இந்திய மக்களை முட்டாளாக கருதும் மத்திய அரசு: சிதம்பரம் விமர்சனம்

Updated : ஏப் 28, 2021 | Added : ஏப் 28, 2021
Share
Advertisement
புதுடில்லி: நாட்டில் ஆக்சிஜன், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு கூறி வருவதாக கூறிய காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம், தொடர்ந்து இந்திய மக்களை முட்டாளாக கருதும் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழ வேண்டும் என விமர்சித்துள்ளார்.இந்தியாவில் கொரோனா 2வது அலை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல
Chidambaram, People, Fool, Centre, Revolt, Appalled, Shortage, Oxygen, Vaccine, Congress, காங்கிரஸ், சிதம்பரம், மத்திய அரசு, மக்கள், முட்டாள், ஆக்சிஜன், தடுப்பூசி, பற்றாக்குறை, தட்டுப்பாடு

புதுடில்லி: நாட்டில் ஆக்சிஜன், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு கூறி வருவதாக கூறிய காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம், தொடர்ந்து இந்திய மக்களை முட்டாளாக கருதும் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழ வேண்டும் என விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா 2வது அலை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. அதேபோல், தடுப்பூசி பற்றாக்குறையும் இருப்பதாக பல மாநில முதல்வர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், ‛ரெம்டெசிவிர் மருந்து, கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் போன்றவற்றிற்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை' எனக் கூறியிருந்தார். இதனை காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.,யுமான ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.


latest tamil news


இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: நாட்டில் ஆக்சிஜன், தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதும், உத்தர பிரதேசத்தில் ஆக்சிஜன், தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என அம்மாநில முதல்வர் கூறியதும் திகைப்பாக உள்ளது. இது தொடர்பாக அனைத்து தொலைக்காட்சிகள் போலியான காட்சிகளை ஒளிபரப்புகின்றனவா? அனைத்து பத்திரிகைகளும் தவறான செய்திகளை வெளியிடுகின்றனவா? அனைத்து மருத்துவர்களும் பொய் சொல்கின்றனரா? நோயாளிகளின் குடும்பத்தினர் பொய் சொல்கின்றனரா? இதுகுறித்து வெளியான வீடியோக்கள், படங்கள் போலியானதா? தொடர்ந்து, இந்திய மக்களை முட்டாளாக கருதும் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழ வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X