தொற்றின் வேகம் குறைந்துள்ளது: நம்பிக்கை தருகிறார் ராதாகிருஷ்ணன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொற்றின் வேகம் குறைந்துள்ளது: நம்பிக்கை தருகிறார் ராதாகிருஷ்ணன்

Updated : ஏப் 29, 2021 | Added : ஏப் 27, 2021 | கருத்துகள் (10+ 9)
Share
சென்னை : ''தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகம் குறைந்துள்ளது,'' என, தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.2,000 படுக்கைகள்சென்னை, தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் உள்ள, கொரோனா பரிசோதனை மையம் மற்றும் தடுப்பூசி முகாமை, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டார்.பின், அவர் கூறியதாவது: முழு ஊரடங்கு மற்றும் புதிய
 தொற்று,வேகம்,  குறைவு, நம்பிக்கை,ராதாகிருஷ்ணன்

சென்னை : ''தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகம் குறைந்துள்ளது,'' என, தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.


2,000 படுக்கைகள்



சென்னை, தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் உள்ள, கொரோனா பரிசோதனை மையம் மற்றும் தடுப்பூசி முகாமை, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டார்.பின், அவர் கூறியதாவது: முழு ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகளால், கொரொனா தொற்றின் வேகம் குறைந்துள்ளது.

சில தினங்களுக்கு, தேவையின்றி வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.குறிப்பாக, நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளவர்கள், வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக, 12 ஆயிரம் ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் அமைக்கப்படுகின்றன.இதில், 2,000 படுக்கைகள், இந்த வாரம் முதல்செயல்படும். தமிழகத்திற்கு, 52 ஆயிரம், 'டோஸ்' ரெம்டெசிவர் மருந்து கிடைத்துள்ளது.


சித்த மருத்துவ சிகிச்சை



இந்த மருந்து, தேவையானவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். ரெம்டெசிவர் மருந்து, படிப்படியாக மற்ற மாவட்டகளிலும் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்படும்.
ஒரே வீட்டில் இருக்கும் எட்டு நபர்களுக்கு, கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா நோயாளிகள், தொடர்ந்து முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.

கொரோனா பாதிப்பில், சித்த மருத்துவம் நமக்கு கை கொடுத்துள்ளது. மீண்டும் முழு வீச்சில், சித்த மருத்துவ சிகிச்சை துவங்கப்படும்.தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் துவங்க, குழு அமைக்கப்பட்டு உள்ளது. மே, 2ல் ஓட்டு எண்ணிக்கை அன்று பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பார்.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X