பேச்சு, பேட்டி, அறிக்கை| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஏப் 27, 2021
Share
'நேற்று வரைக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் என்றால், உங்களுக்கு பிடிக்காது. இப்போது, பொதுத்துறை நிறுவனங்களில் தடுப்பூசி உற்பத்தி செய்யணும் என்கிறீர்களே; ஏன் இந்த அந்தர்பல்டி...' என, கேட்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ராமகிருஷ்ணன் அறிக்கை: தடுப்பூசி தயாரிப்பதில், பொதுத்துறை நிறுவனங்களை ஈடுபடுத்தினால், தட்டுப்பாடு இல்லாமல்

பேச்சு, பேட்டி, அறிக்கை

'நேற்று வரைக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் என்றால், உங்களுக்கு பிடிக்காது. இப்போது, பொதுத்துறை நிறுவனங்களில் தடுப்பூசி உற்பத்தி செய்யணும் என்கிறீர்களே; ஏன் இந்த அந்தர்பல்டி...' என, கேட்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ராமகிருஷ்ணன் அறிக்கை: தடுப்பூசி தயாரிப்பதில், பொதுத்துறை நிறுவனங்களை ஈடுபடுத்தினால், தட்டுப்பாடு இல்லாமல் தயாரிப்பை வேகப்படுத்த முடியும்; விலையும் குறைந்திடும்.


'இப்படி, கோக்குமாக்குத்தனம் பண்ணுவது தான், காங்கிரசின், காலம் காலமாக பின்பற்றப்படும் கொள்கை. அதைப் பற்றி, நீங்கள் கவலைப்படாதீர்கள்; வழக்கம் போல, 'டிவி'களில் வீராவேசமாக பேசுங்கள்...' என சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
தேர்தல் ஆணையம் தெரிவித்த, 'டிஜிட்டல்' பிரசாரத்தை, பா.ஜ., ஏற்றுக் கொண்டது. ஆனால், காங்., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தான், அத்தகைய பிரசாரம் ஏழைகளை சென்றடையாது என சொல்லின. ஆனால் இப்போது, மேற்கு வங்கத்தில், பா.ஜ., மேற்கொள்ளும் பிரசாரத்தை கண்டிக்கின்றன


'ஸ்டெர்லைட் என்ன, பா.ஜ.,வின் நிறுவனமா? அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க உங்கள் கட்சியை கூப்பிடவில்லை என்ற கோபமா...' என, கேட்கத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின், எம்.பி., ரவிகுமார் அறிக்கை:
ஆட்சியிலிருந்து போகவிருக்கும், அ.தி.மு.க., அரசு அனைத்து கட்சி கூட்டங்கள் நடத்துவதில், இதுவரை அது கடைப்பிடித்த நடைமுறையை கைவிட்டு, இப்போது, எட்டு கட்சிகளை மட்டும் கூட்டி கூட்டம் நடத்தியது கண்டிக்கத்தக்கது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும், பா.ஜ.,வின் முடிவை, தமிழக மக்கள் மீது திணிப்பது சரியல்ல.


'எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் செய்ய, ஏதாவது ஒரு விவகாரத்தை எடுத்துக் கொண்டுள்ளன. இப்போது, ஆக்சிஜனை பிடித்துக் கொண்டுள்ளன...' என, கூறத் துாண்டும் வகையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை:
ஆக்சிஜனை வெளி மாநிலங்களுக்கு கொண்டு போக மத்திய அரசிடம் இசைந்து விட்டு, தங்களுக்கும், அதற்கும் சம்பந்தமேயில்லை என்று கபடநாடகம் ஆடும், அ.தி.மு.க., எப்போது திருந்தும்? மக்களிடம் பொய் சொன்ன அமைச்சர் விஜயபாஸ்கர் மன்னிப்பு கேட்பாரா?


'அந்த தனியார் நிறுவனங்கள் தான் காலம் காலமாக தடுப்பூசி தயாரித்து வருகின்றன. அவற்றை எப்படி தவிர்க்க முடியும். தடுப்பூசியில் அரசியல் செய்யக் கூடாது...' என, அறிவுறுத்த தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை:
தடுப்பூசி தயாரிப்பு பணியை தனியார் துறை நிறுவனங்களுக்கு மட்டும் வழங்கிய பின்னணியில், அந்த நிறுவனங்கள் மரண வியாபாரம் செய்ய துணிந்து விட்டன. இந்த மோசமான போக்கிற்கு உதவி செய்து, பல லட்சம் கோடி ரூபாய் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு மோடி அரசு வழிவகை செய்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X