுமதிக்குமாறு ஸ்டெர்லைட் ஆலை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம்

புதுடில்லி: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. பல்வேறு நிபந்தனைகளுடன் வரும் ஜூலை மாத இறுதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.latest tamil news


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிப்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்டில் விசாரணைக்கு வந்தது. ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதிப்பது தொடர்பான பிரமாண பத்திரத்தை தமிழக அரசு கோர்ட்டில் தாக்கல் செய்து இருந்தது. இன்றைய விசாரணையின்போது, ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை தமிழகத்திற்குதான் தரவேண்டும். தமிழக தேவைக்கு போக, மீதமுள்ள ஆக்சிஜனை பிற மாநிலங்குகளுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு வாதிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு, ஆக்சிஜன் உற்பத்தியில் தமிழகத்திற்கு முன்னுரிமை தர முடியாது. மத்திய தொகுப்பில்தான் சேர்க்க வேண்டும் என்று கூறியது. ஆலையை கண்காணிக்கும் குழுவில், உள்ளூர் மக்களை சேர்க்க கூடாது என்று ஸ்டெர்லைட் தரப்பில் கேட்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு சிக்கலை காரணம் காட்டி, மத்திய அரசும் இதை ஆமோதித்தது. அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட சுப்ரீம் கோர்ட், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்தது. அங்கு உற்பத்தியாகும் ஆக்சிஜனை மத்திய தொகுப்பிற்கு வழங்க வேண்டும். அவர்கள் தேவையான மாநிலங்களுக்கு பிரித்து வழங்குவார்கள் என்று தீர்ப்பளித்தது. ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க 5 நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். இது தவிர உள்ளூர் மக்கள் அடங்கிய மேற்பார்வை குழுவையும் அமைக்கலாம். அவர்களை நிபுணர்கள் குழு தேர்வு செய்யும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.


கொரோனா பரவல் காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தியை துவக்க அனுமதிக்குமாறு ஸ்டெர்லைட் ஆலை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது.
விசாரணையில் நீதிபதிகள் உற்பத்தியை துவக்க அனுமதி வழங்கினர். முன்னதாக நடந்த விசாரணையில் ஆலையை இயக்க எத்தனை நபர்கள் தேவை என்பதை கண்காணிப்பு குழு முடிவு செய்யும். மேலும் கண்காணிப்பு குழுவில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக பிரநிதிகள் இடம்பெறுவர். என நீதிபதிகள் தெரிவித்தனர்.


latest tamil newsஇதற்கிடையில் வேதாந்தா நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில் ; கண்காணிப்பு குழுவில் உள்ளூர் நபர்கள் யாரும் இடம்பெறக்கூடாது. இங்கு உற்பத்தி ஆகும் ஆக்ஸிஜன் தமிழகத்திற்கு மட்டுமே வழங்க வேண்டும் என தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது. பல மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டி உள்ளது. அனைத்து மக்களுக்கும் ஆக்ஸிஜன் இலவசமாக வழங்குவோம் என வாதிட்டார். இதனை ஏற்று கொண்ட மத்திய அரசு வழக்கறிஞர் , ஆம் இது தேசிய அளவிலான பிரச்சனை. உற்பத்தி செய்யும் ஆக்சிஜனை மத்திய அரசு கையாளும் என்ற உத்தரவு உள்ளதே என்றும் கூறினார்.
வேதாந்தா நிறுவனத்திற்கு ஆதரவு அளிப்பது போல் மத்திய அரசின் போக்கு உள்ளது அதிர்ச்சியாக இருப்பதாக தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் ஆக்சிஜனில் தமிழகத்திற்கு முன்னுரிமை அளித்தால் போதும் என தமிழக அரசு வழக்கறிஞர் கூறினார்.தொடர்ந்து விசாரணை முடிவில் ஆக்ஸிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலைக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. உயிர் காக்கும் மருத்துவ ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும். தாமிர ஆலைக்குள் செல்லக்கூடாது. தமிழகத்தை சேர்ந்த நிபுணர்கள் 3 பேர் நியமிக்கப்படுவர். தமிழக மக்களின் நம்பிக்கையை பெறுவது அவசியம் என்றும் நீதிபதிகள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siriyaar - avinashi,இந்தியா
27-ஏப்-202122:16:14 IST Report Abuse
siriyaar அதாவது ஆக்சிஜன் தமிழ்நாட்டில் உற்பத்தி ஆவதால் அதை தமிழ்நாட்டிற்கு மட்டும் தரவேண்டும் சுடலை அறிக்கை. அப்ப காவிரி கர்நாடகாவல உற்பத்தி ஆவதால் அவர்களே வைச்சுகிடுவாங்க,இந்த மாதிரி பேசி தமிழர்களை முடிக்காமல் விட மாட்டார், இவர் குடும்பத்திற்கு உண்மையில் தமிழர்கள் மேல் எதோ வகையில் கடும் கோபம் ஏத்தி விட்டே அழிக்கிறாங்க, அன்று இலங்கை தமிழர்களை ஏத்தி விட்டு ஆயுதம் தூக்க வைத்தனர். சுடலை யை மக்கள் விரைவில் புரியாவிட்டால் தமிழன் அழிவதை தடுக்க முடியாது.
Rate this:
Cancel
27-ஏப்-202117:55:35 IST Report Abuse
ஆரூர் ரங் தூத்துக்குடி ஆலை வேதாந்த குழுமத்தின் சிறு பகுதிதான். அது மூடப்பட்ட பிறகும் அக்குழுமம் வளர்ந்துள்ளது. இலவச ஆக்சிஜனை கொடுப்பது அவர்களுக்கு பெரியவிஷயம் இல்லை.☺ மூடியதால் 30000 பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு. 😪 தாமிர பற்றாக்குறை. மோட்டார் காயில் மின்சாதன விலைகள் கிடு கிடு😶 உயர்வு . இதுதான் நாம் அனுபவிப்பது. 20 ஆண்டாக ஸ்டெர்லைட் ஊழியர்கள் யாருக்கும் வராத கேன்சர் தூத்துக்குடி மக்களுக்கு வந்திருக்குமா?
Rate this:
Raj Kamal - Thiruvallur,இந்தியா
27-ஏப்-202118:39:48 IST Report Abuse
Raj Kamalபலரின் உயிரும் ஆரோக்கியமும் உங்களுக்கு விளையாட்டாகிவிட்டதா? நீங்கள் அப்பகுதியில் வாழவேண்டும். சும்மா வாயில் வடை சுடுவதல்ல......
Rate this:
Selvaraj - Nagercoil,இந்தியா
27-ஏப்-202118:54:56 IST Report Abuse
Selvarajதாமிரம் அவ்வாறு விலை உயர்த்து, ஸ்டெர்லைட் பாதுகாப்பகத்தான் செயல்படுகிறது என்றால் குஜராத்தோ இல்லை இந்தியாவில் வேறு எங்காவது தயாரிக்க வேண்டியதானே. // 20 ஆண்டாக ஸ்டெர்லைட் ஊழியர்கள் யாருக்கும் வராத கேன்சர் தூத்துக்குடி மக்களுக்கு வந்திருக்குமா? வளர்ந்து பெரியவர்கள் ஆனா ஊழியர்கள் வெறும் 8 மணிநேரம் வேலைசெய்துவிட்டு தூத்துக்குடி நகரத்திலுள்ள வீட்டுக்கு செல்வதற்கும் ஆலையின் அருகிலே பிறந்துவளர்த்துவரும் 24 மணிநேரமும் வாழ்ந்துவருபவர்களுக்கும் வித்தியாசம் நிறைய....
Rate this:
Ashok Subramaniam - Chennai,யூ.எஸ்.ஏ
27-ஏப்-202122:14:16 IST Report Abuse
Ashok Subramaniamகீழே விபிஎஸ் மணியன் அவர்களிந் பதிலைப் படிக்கவும்.. இதற்கு நேர்மையாகப் பதில் சொல்லும் திறனுண்டா? தமிழகம் முழுவதும் எத்தனைத் தோல் தொழிற்சாலைகள, மற்ற ஆபத்தான வேதிக்கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகள்? அவற்றாலெல்லாம் கேன்சரோ மற்ற நோய்களோ வரவில்லை என்று சொல்ல முடியுமா? மிஷ-நரிகளும் ஜிஹாதிகளும் போடும் எலும்புத் துண்டுகளுக்கு திராவிடக் கட்சிகளும், மோதி எதிர்ப்பாளர்களும் வேண்டுமானால் கூச்சலிடலாம்.. அவர்களது அள்ளக்கைகளும், ஆரவார அடிமைகளும் கண்மூடிகளாக ரௌடியிசத்தில் இறங்கலாம்.. ஆனால்.. இவர்கள் உருப்பட வழி தேடவில்லை. தங்கள் தலைமுறைகளைத் தாண்டி சிந்திக்கவில்லை. சினிமா நடிகர்களுக்கும், கொள்ளை, கொலை, சுரண்டல் இவற்றையே செய்ய அவதாரம் எடுத்த திராவிட மற்றும் காங்கிரஸின் அடிமைகளாக இருப்பதில் ஆனந்தப்பட்டால், பரிதாபம்தான் பட முடியும்.. ஆக.... உருப்பட வழியில்லை...
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
27-ஏப்-202116:44:50 IST Report Abuse
vbs manian vendaa veruppaga vedantha etharku aasigen urpatthi thodanga vendum.marupadiyum athu ithu endru solli பிரச்சினை செய்வார்கள்.தமிழ் நாட்டில் மனநிலை அலாதியாக இருக்கிறது. தீமையே இல்லாத எந்த தொழில் நடப்பும் வளர்ச்சியும் இல்லை.சென்னை நகரில் லச்சக்கணக்கான வாகனங்கள். புகை விஷமாக வெளி வருகிறது. பலருக்கு கண் எரிச்சல் மூக்கடைப்பு மூச்சு திணறல் ஆஸ்த்மா. வருடம் தோறும் ஆயிரத்துக்கு மேல் சாலை விபத்தில் உயிர் இழப்பு. எல்லாம் வேண்டாம் என்று மூடி விட்டு கட்டை வண்டி காலத்துக்கு போகலாமா.நவீன விஞ்ஞானம் பிரச்சினைக்கு தீர்வு சொல்கிறது. ஸ்டெர்லிட்டை சுற்றி ஒரு பதினைந்து மைலுக்கு குடியிருப்புகளை தடை செய்திருக்கலாம். கழிவு சுத்திகரிப்பு ஏற்பாடுகலை கட்டாய படுத்தியிருக்கலாம். எங்குதான் கழிவு இல்லை. உணவு உட்கொள்வதால் நம் உடலிலே கூட கழிவு ஏற்படுகிறது. அதை தக்க விதத்தில் சரி செய்து கொள்ளவில்லையா. பெருகி வாரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வேலை வாய்ப்புகள் எப்படி கிடைக்கும்.பொருளாதார வளர்ச்சி எப்படி ஏற்படும்.வீண் பிடிவாதம் வேண்டா வாதம்.இன்னொரு பயங்கர ஜோக். நியூட்ரினோ சோதனை கூட எதிர்ப்பு. நியூட்ரினோ என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் போராடுகிறார்கள். குளச்சல் துறைமுக எதிர்ப்பு. எட்டுவழி சாலை எதிர்ப்பு. தமிழகம் தீராத கேஸ்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X