தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்

Updated : ஏப் 28, 2021 | Added : ஏப் 28, 2021 | கருத்துகள் (2)
Share
சென்னை: தமிழக உள் மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக நிலவிய அதிகபட்ச வெப்பநிலை அடுத்து வரும் 3 நாட்களுக்கு 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழக கடலோர பகுதியை ஒட்டிய வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும் மற்றும்
தமிழகம், வெப்பநிலை, சென்னை வானிலை மையம், புவியரசன், மழை,

சென்னை: தமிழக உள் மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக நிலவிய அதிகபட்ச வெப்பநிலை அடுத்து வரும் 3 நாட்களுக்கு 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழக கடலோர பகுதியை ஒட்டிய வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும் மற்றும் கர்நாடகாவில் இருந்து தெற்கு கேரளா வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும்,

இன்று(ஏப்.,28) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.


latest tamil news




ஏப்., 29 முதல் மே 2 வரை, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

தமிழக உள் மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக நிலவிய அதிகபட்ச வெப்பநிலை அடுத்து வரும் 3 நாட்களுக்கு 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியதை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில், ஆண்டிப்பட்டி, சிவலோகம் பகுதிகளில் தலா 2 செ.மீ., கோவில்பட்டி, கள்ளிக்குடி, ஆலங்குடி, வேதாரண்யம் பகுதிகளில் தலா ஒரு செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X