பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா விதிகளை கண்டிப்புடன் பின்பற்றுங்கள்: தலைமை செயலர் உத்தரவு

Updated : ஏப் 29, 2021 | Added : ஏப் 27, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை : 'அனைத்து அரசு அலுவலகங்களிலும், கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை, தவறாமல் பின்பற்ற வேண்டும்' என, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், துறை தலைவர்களுக்கும், தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன், கடிதம் அனுப்பி உள்ளார்.கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:*அலுவலகத்தில் பணிபுரிவோர் இடையே, 6 அடி இடைவெளி இருக்க வேண்டும்* அனைவரும் எப்போதும் முக கவசம்அல்லது முக தடுப்பு
 கொரோனா, விதிகள், கண்டிப்பு, பின்பற்றுங்கள்,

சென்னை : 'அனைத்து அரசு அலுவலகங்களிலும், கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை, தவறாமல் பின்பற்ற வேண்டும்' என, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், துறை தலைவர்களுக்கும், தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன், கடிதம் அனுப்பி உள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

*அலுவலகத்தில் பணிபுரிவோர் இடையே, 6 அடி இடைவெளி இருக்க வேண்டும்

* அனைவரும் எப்போதும் முக கவசம்அல்லது முக தடுப்பு அணிந்திருக்க வேண்டும்

*அடிக்கடி கைகளை, 40 முதல், 60 வினாடிகள் சோப்பால் கழுவ வேண்டும்

*கிருமி நாசினி பயன்படுத்தினால், குறைந்தது, 20 வினாடிகள் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்

* தும்மல், இருமல் வந்தால், டிஷ்யூ பேப்பர், கைகுட்டை பயன்படுத்த வேண்டும். துப்புவது முழுமையாக தடை செய்யப்பட வேண்டும்

*அனைவரும் தங் கள் மொபைல் போனில், 'ஆரோக்கிய சேது' செயலியை டவுன்லோடு செய்து கொள்ளவும்.நோய் அறிகுறி இல்லாதவர்களை மட்டும், அலுவலகத்திற்குள் அனுமதிக்க வேண்டும்

* உடல் வெப்பநிலையை பரிசோதித்த பின், அனுமதிக்க வேண்டும்

*மதிய உணவின் போதும், ஊழியர்கள் சமூக இடை வெளியை பராமரிக்க வேண்டும்

* 'ஏசி' அறையில், 24 டிகிரி முதல், 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பராமரிக்கப்பட வேண்டும். அறைகள் காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும்

*பணி செய்யும் இடத்தை, தொடர்ச்சியாக கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.

*அதிகம் பேர் கூடுவதை தவிர்க்க வேண்டும்

*யாருக்கேனும் நோய் அறிகுறி இருந்தால், அவர்களை மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்.அவர்களுக்கு நோய் தொற்று உறுதியானால், அவர்கள் பணிபுரிந்த அறை முழுவதையும், கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்

*தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட வேண்டும்

*அலுவலகத்தில் பணி புரிவோர்; தடுப்பூசி போட தகுதியானோர்; முதல் டோஸ், இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் விபரத்தை, வரும், 30ம் தேதிக்குள், அரசுக்கு அனுப்ப வேண்டும்.அதன்பின் வாரந்தோறும், தடுப்பூசி போட்டவர்கள் குறித்த விபரத்தை அனுப்ப வேண்டும்.இவ்வாறு ராஜிவ் ரஞ்சன் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஏப்-202111:44:58 IST Report Abuse
அமாவாசை..உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி சேவப்ப இருக்கறவங்க சொன்னா சரியாதான் இருக்கும்... சரிங்க எஜமான்...
Rate this:
Cancel
nation first - MUMBAI,இந்தியா
28-ஏப்-202107:10:46 IST Report Abuse
nation first திருவண்ணாமலையில் சித்ரா பவு்ணமியன்று திரு. ஸ்டாலின் மகள் தோழியுடன் கிரிவலம். இவர் இதை அறிவாரா? .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X