முக்கிய பிரச்னைகளில் அமைதியாக இருக்க முடியாது: உச்சநீதிமன்றம்

Updated : ஏப் 27, 2021 | Added : ஏப் 27, 2021 | கருத்துகள் (26) | |
Advertisement
புதுடில்லி: நாட்டில், ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவ பொருட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் அது குறித்த வழக்குகளை விசாரிக்க டில்லி உயர்நீதிமன்றங்கள் விசாரிப்பதை தடுக்கவில்லை என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், முக்கிய விஷயங்களில் அமைதியாக இருக்க விரும்பவில்லை எனவும், ஆக்கப்பூர்வமாக செயல்பட விரும்புவதாக தெரிவித்து உள்ளது.கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை, நாடு
supreme court, உச்சநீதிமன்றம், சுப்ரீம் கோர்ட், உயர்நீதிமன்றம், ஐகோர்ட், high court

புதுடில்லி: நாட்டில், ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவ பொருட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் அது குறித்த வழக்குகளை விசாரிக்க டில்லி உயர்நீதிமன்றங்கள் விசாரிப்பதை தடுக்கவில்லை என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், முக்கிய விஷயங்களில் அமைதியாக இருக்க விரும்பவில்லை எனவும், ஆக்கப்பூர்வமாக செயல்பட விரும்புவதாக தெரிவித்து உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை, நாடு முழுதும் தீவிரமாக உள்ளது. பல மாநிலங்களில், ஆக்சிஜன், மருந்துகள், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு உள்ளது. இந்தப் பிரச்னைகள் குறித்து, பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இது தொடர்பான ஒரு வழக்கை சமீபத்தில் விசாரித்த, டில்லி உயர் நீதிமன்றம், மத்திய அரசுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்தது. பிரச்னை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரிக்கிறது.


latest tamil news


இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் டிஓய் சந்திரசூட், எல்என் ராவ் மற்றும் ரவிந்திர எஸ் பாட் கூறுகையில், பல முக்கியமான பிரச்னைகளை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டியுள்ளது. உயர்நீதிமன்றங்கள் விசாரணை நடத்துவதை தடுக்க முடியாது. வழக்குகளை கையாளும் போது, எல்லைகள் பிரச்னையாக மாறும் போது, உயர்நீதிமன்றங்கள் நாங்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவதை விரும்புகிறோம். தேசிய அளவில் பிரச்னை உள்ள நிலையில், உயர்நீதிமன்றங்கள் விசாரணை நடத்தும் போது உச்சநீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்க்க முடியாது. தேசிய அளவிலான பிரச்னைகளில் முன்னின்று விசாரிக்க வேண்டியது உச்சநீதிமன்றத்தின் பொறுப்பு இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravi - Chennai,இந்தியா
28-ஏப்-202112:35:34 IST Report Abuse
Ravi தேர்தலுக்கு முன் காரோண பற்றி சொன்னபோது இதே கோர்ட் தேர்தல் தேதி அறிவித்து விட்டார்கள் கோர்ட் தலை இட முடியாது என்று கூறியது , இதே கோர்ட் தான் கொலை குற்றம் சாட்டுகிறது , நாளை இதே கோர்ட்தான் முடிவு தேதியை தள்ளி போட்டிருக்கலாம் என்றும் சொல்லும் .
Rate this:
Cancel
Hari - chennai,இந்தியா
28-ஏப்-202109:47:19 IST Report Abuse
Hari இதையே தாங்களும் யோசித்து பார்க்கணும் ,அவதூறுக்கு உருவம் இல்லாமலும் ,முடிவுக்கு எதிர்ப்பும்,சொலுஷன் இல்லை.
Rate this:
Cancel
Hari - chennai,இந்தியா
28-ஏப்-202109:43:45 IST Report Abuse
Hari முதலில் நீதி மன்றங்களில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க முயற்சித்தால் பலகுடும்பங்கள் யுயிர் வாழ முடியும் ,கொரோனாவைவிட நீதிக்காக இந்தியா மக்கள் படும் தும்பமும் துயரமும் ,தற்கொலை சாவு களும் அதிகம் அதுக்கெல்லாம் தானாக முன்வந்து வழக்கை எடுக்கமாட்டார்கள்.அதென்ன சம்மன் இல்லாத ஆஜர் இது எங்கோ இடிக்கிறதே ?இறைவா அதிகாரிகள், அரசியல்வாதிகள் ,தீவிரவாதிகள் கொள்ளைக்காரர்கள் ரௌடிகள், கொள்ளையர்கள், வழிப்பறி கும்மல் இவர்கள் அனைவரிடமும் தப்பி பிழைக்க இந்தியா மக்கள் படும் துயரம் போதாமல் இப்போது வக்கீல்களிடம் சிக்கி சின்னாபின்னம் ஆகும் இந்தியா மக்களை யார் காப்பாத்துறது ஆனா ஓன்று மற்றும் நிச்சயம் மன்னர்கள் குடும்பங்கள் ,நாட்டை ஆளுபவர்களின் குடும்பங்கள் உருத்தெரியாமல் நம் கண்முன்னே அழிவதை பார்க்கும்போது ,கருணாநிதி நேரு போன்றவர்கள் நாட்டிற்கு செய்த நல்லது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X