புதுடில்லி: நாட்டில், ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவ பொருட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் அது குறித்த வழக்குகளை விசாரிக்க டில்லி உயர்நீதிமன்றங்கள் விசாரிப்பதை தடுக்கவில்லை என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், முக்கிய விஷயங்களில் அமைதியாக இருக்க விரும்பவில்லை எனவும், ஆக்கப்பூர்வமாக செயல்பட விரும்புவதாக தெரிவித்து உள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை, நாடு முழுதும் தீவிரமாக உள்ளது. பல மாநிலங்களில், ஆக்சிஜன், மருந்துகள், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு உள்ளது. இந்தப் பிரச்னைகள் குறித்து, பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இது தொடர்பான ஒரு வழக்கை சமீபத்தில் விசாரித்த, டில்லி உயர் நீதிமன்றம், மத்திய அரசுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்தது. பிரச்னை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரிக்கிறது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் டிஓய் சந்திரசூட், எல்என் ராவ் மற்றும் ரவிந்திர எஸ் பாட் கூறுகையில், பல முக்கியமான பிரச்னைகளை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டியுள்ளது. உயர்நீதிமன்றங்கள் விசாரணை நடத்துவதை தடுக்க முடியாது. வழக்குகளை கையாளும் போது, எல்லைகள் பிரச்னையாக மாறும் போது, உயர்நீதிமன்றங்கள் நாங்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவதை விரும்புகிறோம். தேசிய அளவில் பிரச்னை உள்ள நிலையில், உயர்நீதிமன்றங்கள் விசாரணை நடத்தும் போது உச்சநீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்க்க முடியாது. தேசிய அளவிலான பிரச்னைகளில் முன்னின்று விசாரிக்க வேண்டியது உச்சநீதிமன்றத்தின் பொறுப்பு இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE