பொது செய்தி

தமிழ்நாடு

'ஆக்சிஜனை எடுத்து செல்வதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும்'

Updated : ஏப் 29, 2021 | Added : ஏப் 27, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
'தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. தேவைப்படும் இடங்களுக்கு, ஆக்சிஜனை எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்து மற்றும் கட்டமைப்புகள் இல்லை. அவற்றை உருவாக்க, நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்' என, ரசாயன தொழிற்சாலைகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.இது தொடர்பாக, அந்த சங்கத்தின் தலைவர் இளநகை கூறியதாவது:தமிழகத்தில், பெல், சி.பி.சி.எல்., போன்ற பெரிய தொழிற்சாலைகளில்,
'ஆக்சிஜன், செல்ல, கட்டமைப்பு, வேண்டும்'

'தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. தேவைப்படும் இடங்களுக்கு, ஆக்சிஜனை எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்து மற்றும் கட்டமைப்புகள் இல்லை. அவற்றை உருவாக்க, நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்' என, ரசாயன தொழிற்சாலைகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக, அந்த சங்கத்தின் தலைவர் இளநகை கூறியதாவது:தமிழகத்தில், பெல், சி.பி.சி.எல்., போன்ற பெரிய தொழிற்சாலைகளில், ஆக்சிஜன் தயாரிப்பு மையங்கள் உள்ளன. இவற்றில், ஆக்சிஜன் தயாரிப்பு நடக்கும் நிலையில், தட்டுப்பாடு ஏற்படாது. ஆனால், ஆக்சிஜனை எடுத்து செல்வதில் தான், சிக்கல்கள் உள்ளன; அதற்கு டேங்கர்கள், சிலிண்டர்கள் அதிகம் தேவை. இதற்கு, துறை சார்ந்த நிபுணர்கள் குழுவை நியமிக்க வேண்டும். தொழில் துறையினர், ரசாயன தொழிற்சாலைகளின் உறுப்பினர்கள், ராணுவ இன்ஜினியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் என, பல தரப்பினரும், அந்தக் குழுவில் இடம் பெற வேண்டும். அத்துடன், போர்க்காலத்தில் அமைக்கப்படும், 'வார் ரூம்' மாதிரி, ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆக்சிஜன் தொழிற்சாலைகளின் விபரங்களையும் பெற வேண்டும். தொழிற்சாலைகளில் இருந்து, மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜனை எப்படி எடுத்துச் செல்வது; அதற்கான சாத்தியக்கூறுகள் என்ன என்பது தொடர்பான ஆலோசனைகளை உடனடியாக வழங்க வேண்டும்.இதை செய்தால், ஆக்சிஜன் தேவைப்படுவோருக்கு உடனடியாக வழங்கி, உயிரிழப்பை தடுக்க முடியும். ஆக்சிஜன் எங்கு கிடைக்கும்; சிலிண்டர்கள் எங்கு கிடைக்கும் என்பது தொடர்பான அனைத்து தகவல்களையும், அரசு வெளியிட வேண்டும்.

அரசுக்கு தேவையான உதவிகளை செய்ய, ரசாயன தொழில் துறையும், அனைத்து தொழில் துறை அமைப்புகளும் தயாராக உள்ளன. தற்போது, ரசாயன தொழில் துறை சார்பில், 100 நபர்களுக்கு ஆக்சிஜன் வழங்கக்கூடிய, 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு ஆக்சிஜன் மையத்தை, வேலுாரில் உள்ள சி.எம்.சி., மருத்துவமனையில் நிறுவ உள்ளோம்.இதேபோல, தமிழக அரசு விருப்பம் தெரிவித்தால், முக்கியமான அரசு மருத்துவமனையில், துறை சார்பில் செய்து தர தயாராக உள்ளோம்.இவ்வாறு இளநகை கூறினார். - -நமது நிருபர் -


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J. G. Muthuraj - bangalore,இந்தியா
28-ஏப்-202123:35:08 IST Report Abuse
J. G. Muthuraj வேலை செய்து தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்யமுடியும் என்று ரசாயன உலைகள் முனைப்புடன் தயாராக இருக்கிறார்களே ஆனால், அனைத்து தொழிற்சாலைகளின் பட்டியலில் தமிழக அரசிடம் இல்லையாம் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை கொண்டு செல்ல அடித்தளத்தில் செயல்படும் கட்டமைப்பும் இல்லையாம்....சிரிக்கவா/அழுகவா...? இயங்காத துருப்பிடித்த ஆலையை ஏன் பிடித்து தொங்கவேண்டும்....? .இதை கவனிக்காமல், மேல்மட்ட அளவில் பிரச்சனையை தீர்க்க அதிகாரிகளை நியமித்து வருகிறதாம் தமிழக அரசு.....குதிரையை வண்டிக்கு முன்னால் பூட்டுங்கள்...வண்டிக்கு பின்னாலே அல்ல....
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
28-ஏப்-202101:07:37 IST Report Abuse
அன்பு இந்தியாவில் ஆக்சிஜென் உற்பத்திக்கு பஞ்சமில்லை. பிரச்சனை போக்குவரத்து கட்டமைப்புகள் இல்லாததால், வடமாநிலங்களில் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதற்கு தான் இப்போது அம்பானி மற்றும் அதானி கடுமையாக கட்டமைப்பை முன்னேற்ற அரும்பாடு படுகிறார்கள். இன்னும் ஒரே வருடத்தில், இந்தியா அமெரிக்கா ஆகிவிடும். அப்போது ஆக்சிஜென் சிலிண்டரை பிளேனில் கூட ஏற்றி கொண்டுபோய் விடலாம்.
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
28-ஏப்-202107:51:25 IST Report Abuse
கொக்கி குமாரு தமிழ்நாட்டின் முதலாவது பணக்காரர், இந்தியாவின் 40வது பணக்காரர் திருட்டு திமுகவின் கேடி பிரதர்ஸ் கலாநிதி மாறன் எதுக்கு பாடுபடுறாருன்னு சொன்னா நல்லாருக்கும்....
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
28-ஏப்-202101:03:16 IST Report Abuse
Mohan பேசன்டோட கட்டமைப்பையா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X