பொது செய்தி

இந்தியா

சென்னைக்கு செம 'விசில்' அடிங்க; அசத்தலான அஞ்சாவது வெற்றி

Updated : ஏப் 29, 2021 | Added : ஏப் 28, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி: ருதுராஜ், டுபிளசியின் அசத்தலான அரைசதம் கைகொடுக்க, ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது. நேற்று நடந்த லீக் போட்டியில் ஐதராபாத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் நடக்கிறது. நேற்று டில்லியில் நடந்த லீக் போட்டியில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஐதராபாத் அணி கேப்டன்
IPL 2021, CSK vs SRH, Chennai Super Kings, ஐபிஎல், சென்னை_அணி,ருதுராஜ், டுபிளசி, அரைசதம், வெற்றி, ஐதராபாத், வார்னர்,லுங்கிடி

புதுடில்லி: ருதுராஜ், டுபிளசியின் அசத்தலான அரைசதம் கைகொடுக்க, ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது. நேற்று நடந்த லீக் போட்டியில் ஐதராபாத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் நடக்கிறது. நேற்று டில்லியில் நடந்த லீக் போட்டியில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வார்னர், பேட்டிங் தேர்வு செய்தார். சென்னை அணியில் பிராவோ, இம்ரான் தாகிர் நீக்கப்பட்டு லுங்கிடி, மொயீன் அலி சேர்க்கப்பட்டனர். டில்லி அணியில் அபிஷேக் சர்மா, விராத்துக்குப் பதில் சந்தீப் சர்மா, மணிஷ் பாண்டே இடம் பெற்றனர்.


latest tamil newsலுங்கிடி நம்பிக்கை


ஐதராபாத் அணிக்கு பேர்ஸ்டோவ் (7), வார்னர் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. மணிஷ் பாண்டே, 35 பந்தில் அரைசதம் அடித்தார். வார்னர் தன்பங்கிற்கு அரைசதம் எட்டினார். போட்டியின் 18வது ஓவரை வீசிய லுங்கிடி, சென்னை ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார்.முதல் பந்தில் வார்னர் (57), 5 வது பந்தில் மணிஷ் பாண்டேவை (61) அவுட்டாக்கினார். ஷர்துல் தாகூர் வீசிய 19வது ஓவரில், 3 பவுண்டரி, 1 சிக்சர் என 20 ரன்கள் எடுத்தார் வில்லியம்சன். ஐதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 171 ரன்கள் குவித்தது. வில்லியம்சன் (26), கேதர் ஜாதவ் (12) அவுட்டாகாமல் இருந்தனர்.


latest tamil newsருதுராஜ் அபாரம்


கடின இலக்கைத் துரத்திய சென்னை அணிக்கு 'சீனியர்' டுபிளசி, 'ஜூனியர்' ருதுராஜ் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. சுசித் வீசிய 9வது ஓவரில் ருதுராஜ் ஒரு பவுண்டரி, டுபிளசி ஒரு பவுண்டரி, சிக்சர் அடிக்க 17 ரன்கள் கிடைத்தன. இருவரும் இணைந்து முதன் முறையாக, தொடர்ந்து மூன்று போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்னுக்கும் மேல் சேர்த்தனர். இருவரும் அரைசதம் விளாசினர். முதல் விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்த போது, ருதுராஜ் (75), ரஷித் சுழலில் போல்டானார்.


ரெய்னா '500'


மொயீன் அலி 15 ரன் எடுக்க, டுபிளசி 56 ரன்னுக்கு அவுட்டானார். கடைசி நேரத்தில் ரெய்னா, ஐடேஜா இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றனர். ரெய்னா, ஐ.பி.எல்., அரங்கில் 500 வது சிக்சர் அடித்தார். சென்னை அணி 18.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜடேஜா (7), ரெய்னா (17) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - DC,யூ.எஸ்.ஏ
30-ஏப்-202104:12:54 IST Report Abuse
Tamilan ஒரு தமிழர் கூட இல்லாத CSK அணிக்கு என் ஆதரவு இல்லை, நான் இரண்டு தமிழர்கள் உள்ள Punjab Kings ஆதரவாளர்.
Rate this:
Cancel
sathish - melbourne,ஆஸ்திரேலியா
29-ஏப்-202113:25:29 IST Report Abuse
sathish ஏனய்யா, உங்களுக்கு அறிவு என்பதே இல்லையா? கோரனாவால் அவனவன் செத்து கொண்டு இருக்கான், இவனுக்கு விசில் அடிங்கவா, முதலில் இந்த கேலிக்கூத்தை நிறுத்துங்கள் ,,
Rate this:
Cancel
J R Ravikumar - Madurai,இந்தியா
29-ஏப்-202112:20:02 IST Report Abuse
J R Ravikumar டில்லி அணியில் அபிஷேக் சர்மா, விராத்துக்குப் பதில் சந்தீப் சர்மா, மணிஷ் பாண்டே இடம் பெற்றனர். டெல்லி அணி கிடையாது. அது ஹைதராபாத் அணி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X