ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி : உச்ச நீதிமன்றம் உத்தரவு

Updated : ஏப் 29, 2021 | Added : ஏப் 27, 2021 | கருத்துகள் (8+ 57)
Share
Advertisement
புதுடில்லி : துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 'உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் அனைத்தையும், மத்திய அரசுக்கே வழங்க வேண்டும். தேசிய அளவில் நிலவும் சூழலை கருத்தில் வைத்தே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த அனுமதியை, வேறு எந்த பணிகளுக்கும், வேதாந்தா குழுமம் பயன்படுத்தக் கூடாது' என்றும், உச்ச
ஸ்டெர்லைட்  ஆக்சிஜன் ,உற்பத்தி, அனுமதி! நீதிமன்றம்

புதுடில்லி : துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 'உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் அனைத்தையும், மத்திய அரசுக்கே வழங்க வேண்டும். தேசிய அளவில் நிலவும் சூழலை கருத்தில் வைத்தே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த அனுமதியை, வேறு எந்த பணிகளுக்கும், வேதாந்தா குழுமம் பயன்படுத்தக் கூடாது' என்றும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுதும், கொரோனா தொற்றின் இரண்டாம் அலையால், தினமும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, மூன்று லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில், ஆக்சிஜன் முக்கிய பங்கு வகிக்கிறது. நோயாளிகள் அதிகரிப்பால், பல மாநிலங்கள், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் தடுமாறி வருகின்றன.
வன்முறைஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க, மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.தமிழகத்தின் துாத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை, சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாக, 2018ல் போராட்டங்கள் நடந்தன. அப்போது ஏற்பட்ட வன்முறையின் போது, போலீசார் சுட்டதில், 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அந்த ஆலை மூடப்பட்டது.இந்நிலையில், நாடு முழுதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து, ஸ்டெர்லைட் வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி கோரி, வேதாந்தா குழுமம், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.மனுவில், 'ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள இரண்டு கலன்களை பயன்படுத்தி, தினமும், 1,050 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும்; அதை, மருத்துவ மனைகளுக்கு இலவசமாக வழங்க தயார்' என, கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'நாட்டு மக்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படும் போது, ஏன் அதை தயாரிக்கக் கூடாது? தேசத்தின் சொத்துக்கள், அனைத்து மக்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டும். 'கொரோனாவால் மக்கள் உயிரிழந்து வரும் நிலையில், சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி, ஆக்சிஜன் தயாரிக்க முடியாது என, தமிழகஅரசு கூறக் கூடாது' என, தெரிவித்தது.இதற்கிடையில், தமிழகத்தில் நேற்று முன்தினம், அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவு:ஸ்டெர்லைட் ஆலையில், நான்கு மாதத்துக்கு ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டுமே அனுமதி அளிக்கலாம்; இதை பயன்படுத்தி, ஆலையை மீண்டும் திறக்கும் நடவடிக்கை எதிலும், நிர்வாகம் ஈடுபடக் கூடாது.
விசாரணைஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை, தமிழகத்தின் பயன்பாட்டுக்கு போக, மீதம் உள்ளதை மட்டுமே, மற்ற மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும்.இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று, நீதிபதிகள் சந்திரசூட், நாகேஸ்வர ராவ், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:ஸ்டெர்லைட் ஆலையின் மீது, முழு நம்பிக்கை இல்லை. அந்த ஆலையால், சுற்றுச்சூழல் மாசு அடைந்துள்ளது. துாத்துக்குடியில் மட்டுமல்ல; ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள பல்வேறு இடங்களில், சுற்றுச்சூழல் மாசு அடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. ஸ்டெர்லைட் நிறுவனம், ஆக்சிஜன் உற்பத்தியை தவிர, வேறு எந்த பணியிலும் ஈடுபடக் கூடாது. அரசு அமைக்கும் குழு, இதை கண்காணிக்கும். இந்த குழுவில், மாவட்ட கலெக்டர், எஸ்.பி., மற்றும் அந்த பகுதி மக்கள் இடம் பெற்றிருப்பர்.இவ்வாறு அவர் கூறினார்.எதிர்ப்புதமிழக அரசின் இந்த முடிவுக்கு, வேதாந்தா நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்; அவர் கூறியதாவது:கண்காணிப்பு குழுவில், உள்ளூர் நபர்கள் இடம் பெறக்கூடாது. துாத்துக்குடியில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை, தமிழகத்திற்கு மட்டுமே வழங்க வேண்டும் என, தமிழக அரசு கூறுவதை ஏற்கக் கூடாது. பல மாநிலங்களுக்கும், அனுப்பி வைக்க வேண்டி உள்ளது. அனைத்து மக்களுக்கும், ஆக்சிஜனை இலவசமாக வழங்குவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா கூறுகையில், ''இது, தேசிய அளவிலான பிரச்னை. உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை, மத்திய அரசே கையாளும் என்ற உத்தரவு, ஏற்கனவே அமலில் உள்ளது,'' என்றார். இதை ஏற்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஆக்சிஜன் தயாரிப்பதற்காக, ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி அளிக்கிறோம். இந்த உத்தரவு, தற்போதைய தேசிய சூழல் மற்றும் மக்கள் நலனை கருத்தில் வைத்தே பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதி, வேதாந்தா நிறுவனத்துக்கு, வரும் காலத்தில் ஆதரவாக அமையாது.இந்த அனுமதியை வைத்து, வேதாந்தா நிறுவனம், ஆலையில் தாமிர உற்பத்தி உட்பட, வேறு எந்த பணியையும் மேற்கொள்ளக் கூடாது.

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஆலைக்குள் நுழையும் ஊழியர்களின் பட்டியலை, அரசிடம் அளித்து, வேதாந்தா நிறுவனம் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை, தமிழகத்துக்கே தர வேண்டும் அல்லது முன்னுரிமை அளிக்க வேண்டும் என, தமிழக அரசு கோருகிறது. ஆனால், தமிழகத்தில் தற்போது மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன், தேவைக்கேற்ப உள்ளது. அதனால், ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை, மத்திய அரசுக்கே அளிக்க வேண்டும். மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப, மத்திய அரசே பிரித்து அளிக்கும்.
சுற்றுச்சூழல்வரும் காலத்தில், பற்றாக்குறையோ அல்லது தேவை அதிகரித்தாலோ, இந்த உத்தரவை மாற்றி அமைக்க, உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு அணுகலாம்.ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க, ஐந்து பேர் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்படும். இந்த குழுவை, தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு மையம் தேர்வு செய்யும்.இந்தக் குழுவில், உள்ளூர் மக்கள் இருவர் இடம் பெற வேண்டும். இது தொடர்பாக, தமிழக அரசுடன் ஆலோசித்து, உள்ளூர் மக்களை குழுவில் சேர்க்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (8+ 57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
05-மே-202119:20:23 IST Report Abuse
bal கண்டிப்பா தமிழகத்துக்கு கொடுக்காதீங்க...அதுவும் தென் தமிழ் மாவட்டங்களுக்கு கொடுக்காதீங்க...அவனுகதான் மூட காரணம்...
Rate this:
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
28-ஏப்-202118:45:46 IST Report Abuse
G.Prabakaran இந்த ஆலையில் தயாரிப்பது மருத்துவ ஆக்சிஜன் தானா என கண்காணிக்க வேண்டும். Industrial Oxygen வேறு Medical Oxygen வேறு
Rate this:
Cancel
venkata achacharri - india,இந்தியா
28-ஏப்-202108:42:48 IST Report Abuse
venkata achacharri திருச்சி டிஸ்டிலரீஸ் செய்த அட்டகாசத்தை விட தூத்துக்குடி மேல் டி எம் கே கோவ்ட் ஒன்றுமே செய்யவில்லை அப்போது நல்ல தீர்ப்பு மத்திய அரசு கண்ட்ரோலில் ஒஸ்ய்ஜ்ன் சப்ளை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X