புதுடில்லி : கொரோனா நோயாளிகளுக்கு உதவ பா.ஜ. இளைஞரணி சார்பில் 'ஹெல்ப்லைன்' எனப்படும் தொலைபேசி வசதியை கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று துவக்கி வைத்தார்.
நாட்டின் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பா.ஜ. இளைஞர் அணி சார்பில் ஹெல்ப்லைன் வசதி துவக்கப்பட்டுள்ளது. '080 6817 3286' என்றஎண்ணுடைய இந்த வசதியை கட்சியின் தேசிய தலைவர் நட்டா 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக நேற்று துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: நாட்டின் எந்தப் பகுதியில் வசிப்பவர்களும் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை பெற தேவையான உதவிகளை கோரலாம். அவர்களுக்கு பா.ஜ. தொண்டர்கள் அந்த உதவிகளை செய்து தருவர்.அத்துடன் இந்த எண்ணை தொடர்பு கொண்டு டாக்டர்களிடம் ஆலோசனை பெறலாம். இதற்காக இந்த இணைப்பில் 350க்கும் அதிகமான டாக்டர்களின் மொபைல் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான உறுதியான தலைமையால் கொரோனா இரண்டாவது அலையிலும் நாடு வெற்றி பெறும். தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை பா.ஜ.வினர் செய்து தர வேண்டும்.இவ்வாறு நட்டா பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE