டில்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏன்? கெஜ்ரிவால் மீது புகார்

Updated : ஏப் 29, 2021 | Added : ஏப் 27, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி :'டில்லியில், ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பலர் இறக்க நேரிட்டதற்கு, அம்மாநில அரசு, உரிய முறையில் ஆக்சிஜன் டேங்கர்களை கையாள தவறியதே காரணம்' என, மத்திய அரசு ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது. டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, தலைமைச் செயலர் விஜய்தேவுக்கு, மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா காட்டமான கடிதம்
Delhi Oxygen Crisis, Arvind Kejriwal, Kejriwal, டில்லி, ஆக்சிஜன், தட்டுப்பாடு,கெஜ்ரிவால், புகார்

புதுடில்லி :'டில்லியில், ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பலர் இறக்க நேரிட்டதற்கு, அம்மாநில அரசு, உரிய முறையில் ஆக்சிஜன் டேங்கர்களை கையாள தவறியதே காரணம்' என, மத்திய அரசு ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, தலைமைச் செயலர் விஜய்தேவுக்கு, மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா காட்டமான கடிதம் அனுப்பியுள்ளார்.


கொள்முதல்


அதில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா நோயாளி களின் சிகிச்சைக்கு தேவைப்படும் ஆக்சிஜன் கொள்முதலை, பல மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் சிறப்பாக கையாண்ட நிலையில், டில்லி அரசு மட்டும் சரிவர செயல்பட தவறிவிட்டது. மத்திய அரசு, தொழிற்சாலைகளுக்கான ஆக்சிஜனுக்கு தடை விதித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து, ஆக்சிஜன் டேங்கர்களை இறக்குமதி செய்கிறது. ஆக்சிஜன் டேங்கர்கள் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக குழுவின் வழிகாட்டுதல்படி ஒதுக்கப்படும் ஆக்சிஜனை, அனைத்து மாநிலங்களும் தீவிரமாக செயல்பட்டு, தடையின்றி மருத்துவமனைகளுக்கு வினியோகம் செய்கின்றன.

ஆனால், மத்திய அரசு ஆக்சிஜன் ஒதுக்கியும், அவற்றை எடுத்துச் செல்வதற்கான டேங்கர்களை, டில்லி அரசு சரியான முறையில் ஏற்பாடு செய்யத் தவறிவிட்டது. அனைத்து மாநில தலைமை செயலர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பின்பற்றி, உடனடியாக ஆக்சிஜன் போக்குவரத்து தடையின்றி நடக்க, டில்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு ஒதுக்கியதை விட, டில்லி அரசுக்கு குறைவான ஆக்சிஜன் கிடைத்ததற்கு, சரியான டேங்கர்களை ஏற்பாடு செய்யாததே காரணம் என்பது தெரியவந்துள்ளது. ஐநாக்ஸ் நிறுவனம், ஏற்கனவே, டில்லியில், 45 மருத்துவமனைகளுக்கு, 105 டன் ஆக்சிஜன் சப்ளை செய்து வருகிறது. அந்நிறுவனத்திற்கு, 17 மருத்துவமனைகளில், 98 டன் ஆக்சிஜன் சப்ளை செய்யும்படி, டில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.


மாற்று ஏற்பாடு


இதில் இருந்து, கள நிலவரம் தெரியாமல், டில்லி அரசு செயல்பட்டது தெளிவாக தெரிகிறது. எஞ்சிய, 28 மருத்துவமனைகளுக்கான, மாற்று ஏற்பாடுகளை செய்ய, டில்லி அரசு தவறிவிட்டது. அதனால், சில மருத்துவமனைகளில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, இரு மருத்துவமனைகளில், உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. டில்லி அரசு, சரியான முறையில் ஆக்சிஜன் வினியோகத்தை மேற்கொண்டிருந்தால், உயிரிழப்பை தடுத்திருக்கலாம். அனைத்து மருத்துவமனைகளுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேசி, நிலைமையை கேட்டறிந்திருந்தால் கூட, கள நிலவரம் புரிந்து, ஆக்சிஜன் தட்டுப்பாட்டை தவிர்த்திருக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


டில்லி அரசு தோல்வி


டில்லி உயர் நீதிமன்றத்தில், நீதிபதி விபின் சங்கி தலைமையிலான அமர்வில், ஆக்சிஜன் வினியோகம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'டில்லியில் ஆக்சிஜன் சிலிண்டர்களும், கொரோனா சிகிச்சை மருந்துகளும் கள்ளச் சந்தையில் விற்கப்படுகின்றன. இதை தடுக்கும் முயற்சியில் டில்லி அரசு தோல்வி அடைந்து விட்டது' என அமர்வு காட்டமாக தெரிவித்தது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohankumar - Trichy,இந்தியா
28-ஏப்-202123:51:19 IST Report Abuse
mohankumar டில்லி ஹை கோர்ட் ஆல தெரியவில்லை என்றால்போர்ஜரிவளை பதவியை விட்டு விலகி நிர்வாகத்தை மத்திய அரசிடம் ஒப்படைத்து விட்டு செல்லும்படி உத்தரவிட்டுள்ளது . அதன்படி இன்று நள்ளிரவு முதல் கவர்னருக்கு தெரியாமல் எந்த நடவடிக்கையும் கூடாது என் உத்திரவு
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
28-ஏப்-202119:25:58 IST Report Abuse
bal இவனுக்கு கூச்சல் மற்றும் போராட்டம் மட்டும்தான் தெரியும்...இல்லேன்னா டெல்லிக்காக நாடு முழுவதும் தொலை காட்சியில் மக்கள் பணத்தை கொடுத்து விளம்பரம் பண்ணுவான்..நம்ம அண்ணாச்சி மாதிரி.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
28-ஏப்-202119:24:22 IST Report Abuse
bal அறிவில்லாதவர்களை பதவியில் அமர்த்தினால் இப்படிதான் நடக்கும்...அது மாநில அரசோ இல்ல மத்திய அரசோ...புததி யுள்ளவர்கள் வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X