பொது செய்தி

இந்தியா

ஒரு கட்ட தேர்தலே சிறந்தது: முன்னாள் கமிஷனர் கருத்து

Updated : ஏப் 29, 2021 | Added : ஏப் 27, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
பெங்களூரு :''தேர்தலில் ஓட்டுப்பதிவு, பல்வேறு கட்டங்களாக அல்லாமல், ஒரே நாளில் நடத்தி முடிக்கப்பட வேண்டும்,'' என, முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷனர், டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷனர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: தேர்தல் சமயத்தில், பிரசார ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்துவதை நிறுத்த முடியாது. ஆனால், பிரசாரம்
ஒரு கட்ட தேர்தல், முன்னாள் கமிஷனர், கிருஷ்ணமூர்த்தி

பெங்களூரு :''தேர்தலில் ஓட்டுப்பதிவு, பல்வேறு கட்டங்களாக அல்லாமல், ஒரே நாளில் நடத்தி முடிக்கப்பட வேண்டும்,'' என, முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷனர், டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷனர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: தேர்தல் சமயத்தில், பிரசார ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்துவதை நிறுத்த முடியாது. ஆனால், பிரசாரம் நடக்கும் நாட்கள் மற்றும் நேரத்தை கணிச மாக குறைக்க முடியும். தற்போது, 'டிஜிட்டல்' ஊடகங்கள் வாயிலாகவும், மக்களை எளிதில் சென்று சேர முடியும் என்ற நிலை உள்ளது.மேலும், தேர்தல் வன்முறைகளை தவிர்ப்பதற்காக, ஒரு சில மாநிலங்களில், பல்வேறு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்தப்படுகிறது.

அப்படி நடத்துவதன் வாயிலாக, வன்முறை சம்பவங்கள் குறைவதாகவும், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க முடிவதாகவும் கூறப்படுகிறது.ஆனால், சமீபத்திய மேற்கு வங்க சட்டசபை தேர்தல் எட்டு கட்டங்களாக நடத்தப்பட்டும் வன்முறையை தடுக்க முடியவில்லை. பல்வேறு வேற்றுமைகளுடனான சமூக கட்டமைப்பு உடைய நம் நாட்டுக்கு, பல்வேறு கட்ட ஓட்டுப்பதிவு சரிபட்டு வராது. எனவே, ஓட்டுப்பதிவுகள் ஒரே நாளில் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தத்வமசி - சென்னை ,இந்தியா
28-ஏப்-202122:23:53 IST Report Abuse
தத்வமசி ஒரே கட்ட தேர்தல் என்பது நமது நாட்டில் இருந்த வழக்கம் தான். அதை நடுவில் தங்களுக்கு சாதகமாக இன்னும் பிற காரணத்திற்க்காக மத்திய அரசு மாற்றியது. அதை மீண்டும் மாற்றலாமா என்று ஆய்ந்து கொண்டு இருக்கிறது மத்திய அரசும் தேர்தல் துறையும். வாய் கோணலாக இருந்தால் எதுவும் பேசலாம். விவரங்கள் தெரியாமல் பலர் இங்கே பதிவுகளை இட்டுள்ளனர்.
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
28-ஏப்-202120:42:16 IST Report Abuse
sankar நேர்மையான - நியாயமான முறையில் தேர்தல் நடத்த - பலகட்ட தேர்தலே சிறந்தது - பாதுகாப்பு ஏற்பாடுகள் கண்டு பயம் கொள்வோர் குறை சொல்வர் - ஏனெனில் வன்முறை செய்து வாக்குகளை அபகரிக்க முடியாதே
Rate this:
Cancel
A. Narayanan - Chennai,இந்தியா
28-ஏப்-202117:46:30 IST Report Abuse
A. Narayanan இவர் முன்னால் யார் மைக்கை நீட்டியது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X