இந்தியர்களுக்கு சரியான விழிப்புணர்வு இல்லை: உலக சுகாதார அமைப்பு

Updated : ஏப் 27, 2021 | Added : ஏப் 27, 2021 | கருத்துகள் (57)
Share
Advertisement
ஜெனிவா: உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை குறித்து தற்போது கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது. பொது இடங்களில் அதிகம் பேர் கூடுவதாலும் தடுப்பு மருந்து பற்றாக்குறையினாலும் மக்கள் பலர் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடி வருகின்றனர் என்று கூறியுள்ளது.கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை இந்தியாவில் இரண்டு லட்சத்தை தாண்டி உள்ளது.
இந்தியர், விழிப்புணர்வு, உலக சுகாதார அமைப்பு

ஜெனிவா: உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை குறித்து தற்போது கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது. பொது இடங்களில் அதிகம் பேர் கூடுவதாலும் தடுப்பு மருந்து பற்றாக்குறையினாலும் மக்கள் பலர் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடி வருகின்றனர் என்று கூறியுள்ளது.

கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை இந்தியாவில் இரண்டு லட்சத்தை தாண்டி உள்ளது. போதுமான படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் சப்ளை இல்லாத காரணத்தால் பல மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முடியாமல் திணறி வருகின்றனர் என்று உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் தாரிக் ஜெஸ்ஏபிக் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறிய அவர், உலக சுகாதார அமைப்பு இதுவரை இந்தியாவுக்கு நான்காயிரம் ஆக்சிஜன் காண்ட்ராக்டர் கருவிகளை வழங்கி உள்ளதாகக் கூறினார். 15 சதவீதத்துக்கும் குறைவான நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் ஆக்ஸிஜன் தேவை உள்ளது என்று கூறிய அவர், போதுமான மருத்துவ அறிவுறுத்தல் இல்லாத சூழலில் இந்தியர்கள் பலர் உயிருக்கு பயந்து மருத்துவமனைக்கு நோக்கி விரைகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.


latest tamil news


பெரும்பாலான நோயாளிகள் வீட்டில் இருந்தபடியே நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டாலே போதும். ஆனால் இதுகுறித்த விழிப்புணர்வு மக்களிடம் இல்லை என்று அவர் கூறினார். இந்தியாவில் வைரஸ் தாக்கம் அதிகரிப்பதற்கு பொதுவெளியில் விழாக்களுக்காக அதிகம்பேர் கூடுவதே காரணம், இதனை தவிர்த்தாலே வைரஸ் தாக்கம் குறையும் என்று தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஏப்-202120:59:21 IST Report Abuse
kulandhai Kannan அது இருந்தால் இங்கே ஏன் திமுக, காங், நாதக, விசிக, மதிமுக, தவாக போன்றவர்களெல்லாம் கடைவிரிக்க முடியுமா??
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
28-ஏப்-202113:21:21 IST Report Abuse
S.Baliah Seer உலக சுகாதார மையம் (WHO), ஒன்றை முற்றிலும் கவனிக்கத் தவறி விட்டது.இந்தியாவில் சாதா சளி,இருமல்.காய்ச்சல் இவற்றிற்கு எந்த மருத்துவரும் சிகிச்சை அளிப்பதில்லை.போய் கொரோனா சோதனை செய்து வாருங்கள் என்ற ஒற்றை வரியில் சொல்லி அனுப்பி விடுகிறார்கள்.கொரோனாவுக்கு ஏன் ரத்தப்பரிசோதனை இல்லை? இதற்கு உலக சுகாதார மையத்தின் பதில் என்ன?கொரோனா சளி பரிசோதனையில் ஓபன்னெஸ் இல்லை.
Rate this:
Cancel
28-ஏப்-202110:31:40 IST Report Abuse
தனி ஒருவன் முற்றிலும் உண்மை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X