திருமணத்தில் புகுந்து கலெக்டர் எடுத்த நடவடிக்கை சரியா தவறா : டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : ஏப் 28, 2021 | Added : ஏப் 28, 2021 | கருத்துகள் (129)
Advertisement
அகர்தலா : திரிபுரா மாநிலத்தில் இரவுநேர ஊரடங்கை மீறி திருமணம் நடந்ததாக கூறி இரண்டு திருமண மண்டபங்களில் அதிரடி ரெய்டு நடத்தி, திருமண வீட்டாரை கைது செய்த மாவட்ட ஐஏஎஸ்., அதிகாரி சைலேஷ்குமாரின் செயல் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. அவர் செய்தது சரியா, தவறா என்ற விவாதத்தை முன்வைத்து பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.கொரோனாவின் இரண்டாவது அலையால் நாடு தவித்து
TripuraDM

அகர்தலா : திரிபுரா மாநிலத்தில் இரவுநேர ஊரடங்கை மீறி திருமணம் நடந்ததாக கூறி இரண்டு திருமண மண்டபங்களில் அதிரடி ரெய்டு நடத்தி, திருமண வீட்டாரை கைது செய்த மாவட்ட ஐஏஎஸ்., அதிகாரி சைலேஷ்குமாரின் செயல் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. அவர் செய்தது சரியா, தவறா என்ற விவாதத்தை முன்வைத்து பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
கொரோனாவின் இரண்டாவது அலையால் நாடு தவித்து கொண்டிருக்கிறது. பல மாநிலங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என விதிக்கப்பட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இம்மாநிலத்தில் அகர்தலாவில் ஒரு ஊரில் இரண்டு திருமண மண்டபங்களில் இரவு நேர ஊரடங்கு நேரத்தை தாண்டியும் திருமணம் நடந்துள்ளது.


latest tamil news

அதிரடி ரெய்டு


இதுகுறித்து தகவல் திரிபுரா மேற்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் சைலேஷ் குமார் யாதவுக்கு தெரிய வந்தது. இதையடுத்து இரவு 11 மணிக்கு போலீசாரின் உதவியோடு திருமண மகாலுக்கு சென்று அதிரடி ரெய்டு நடத்தினார். அங்கு கொரோனா விதிமுறைகளை அவர்கள் மீறியதாக கூறி அனைவரையும் உடனடியாக வெளியேற்றினார். வாக்குவாதம் செய்தவர்களை கைது செய்தார். உரிய அனுமதி பெற்று தான் தாங்கள் திருமணம் நடத்துவதாக கூறி பெண் ஒருவர் காண்பித்த அனுமதி கடிதத்தை கூட என்ன ஏது என்று படித்து பார்க்காமல் கிழித்து அந்த பெண்ணின் முகத்தில் வீசினார். மணமகன், புரோகிதர் உள்ளிட்டவர்களையும் சட்டையை பிடித்து இழுத்து வெளியேற்றினார். ஓரிருவரை அவர் அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூகவலைதங்களில் வைரலானது. இதுதொடர்பாக 19 பெண்கள் உட்பட 31 பேரை போலீசார் கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர்.

இதுப்பற்றி செய்தியாளர்களிடம் பேசிய சைலேஷ் குமார் : ‛‛இங்கு யாரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை. இதுமாதிரியான நிறைய புகார்கள் வந்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் நானே நேரில் வரும்படி ஆகிவிட்டது. யாருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டு அது அப்படியே பரவி இருந்தால் அதற்கும் அரசை தான் குறை சொல்வார்கள். இதை பொதுமக்கள் உதாரணமாக எடுக்க வேண்டும். படித்தவர்களே இப்படி செய்கிறார்கள். பாமர மக்களை என்னவென்று சொல்லுவது. மேலும் இப்படி அத்துமீறி திருமணம் நடத்த அனுமதி அளித்த திருமண மண்டபம் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறேன்'' என்றார்.


latest tamil news


Advertisement
நடவடிக்கை தேவை


சைலேஷ் குமாரின் இந்த அதிரடி நடவடிக்கை சமூகவலைதளங்களில் வைரல் ஆனது. பலரும் அவரின் நடவடிக்கையை பாராட்டினர். அதேசமயம் இவ்வளவு கெடுபிடி காட்டியதை பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 5 எம்.எல்.ஏ.,க்கள் மனு கொடுத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.மன்னிப்பு


இதற்கிடையே தனது செயலுக்கு மன்னிப்பு கோரி உள்ளார் சைலேஷ் குமார். அவர் கூறுகையில், ‛‛பொதுமக்களின் நலனுக்காகவே நான் இப்படி ஒரு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதாகிவிட்டது. என் நடவடிக்கையால் யாரும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். மற்றபடி என் நடவடிக்கைகளில் எந்த உள்நோக்கமும் கிடையாது'' என தெரிவித்துள்ளார்.


latest tamil news

டுவிட்டரில் டிரெண்டிங்


திருமண நிகழ்வில் சைலேஷ் குமார் எடுத்த அதிரடி நடவடிக்கை சமூகவலைதளங்களில் வைரல் ஆனதோடு, அவர் செய்தது சரியா, தவறா என்ற விவாதத்தையும் கிளப்பிவிட்டுள்ளது. இதுதொடர்பாக பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவதால் #TripuraDM என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. இதில் பதிவான சிலரின் கருத்துக்கள்...
* சைலேஷ் குமார் அவர்கள் எடுத்த நடவடிக்கை சரி தான். நாடு கொரோனாவால் என்ன மாதிரியான நிலையில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கையில் படித்தவர்ளே இப்படி செய்கிறார்கள். என்னவென்று சொல்வது.
* அவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் ஒருவருக்கு கொரோனா நோய் இருந்திருந்தால் என்ன ஆகும். அதில் பங்கேற்ற அனைவருக்கும் நோய் தொற்று ஏற்படும். அது அப்படியே இன்னும் பலருக்கும் ஏற்படும். இந்த நடவடிக்கை தேவை தான்.


latest tamil news* இப்படி ஒரு நடவடிக்கை அவசியம் தான். இப்படி செய்தால் தான் இனி திருமணம் செய்ய நினைப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பார்கள். அவர்களுக்கு இது நடவடிக்கை கண்டிப்பாக முன்னுதாரணமாக இருக்கும்.
* சைலேஷ் குமார் எடுத்த நடவடிக்கை பாராட்டப்பட வேண்டியது தான். ஆனால் இவ்வளவு கடுமை காட்ட வேண்டிய அவசியமில்லை.
* கண்டிப்பாக சைலேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களிடம் இவ்வளவு அடாவடியாக காட்டுவது. இதேமாதிரிய அரசியல் கட்சியினர் யாராவது கூட்டம் நடத்தினால் அவர்களிடம் சென்று இதுபோன்று அவர் நடவடிக்கை எடுப்பாரா.
* புரோகிதர்களை அடிக்கிறார், மணமகனை கழுத்தை பிடித்து தள்ளுகிறார். வயதானவர்கள் மீது போலீசார் லத்தி எடுத்து அடிக்கிறார்கள், தகாத வார்த்தைகளை பேசுகிறார், பெண்ணின் முகத்தின் மீது பேப்பரை கிழித்து எரிகிறார். இது என்ன மாதிரியான நாகரிகம் என்று தெரியவில்லை. இங்கு யார் படித்தவர்கள்.


latest tamil news* மாவட்ட கலெக்டர் போன்றா இவர் செயல்படுகிறார். ஏதோ படங்களில் வில்லன்கள் புகுந்து அடாவடி செய்து போன்று நடந்து கொண்டுள்ளார். செய்வதை எல்லாம் செய்துவிட்டு இப்போது மன்னிப்பு கேட்கிறார். அசிங்கமாக உள்ளது ஆபிசர்.
* திருமணம் என்பது ஒருவரின் வாழ்வில் எவ்வளவு முக்கியமானது. மணமக்களுக்கும், அதை நடத்தி வைக்கும் பெற்றோர், சொந்த பந்தங்களுக்கும் வாழ்நாள் முழுக்க ஞாபகம் தரக்கூடியது. இவரின் மோசமான நடவடிக்கையால் அவர்கள் என்ன மனநிலையில் இருப்பார்கள். நிச்சயம் அவர்கள் நெஞ்சில் ஆறாத காயமாக இந்த சம்பவம் பதிந்து இருக்கும்.

Advertisement
வாசகர் கருத்து (129)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
04-மே-202109:17:43 IST Report Abuse
sankar தேர்தல் பிரச்சாரம் நடந்தபோது இவர் என்ன செய்துகொண்டு இருந்தார்
Rate this:
Cancel
KALAIVANI K - TINDIVANAM,இந்தியா
03-மே-202117:44:07 IST Report Abuse
KALAIVANI K சத்திரத்தை இழுத்து மூடனும் வேறஒண்ணும் வேண்டாம்
Rate this:
Cancel
Rathinasami Kittapa - San Antonio,யூ.எஸ்.ஏ
02-மே-202111:56:35 IST Report Abuse
Rathinasami Kittapa சொந்த அறிவுதான் இல்லை என்றாலும் சொல் படி நடக்க வேண்டாமா 🤔 கல்யாணத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டிருந்தால் யார் மீது குறை சொல்வார்கள் 🤔 எனவே, அவர் எடுத்த நடவடிக்கை மிகச் சரியான தே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X