அரசியல் செய்தி

தமிழ்நாடு

நம்மை காப்பது நம்மிடமே: கமல் யோசனை

Updated : ஏப் 29, 2021 | Added : ஏப் 27, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
சென்னை : 'நம்பிக்கையோடு போராடினால், நமக்கு நாமே தீர்வு' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியுள்ளார்.அவரது நேற்றைய அறிக்கை:கொரோனா பெருந்தொற்று பரவலால், நம் வாழ்க்கையே எதிர்பாராத வகையில் மாறி விட்டது.நோயிடம் இருந்து தப்பித்து வாழ்வதற்கான வழிமுறைகளை, நாம் கடைப்பிடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில்இருக்கிறோம்.நான் இரண்டு தவணையும், தடுப்பூசி போட்டுக் கொண்டேன். எந்த
Kamal, Kamal Haasan, Corona Virus, கமல், கமல்ஹாசன், கொரோனா

சென்னை : 'நம்பிக்கையோடு போராடினால், நமக்கு நாமே தீர்வு' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியுள்ளார்.அவரது நேற்றைய அறிக்கை:கொரோனா பெருந்தொற்று பரவலால், நம் வாழ்க்கையே எதிர்பாராத வகையில் மாறி விட்டது.

நோயிடம் இருந்து தப்பித்து வாழ்வதற்கான வழிமுறைகளை, நாம் கடைப்பிடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில்இருக்கிறோம்.நான் இரண்டு தவணையும், தடுப்பூசி போட்டுக் கொண்டேன். எந்த பாதிப்பும் இல்லை. எந்த தயக்கமும் இன்றி, தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். சுற்றத்தாரையும் போட வலியுறுத்துங்கள்; பொது வெளி நடமாட்டத்தை குறையுங்கள்.முகக்கவசம் பயன்படுத்துங்கள்.

முன்னெச்சரிக்கை வழிமுறைகளை அவசியம் கடைப்பிடியுங்கள். நம் பாரம்பரிய முறைப்படி நீராவி பிடிப்பது, மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி, யோகா மேற்கொள்வது அவசியம். ஆரோக்கியமான உணவு முறைக்கு மாறிக் கொள்வதுடன், தினம் ஒரு ரசம் வைத்து சாப்பிடுவதும் நல்லது.

வதந்திகளை நம்பாதீர்; உங்களையே நம்பியுள்ள பணியாளர்கள் உள்ளிட்டோரை கைவிடாதீர்கள். மற்றவர்களுக்கு முடிந்தவரை உதவுங்கள்.ஒரு எல்லைக்கு மேல், அரசால் நம்மை காக்க முடியாது. மருத்துவ கட்டமைப்புக்கு, மேலும் சுமையை கூட்டக்கூடாது. நம்மை பாதுகாக்கும் பொறுப்பை, நம்மிடமே வைத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
28-ஏப்-202122:56:57 IST Report Abuse
பஞ்ச்மணி அப்பாடா இன்னைக்கு தான் கமலம உருப்படியா அல்லாருக்கும் புரியும்படியா ஒரு கருத்தை ஒப்பிச்சிருக்கு
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
28-ஏப்-202120:49:33 IST Report Abuse
Krishnamurthy Venkatesan GOOD STATEMENT MR. KAMAL. GREETINGS TO YOU.
Rate this:
Cancel
MURUGESAN - namakkal,இந்தியா
28-ஏப்-202118:03:35 IST Report Abuse
MURUGESAN அருமையான விழிப்புணர்வு பதிவு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X