அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஸ்டெர்லைட் ஆக்சிஜனை தமிழக தேவைக்கேற்ப பகிர்ந்தளியுங்க!'

Updated : ஏப் 29, 2021 | Added : ஏப் 27, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
சென்னை: 'ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை, தமிழகத்தின் முழு தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கும் பொறுப்பை, பிரதமர் மேற்கொள்ள வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை:துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் மட்டுமே தயாரிக்க அனுமதிக்க வேண்டும். தமிழக அரசு மற்றும் குழுவினர் முழு கண்காணிப்பில், ஆக்சிஜன் உற்பத்தி நடக்க வேண்டும் என,
'ஸ்டெர்லைட் ஆக்சிஜன், தமிழகம் தேவை,பகிர்ந்தளி'

சென்னை: 'ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை, தமிழகத்தின் முழு தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கும் பொறுப்பை, பிரதமர் மேற்கொள்ள வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் மட்டுமே தயாரிக்க அனுமதிக்க வேண்டும். தமிழக அரசு மற்றும் குழுவினர் முழு கண்காணிப்பில், ஆக்சிஜன் உற்பத்தி நடக்க வேண்டும் என, அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், ஸ்டெர்லைட்டில் வேதாந்தா நிறுவனம் ஆக்சிஜனை தயாரித்து, மத்திய அரசிடம் ஒப்படைக்கும். மத்திய அரசு, மாநிலங்களின் தேவைக்கேற்ப, ஆக்சிஜனை பிரித்து வழங்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து கட்சி களும் முன்வைத்த நிபந்தனையின் அடிப்படையிலான, அரசின் தீர்மானத்தை, உச்ச நீதிமன்றத்தில் உரிய முறையில் எடுத்துரைக்க, தமிழக காபந்து அரசு தவறிவிட்டதன் விளைவு இது.

சென்னை உட்பட, தமிழகத்தின் பல பகுதிகளிலும், கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஆக்சிஜன் தேவை, இனி வரும் நாட்களில் அதிகரிக்கும். எனவே, தமிழகத்தின் முழு தேவையை நிறைவேற்றிய பின், மீதமுள்ள ஆக்சிஜனை, பிற மாநிலங்களுக்கு அளித்திடுவதே, சரியான வழிமுறையாகும்.ஆக்சிஜனை பங்கிடும் பொறுப்பை, மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது. எனவே, பிரதமர் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை, தமிழகத்தின் முழு தேவைக்கேற்ப, பகிர்ந்தளிக்கும் பொறுப்பை மேற்கொள்ள வேண்டும்.இது தொடர்பாக பிரதமர் அலுவலகம், உடனடியாக தமிழக அரசு அதிகாரிகளுக்கும், வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். பேரிடர் நேரத்தில், தமிழகத்திற்கு எவ்வகையிலும் அநீதி இழைத்திடக் கூடாது.

ஸ்டெர்லைட் ஆலை, தற்காலிக அனுமதியுடன், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. தி.மு.க., அரசு அமைந்ததும், தற்காலிக அனுமதி காலம் முடிந்ததும், ஸ்டெர்லைட் ஆலை, முழுமையாக, 'சீல்' வைக்கப்படும்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
28-ஏப்-202122:53:01 IST Report Abuse
Mohan காபந்து அரசாமே,மே 2 ம் தேதி பாரு உன்ன கால்பந்து மாதிரி உதச்சு அனுப்பப் போறாங்க மக்கள்.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
28-ஏப்-202122:47:15 IST Report Abuse
Mohan யாரு பெத்த புள்ளையோ பாவம். வெட்டியும் சட்டையும் பாரு.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
28-ஏப்-202116:18:21 IST Report Abuse
sankaseshan இவருக்கும் இவர் அப்பாவுக்கும் என்னைக்கு விசால புத்தி இருந்தது எப்படி வேண்டாதவன ஒளிச்சு கட்டலாம் என்றுதான் யோசனை செய்யும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X